தந்தையும் மகளும்/182

விக்கிமூலம் இலிருந்து


182அப்பா! நம்மைப் போல் நிமிர்ந்து நிற்கக்கூடிய மிருகம் உண்டா?

அம்மா! குதிரை, மாடு போன்ற மிருகங்கள் சில சமயங்களில் பின் கால்களை ஊன்றி முன் கால்களைத் தூக்கி நட்டமாக நிற்பதுண்டு. ஆனால் அவை எல்லாம் மிகவும் சிறிது நேரமே அவ்வாறு நிற்க முடியும். ஆனால் ஆஸ்திரேலியாவில் காணப்படும் கங்காரு என்னும் மிருகம் புல்மேயும்
பொழுதுதான் மற்ற மிருகங்களைப் போல் நான்கு கால்களில் நிற்கும். மற்றநேரங்களில் எல்லாம் பின் கால்களையும் வாலையும் ஊன்றி நிமிர்ந்தே நிற்கும். அதற்குத் தக்கதாக அதன் பின் கால்களும் வாலும், அதிக பலமான அதன் தசைகள் உடையனவாக அமைந்திருக்கின்றன. அதன் உடல் ஆறு அடி நீளமும் வால் நாலடி நீளமும் இருக்கும் அப்படி நிற்கும் போது சில கங்காரு ஏழு அடி உயரம் கூட இருக்கும்.

இவ்வளவு பெரிய மிருகமே ஆயினும் அது ஒரு அங்குல நீளமாகவே பிறக்கும். தாயின் வயிற்றினடியில் உள்ள ஒரு பையிலேயே நான்கு மாதங்கள் தங்கியிருந்து வளரும். அந்த நான்கு மாதமும் அதன் வாய் தாயின் மடிக் காம்பைக் கவ்விக் கொண்டிருக்கும. ஆனால் கன்றுக் குட்டி பசுவிடம் பாலை உறிஞ்சிக் குடிப்பது போலக் குடிக்காது பாலே அதன் வாயினுள் பீச்சுவதற்கான தசைகள் தாயிடம் உள இவ்வாறு நான்கு மாதங்கள் வளர்ந்த பின் வெளியே வந்து புல்மேயும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/182&oldid=1538640" இலிருந்து மீள்விக்கப்பட்டது