உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/138⁠

விக்கிமூலம் இலிருந்து


138அப்பா! தங்கம்போல் கட்டியாக இல்லாமல் தண்ணீர்போல் திரவமாக இருக்கும் உலோகம் உண்டா?

ஆம், அம்மா! உண்டு. அத்தகைய உலோகம் ஒன்று தான் இருக்கிறது அதைப் பாதரசம் என்று கூறுவார்கள்

அது பார்ப்பதற்கு வெள்ளிபோல் பளபளவென்றிருக்கும். அத்துடன் அதைத் தரையில் விட்டால் சிறு சிறு உருண்டைகளாக உருண்டோடும். அதனால் அது உயிருள்ளதுபோல் தோன்றும். இந்தக் காரணங்களால் அதை "உயிருள்ள வெள்ளி" என்று ஆங்கிலேயர் கூறுவார்கள்.

அம்மா! நீ உஷ்ண நிலையை அளக்கும் தெர்மா மீட்டனப் பார்த்திருக்கிறாய் அல்லவா? அதினுள் வெள்ளிக் கம்பிபோல் ஒன்று ஏறவும் இறங்கவும் செய்கிறதே, அது என்ன தெரியுமா, அது பாதரசம்.

அம்மா! தங்கம் வெள்ளிபோன்ற உலோகங்களை அதிகக் சூடாக்கி உருக்கினால் அவையும் திரவம் ஆகவே செய்யும். ஆனால் பாதரசமானது சூடாக்காமலே திரவமாக இருக்கிறது.

தெர்மாமீட்டருக்கு இதை உபயோகிப்பது போலவே முசும் பார்க்கும் கண்ணாடியிலும் இதைத்தான் பின்னால் பூசுகிறார்கள். அதனால்தான் அந்தக் கண்ணாடி முகம் பார்க்க உதவுகிறது.

நீராவியைக்கொண்டு யந்திரங்களை ஓட்டுவதுபோல் பாதரச ஆவியைக்கொண்டும் யந்திரங்களை ஓட்டுவதற்குரிய வழியை டாச்டர் எம்மெட் என்பவர் கண்டு பிடித்திருக்கிறார். அந்தப் பாதரச யந்திரம் இரண்டு மடங்கு வேலை செய்யுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/138⁠&oldid=1538362" இலிருந்து மீள்விக்கப்பட்டது