தந்தையும் மகளும்/181

விக்கிமூலம் இலிருந்து


181அப்பா! கீரிப்பிள்ளை இருக்குமிடத்தில் பாம்பு வராது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கீரிப்பிள்ளை உள்ள இடத்தில் பாம்பு வராது என்பதில்லை. பாம்பு வரும், ஆனால் கீரிப்பிள்ளை அதைக் கண்டால் சிறிதுகூட அஞ்சுவதில்லை. அதைக் கண்டதுமே அதற்குக் கோபாவேசம் உண்டாய் விடும். அது என்ன சுாரணமோ யாருக்கும் தெரியாது. அதிலும் அது விஷப் பாம்புகளிலெல்லாம் விஷப்பாம்பாகவுள்ள

நல்ல பாம்பைக் கண்டு விட்டால் அதற்கு வரும்கோபத்தை பார்க்கவேணும். அதன் உடல் சிலிர்த்துவிடும்.பாம்பின் அருகே மெதுவாகச் சென்று அதன்மீது பாய்வதுபோல் பாசாங்கு செய்யும். பாம்பு ஏமாந்து போய் அதைப் பிடிக்கத்தாவும். பாம்புக்கு மின்னல்வேகமுண்டு. ஆனால் அதைவிட வேகமுடையது கீரிப்பிள்ளை.பாம்பு கடிக்க வரும்பொழுது அது விலகிக்கொள்ளும். இறுதியில் பாம்புக்கு ஒன்றும் விளங்காது பிரமித்துப் போய் நின்று விடும். அந்தச் சமயம் பார்த்துக் கீரிப்பிள்ளை பாம்பின் தலையைப் பிடித்து கழுத்தை முறித்துவிடும். அப்படி முறித்து விடும் தலையை அது தின்று விடுவதுமுண்டு. அந்தத் தலையில் விஷப்பைகள் இருந்தாலும் அதிலுள்ள விஷம் கீரிப்பிள்ளையை ஒன்றும் செய்யாது. ஆனால் பாம்பு மட்டும் அதைக் கடித்து விடட்டும், அப்பொழுது பாம்பின் விஷம் அதைக்கொன்று விடவே செய்யும்.

கீரிப்பிள்ளை ஆப்பிரிக்காவிலும் ஆசியா கண்டத்தின் தென் பாகத்திலும் காணப்படும் சிறு மிருகம். அது இந்தியாவில் ஏராளமாக உண்டு. அது பாம்பைக் கண்டு சீறும் கோபமுடைய பிராணியாயிருந்தாலும் அதை எளிதாகப் பழக்கி விடலாம். அநேக வீடுகளில் அதை நாய் போலும் பூனை போலும் வளர்ப்பதுண்டு. அது சுமார் ஒரு முள நீளமிருக்கும். அதன் நிறம் மஞ்சள் கலந்த சாம்பலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/181&oldid=1538639" இலிருந்து மீள்விக்கப்பட்டது