தந்தையும் மகளும்/20
Appearance
20அப்பா! அதிகாலையில் அதிகக் குளிராய் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! காலையில் சூரியன் எழுகின்றது. உடனேயேNபூமி சூடாக ஆரம்பிக்கிறது. அது முதல் சூடு சிறிது சிறிதாக ஏறிக்கொண்டே வருகிறது. பூமியானது சூட்டைச் சூரியனிடமிருந்து பெறுவது போலவே பெற்ற
சூட்டைச் சிறிது சிறிதாக வெளியே வீசிக்கொண்டு இருக்கிறது. ஆனால் சூடு வீசுவது, சூடு பெறுவதைவிடக் குறைவாகவே பிற்பகல் இரண்டு மணி வரை நடைபெறுகிறது. அதனால் பகலில் அதிகச் சூடான நேரம் நடுப்பகல் பன்னிரண்டு மணி என்று எண்ணுகிறோம் அதுவன்று. பிற்பகல் இரண்டு மணியேயாகும்.பிற்பகல் இரண்டு மணியிலிருந்து பூமி சூட்டை அதிகமாக வீச ஆரம்பிக்கிறது. அது அதிகாலையில் ஐந்து மணிவரை நடைபெறுகிறது. நேரம் ஆக ஆக அதிகமாக வீசி வருவதால் அதிகாலையில் ஐந்து மணிக்கு அதிகக் குளிராக இருக்கிறது.