தந்தையும் மகளும்/197

விக்கிமூலம் இலிருந்து


197அப்பா! வேனிற்காலத்தில் மரங்களில் இலைகள் உதிர்ந்து விடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நம்முடைய உடம்பில் ரத்தம் ஓடுவதற்குத் தண்ணீர் தேவையாயிருப்பது போல மரஞ்செடிகளில் சாறு ஓடுவதற்கும் தண்ணீர் தேவையாகும், நாம் தண்ணீரைக் குடிக்கிறோம். மரஞ் செடிகள் தரையிலுள்ள தண்ணீரை வேர் மூலம் கிரகித்துக் கொள்கின்றன. நாம் குடிக்கும் தண்ணீர் சிறுநீராகவும் வேர்வையாகவும் வெளியே போய் விடுகிறது. அதுபோலவே மரஞ் செடிகள் கிரகிக்கும் தண்ணீரும் இலைகள் மூலமாக ஆவியாக வெளியே போய்விடுகிறது.

வேனிற் காலத்தில் மழை கிடையாது. அதனால் மரஞ்செடிகளுக்குத் தரையில் கிடைக்கக் கூடிய தண்ணீர் குறைவாகவே இருக்கும். அதனால் மரஞ்செடிகள் வேனிற் காலத்தில் சொற்பத் தண்ணீரைக் கொண்டே காலந்தள்ள வேண்டும். அதற்காக நீர் ஆவியாக வெளியே போவதைத் தடுக்க வேண்டியதா யிருக்கிறது. அப்படித் தடுப்பதற்காகத்தான் மரஞ்செடிகள் வேனிற் காலத்தில் இலைகளை உதிர்த்து விடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/197&oldid=1538670" இலிருந்து மீள்விக்கப்பட்டது