உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/195

விக்கிமூலம் இலிருந்து


195அப்பா! வாகை மரம் புளிய மரம் இவற்றின் இலைகள் எல்லாம் சிறு சிறு இலைகளாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ கூறும் வாகை மரத்தின் இலைகளும் புளிய மரத்தின் இலைகளும் தான் மிகக் சிறியனவாக இருப்பதாக எண்ணாதே. நம் வீட்டுக் கொல்லையில் நிற்கும் முருங்கை மரத்தையும் அகத்தி மரத்தையும் பார். அவற்றின் இலைகளும் சிறியனவே. இந்த மரங்கள் எல்லாம் அதிகமாகக் குழை அடர்ந்தவை, அப்படிக் குழை அடர்ந்த மரங்களில் இலைகள் எல்லாம் சிறியனவாகவே இருக்கும். அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மரங்கள் எல்லாம் மற்ற உயிர்களைப்போலவே உண்ணவும் சுவாசிக்கவும் வேண்டும். அந்த இரண்டு வேலைகளையும் மரத்திற்குச் செய்து கொடுப்பவை அதன் இலைகளேயாகும். ஆனால் சூரிய ஒளி பட்டால்தான் அவைகள் அந்த இரண்டு வேலைகளையும் செய்ய முடியும். அதற்காகத் குழை அடர்ந்த மரங்களிலுள்ள இலைகள் மிகச் சிறியனவாக உள். அப்பொழுதுதான் சூரிய ஒளியானது அவற்றுனூடே சென்று அடியிலுள்ள இலைகளின் மீதும் விழுந்து அவற்றை உண்ணும்படியும் சுவாசிக்கும்படியும் செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/195&oldid=1538665" இலிருந்து மீள்விக்கப்பட்டது