தந்தையும் மகளும்/15

விக்கிமூலம் இலிருந்து


15அப்பா! இரவில் சில நாட்களில் சந்திரனைச் சுற்றி ஒரு அழகான ஒளி வட்டம் தெரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மேகங்கள் காணப்படும் உயரத்தை வைத்து வான நிலை நிபுணர்கள் அவைகளைக் குவியல் மேகங்கள் தொடுவான மேகங்கள். சுருள் மேகங்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். அவற்றுள் குவியல் மேகங்கள் ஒரு மைல் தூரத்திலும், தொடுவான மேகங்கள் அரை மைல் தூரத்திலும், சுருள் மேகங்கள் ஐந்தாறு மைல் தூரத்திலும் இருக்கும்.

சாதாரணமாக மேகங்கள் நீர்த்துளிகளின் கூட்டங்களே என்பதை அறிவாய். ஆனால் சுருள் மேகங்கள் வெறும் நீர்த்துளிகளால் ஆனவை அல்ல. அவை அதிக உயரத்தில் இருப்பதால் அங்கேயுள்ள அதிகக் குளிரால் நீர்த்துளிகள் சிறுசிறு பனிக்கட்டிப் படிகங்களாக ஆகி விடுகின்றன. அதனால் அந்தச் சுருள் மேகங்கள் அத்தகைய பனிக்கட்டிப் படிகக் கூட்டங்களே யாகும். சந்திரனுடைய ஒளி அவற்றினூடே வரும்போது அழகான ஒளி வட்டங்கள் சந்திரனைச் சுற்றி இருப்பதாக நம்முடைய கண்ணுக்குப் புலனாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/15&oldid=1538073" இலிருந்து மீள்விக்கப்பட்டது