தந்தையும் மகளும்/194

விக்கிமூலம் இலிருந்து


194அப்பா! ஓடைக்கரையில் காணும் செடிகளுடைய இலைகள் அகலமாக இல்லையே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! செடிகள் உயிரோடிருப்பதற்குத் தண்ணீரும் சூரிய ஒளியும் தேவை என்பதை அறிவாய். அவை சூரிய ஒளியை இலைகள் மூலமாகவும் தண்ணீரை வேர்கள் இலைகள் ஆகிய இரண்டின் மூலமாகவும் பெறுகின்றன. வேர்கள் தரையிலுள்ள நீரை உறிஞ்சுகின்றன. இலைகள் காற்றிலுள்ள நீரைக் கிரகிக்கின்றன. இதுதான் சாதாரணமாக நடக்கிற காரியம்.

ஆனால் நீர்நிலையின் அருகில் உண்டாகும் செடிகளுக்குப் போதுமான நீர் வேர் மூலமாகவே கிடைத்துவிடுகின்றது அதனால் அவற்றின் இலைகள் காற்றிலிருந்து நீரைக் கிரகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சூரிய ஒளியை மட்டும் கிரகித்தால் போதும். புற்கள் தங்கள் நீண்ட குறுகிய இலைகள் மூலம் சூரிய ஒளியைக் கிரகித்துக் கொள்வது போல் இந்தச் செடிகளும் தங்கள் குறுகிய இலைகள் மூலம் கிரகித்துக் கொள்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/194&oldid=1538662" இலிருந்து மீள்விக்கப்பட்டது