உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/155

விக்கிமூலம் இலிருந்து


155அப்பா! உயிருள்ளவை இறந்து போகும் என்று கூறுகிறார்களே, அப்படியானால் சாகாத பிராணி கிடையாதா?

ஆம், அம்மா! உயிருள்ளவைகள் எல்லாம் பிறக்கும் வளரும், குஞ்சோ குட்டியோ போடும், பிறகு இறந்து போகும். இதைத்தான் நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம்.

இப்படி பிராணிகள் இறந்து போகின்றனவே அவைகளுக்கு மரணம் எப்படி உண்டாகிறது? சில நோயால் இறக்கின்றன. சிலவற்றைப் பிறர் கொன்றுவிடுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு விதங்களிலும் இறப்பது இயற்கை மரணமன்று. அட்படியானால் இயற்கையானயான மரணம் எது?

அம்மா? கடிகாத்துக்குச் சாவி கொடுக்கிறோம். அது ஓடுகிறது, மணி காட்டுகிறது. பிறகு சாவி முழுவதும் தீர்ந்தவுடன் நின்றுவிடுகிறது. அதுபோல் பிராணிகள் வாழ்ந்து தீர்ந்து இறப்பதுதான் இயற்கையான மரணம்

அந்த மரணம் எல்லாப் பிராணிகளுக்கும் நேர்வதாகவே நமக்குத் தெரிகிறது. ஆனால் ஒரே ஒரு பிராணி இருக்கிறது. அதற்கு மட்டும் உண்டாவதில்லை.

அம்மா! நம்முடைய உடம்பு கோடிக் கணக்கான ஸெல்கள் என்னும் உயிரணுக்களால் ஆனது என்று கேட்டிருக்கிறாய் அல்லவா! ஆனால் ஒரே ஒரு உயிரணுவுள்ள பிராணிகளும் உள. அவற்றுள் பாக்டீரியா என்று கூறும் பிராணி கண்ணுக்குத் தெரியாத அளவு நுண்ணியது. ஒரு அங்குலத்தை 25 ஆயிரம் பங்கு வைத்தால் அதில் ஒரு பங்கு நீளம் தான் அது. அந்தப்பிராணி ஒரே நாளில் சுமார் 2 கோடியாகப் பெருகக்கூடியது.

அதற்கு இயற்கை மரணம் என்பது கிடையாது. அது நோய் வந்து இறக்க வேண்டும். அல்லது கொல்லப்படவேண்டும். அது தானாகச் சாவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/155&oldid=1538430" இலிருந்து மீள்விக்கப்பட்டது