உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/196

விக்கிமூலம் இலிருந்து


196அப்பா! சப்பாத்திக்கள்ளிச் செடியில் இலைகள் இல்லையே,அதற்குக் காரணம் என்ன?

அம்மா! செடிகளில் இலைகள் உண்டாவதற்குக் காரணம் என்ன தெரியுமா? இலைகள் தான் காற்றிலுள்ள கரியமில வாயுவைக் கிரகித்து அதனுடன் தண்ணீரைச் சேர்த்து சர்க்கரைச் கத்தாகிய மாப்பண்டத்த உண்டாக்குகின்றன. அத்துடன் இலைகள் வழியாகவே செடியிலுள்ள தண்ணீர் ஆவியாக மாறி வெளியே போகின்றது.

சப்பாத்திக் கள்ளிச் செடிகள் அநேகமாக தண்ணீர் குறைவான வறண்ட பூமியிலேயே உண்டாவதால் அவைகளுக்கு மற்றச் செடிகளுக்கு இருப்பதுபோல இலைகள் இருந்தால் இலைகள் மூலம் அதிகமான தண்ணீர் வெளியே போய் செடியைப் பட்டுப்போகச் செய்துவிடும். அதனால் தான் சப்பாத்திச் செடியில் இலைகள் இல்லை. இலைகள் செய்யும் வேலையைச் சப்பாத்தித் தண்டுகளே செய்து வருகின்றன. அவை பருமனாக இருந்து கிடைக்கக் கூடிய தண்ணீர் முழுவதையும் சேமித்து வைத்துக்கொள்கின்றன. அதுபோல் அவைகளே மாப்பண்டமாகிய உணவையும் உண்டாக்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/196&oldid=1538666" இலிருந்து மீள்விக்கப்பட்டது