தந்தையும் மகளும்/18

விக்கிமூலம் இலிருந்து


18அப்பா! பூமி எந்நேரமும் ஓடிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! பூமி எந்நேரமும்! ஓடிக் கொண்டுதானிருக்கிறது. அதுபோல் கிரகங்கள் நட்சத்திரங்கள் எல்லாம் எப்பொழுதும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அதற்குக் காரணத்தைக் கண்டு கூறியவர் ஸர் ஐஸக் நியூட்டன் என்னும் ஆங்கில விஞ்ஞான சிரோன்மணி. அவர் அசைவது சம்பந்தமாக மூன்று விதிகளைக் கூறினார்.

அவற்றுள் முதல் விதி—

"எந்தப் பொருளையும் அசையாதபடி போட்டு வைத்தால் எவ்வளவு காலமானாலும் அது அசையாமல் போட்ட படியே கிடக்கும். அதை அசைத்து ஒட்டி விட்டால் எவ்வளவு காலமானாலும் வேறு பொருள் ஏதேனும் தடுக்காத வரைக்கிம் அது, ஓடிக் கொண்டே இருக்கும்” என்பதாகும். இந்த விதியை அனுசரித்துத்தான் பூமி முதலிய கோளங்களின் ஓட்டம் நடைபெற்று வருகிறது.

அப்படியானால் அந்தக் கோளங்களை யார் ஒட்டி விட்டார்கள் என்று கேட்டால் அது யாருக்கும் தெரியாது.ஆனால் அவை ஒட ஆரம்பித்து விட்டபடியால் அவை ஓடிக்கொண்டேதான் இருக்கும். அவற்றைத் தடுத்து நிறுத்த எந்த விதமான பொருளுமில்லை.

அம்மா! நீயும் அண்ணனும் பம்பரம் விடுகிறீர்கள். அவை விரைவாகச் சுழல்கின்றன.ஆனால் கிறிது நேரம் ல்ழன்று விட்டுச் சுழலாமல் கீழே விழுந்து விடுகின்றன.அதற்குக் காரணம் காற்றுத்தான். காற்று மட்டும் இல்லாதிருந்தால் நீங்கள் ஓட்டிய பம்பரமும் சதாகாலமும் ஒடிக் கொண்டேதான் இருக்கும். வானத்தில்நட்சத்திரங்கள் முதலியவை உள்ள இடத்தில் காற்றுக் கிடையாது. அதனால்தான் அவை ஒடிக் கொண்டே இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/18&oldid=1538081" இலிருந்து மீள்விக்கப்பட்டது