தந்தையும் மகளும்/174

விக்கிமூலம் இலிருந்து


174அப்பா! வேட்டைக்குப் போகிறவர்கள் எப்பொழுதும் நாய்களையே கொண்டுபோகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அவர்கள் நாய்களைத்தான் காட்டுக்குக் கொண்டு போவார்கள். ஆனால் எல்லாவித நாயையும் கொண்டுயோக மாட்டார்கள். வேட்டை நாய் என்ற ஜாதி நாய்கள் தான் வேட்டைக்கு உகந்தன.

நாய்களை உபயோகிப்பதன் காரணம் யாது? இதர மிருகங்கள் எல்லாவற்றையும் விட நாய்க்குத்தான் வாசனை அறியும் சக்தி அதிகம். ஒருவர் நடந்து போன தடம் ஆயிரம் பேர் போய் அழிந்துவிட்ட போதிலும் அவருடைய வாசனையை அறிந்த நாய் அதை அதிசீக்கிரம் கண்டுபிடித்துவிடும். அதன் காரணம் அதன் மூளையில் பெரும்பாகம் வாசனை உணர்ச்சியைக் காட்டும் வேலையையே செய்து வருவதுதான்.

நாய்க்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகமாக இருப்பது போலவே ஒலிகளைக் கேட்கும் சக்தியும் அதிகம். சாதாரணமாக நமக்குக் கேட்காத சப்தங்கள் எல்லாம் நாய்க்குக் கேட்டுவிடும்.

வேட்டையாடும் பொழுது காட்டிலுள்ள மிருகங்களை மோப்பம் பிடித்தும் அவைகளின் குரலைச் செவிமடுத்தும் வேட்டைக்காரர்களை அம்மிருகங்களுள்ள இடத்துக்கு இட்டுச் செல்வதற்காகவே நாய்களை வேட்டைக்குக் கொண்டு போகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/174&oldid=1538629" இலிருந்து மீள்விக்கப்பட்டது