உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/180

விக்கிமூலம் இலிருந்து


180அப்பா! யானை எப்பொழுதும் நின்று கொண்டிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ கோவிலுக்குப் போகும் சமயமெல்லாம் அங்குள்ள யானை நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறாய். அதனால் அது எந்த நேரத்திலும் கீழே படுக்காமல்

நின்று கொண்டே தான் இருக்கும் என்று எண்ணுகிறாய் ஆனால் யானை எப்பொழுதும் நின்று கொண்டே இருப்பதில்லை. அது அடிக்கடி படுப்பதும் உண்டு.

ஆனால் ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள யானைகள் ஏதேனும் நோயோ காயமோ ஏற்பட்டால் தான் கீழே படுக்குமாம். அதற்குக் காரணம் அதன் கால்கள் சிறிதுகூட வளையாமல் பெரிய தூண்கள் மாதிரி இருப்பதுவே என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன் கால்கள் அந்த மாதிரியிருப்பதால் பெரிய தூண்கள் கட்டடத்தைத் தாங்குவது போல யானையின் கால்கள் அதன் பிருமாண்டமான கனம் முழுவதையும் எளிதாகத்தாங்க முடிகிறது என்று சொல்லுகிறார்கள். அதனால் தான் எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தாலும் ஆப்பிரிக்கா யானைக்குக் கால் கடுப்பதில்லையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/180&oldid=1538638" இலிருந்து மீள்விக்கப்பட்டது