தந்தையும் மகளும்/161

விக்கிமூலம் இலிருந்து


161அப்பா! எந்த மிருகமும் முட்டையிடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அப்படித்தாள் தோன்றுகிறது. ஆதியில் எல்லா மிருகங்களும் முட்டையே இட்டு வந்ததாகவும் முட்டையிடுவதால் பலவிதமான இடையூறுகள் ஏற்படுவதினால் அவை முட்டையிடுவதை விட்டு விட்டு குட்டியோட ஆரம்பித்தன என்பதாகவும் அறிஞர்கள கூறுகிறார்கள்.


அப்படி மிருகங்கள் முட்டையிட்டு வந்ததற்கு அடையாளமாக இன்றைக்கும் முட்டையிடும் மிருகங்கள் இரண்டு ஆஸ்திரேலிய நாட்டில் காணப்படுகின்றன. அவற்றை ஆங்சிலத்தில் பிளாட்டிப்பஸ் என்றும் எக்கிட்னா என்றும் கூறுவார்கள்.

பிளாட்டிப்பஸ் என்னும் மிருகம் ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகள் இடும். அவற்றைப் பறவை போலவே அடைகாத்து குஞ்சு பொரிக்கச் செய்யும். அப்படி முட்டையிலிருந்து வெளி வரும் குட்டிகள் தாயிடம் பால் குடித்து வளரும்.

எக்கிட்னா என்னும் மிருகம் ஒரு முட்டைதான் இடும், அதை உடனே எடுத்துத் தன்னிடமுள்ள ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்ளும். பிளாட்டிப்பஸ் மாதிரி அடைகாப்பதில்லை அந்தப் பையின் சூட்டிலேயே அடைகாத்தமாதிரி முட்டையிலிருந்து வெளிவரும். அதுதாயிடம் பால் குடித்து வளரும். குட்டியானது பால் குடித்ததும் தாய் அதை மறுபடியும் எடுத்துப் பையில் போட்டு தைத்துக் கொள்ளும். இவ்விதம் குட்டி தாயின் பையிலிருந்து வளர்ந்து வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/161&oldid=1538469" இலிருந்து மீள்விக்கப்பட்டது