தந்தையும் மகளும்/14

விக்கிமூலம் இலிருந்து


14 அப்பா! சந்திரன் பகல் நேரத்தில் தெரிந்தும் நிலவு வெளிச்சம் இல்லையே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! சந்திரன், சூரியன் இருக்கும் போது பிரகாசமில்லாமலும், சூரியன் மறைந்ததும் பிரகாசமாகவும் இருப்பது உண்மைதான் அப்படிச் சந்திரன் இரவில் பிரகாசிக்கும போது அதிலிருந்து வரும் ஒளியை நிலவு என்று கூறுகிறோம். அது பகலில் பிரகாசமாய்த் தெரியாததால் பகலில் நிலவு வெளிச்சம் உண்டாகவில்லை என்று கூறுகிறோம். ஆனால், அது தவறு அம்மா!

அம்மா! சந்திரனுக்குச் சுயமாக வெளிச்சம் கிடையாது. சூரிய வெளிச்சம் தான் சந்திரன் மீது விழுந்து நமக்கு நிலவு வெளிச்சமாக வந்து சேருகிறது. ஆனால் சூரிய வெளிச்சம் சந்திரன் மீது பகலிலும் விழுகிறது. இரவிலும் விழுகிறது. அதனால் நிலவு வெளிச்சம் பகலிலும் வரவே செய்கிறது. அப்படியானால் அது நமக்குப் பகலில் தெரியாத காரணம் என்ன?

அம்மா! சூரியன் சந்திரனைவிடப் பல்லாயிரம் மடங்கு பெரியதல்லவா? அதனால் அதிலிருந்து நமக்கு நேராக வரும் ஒளி சந்திரன் மீது பட்டுவரும் ஒளியைத் தனியாகத் தெரிய வொட்டாமல் செய்து விடுகிறது. அத்துடன் அவ்வாறு நேராக வரும் ஒளி அதிகச் சூடாக இருப்பதால் பகலில் வரும் நிலவு ஒளி குளிர்ந்ததாகவும் தெரிவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/14&oldid=1538069" இலிருந்து மீள்விக்கப்பட்டது