உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/156

விக்கிமூலம் இலிருந்து


156அப்பா! பிராண வாயு இல்லாமல் உயிர் வாழும் பிராணி உண்டா?

அம்மா! உலகத்திலுள்ள சகல பிராணிகளும் பிராண வாயுவைச் சுவாசித்தே உயிர் வாழ்கின்றன. அதனாலேயே ஆக்ஸிஜென் என்று ஆங்கிலத்தில் கூறும் அந்த வாயுவுக்குப் பிராண வாயு என்ற பெயர் வழங்கி வருகிறது.

ஆனால் நம்முடைய உடல் கோடிக் கணக்கான ஸெல்கள் என்னும் உயிரணுக்களால் ஆனது போலின்றி ஒரே ஒரு உயிரணுவால் ஆன பிராணிகளும் உள. அவை கண்ணுக்குப் புலப்படா. அவை ஆயிரம் சேர்ந்தால் தான் குண்டூசி முனை மாதிரி தெரியும். அவற்றைப் பாக்டீரியா என்று கூறுவார்கள்.

அவற்றுள் ஒரு வகைப்பிராணிக்கு உயிர் வாழ்வதற்குப் பிராண வாயு தேவை இல்லை. அம்மா! தேவையில்லை என்பது மட்டுமன்று, பிராண வாயு பட்டால் இறந்து போகவும் செய்யும். சில சமயங்களில் வெண்ணெய் கெட்டுப்போய் நாறும். அந்த நாற்றத்தை உண்டு பண்ணும் பாக்டீரியாதான் பிராண வாயு இல்லாமல் உயிருடன் இருக்கக் கூடிய பிராணியாகும்.

பாக்டீரியாக்கள் ஒரே நாளில் சுமார் கோடியாகப் பெருகக்கூடியனவா யிருப்பதாலும், இது பிராணவாயு இல்லாமல் ஜீவிக்கக்கூயதாக இருப்பதாலும் இந்த பாக்டீரியா புண்களில் சேர்ந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/156&oldid=1538431" இலிருந்து மீள்விக்கப்பட்டது