தந்தையும் மகளும்/202

விக்கிமூலம் இலிருந்து


202 அப்பா! காய்களைப் பாத்திரங்களில் மூடி வைத்தால் பழுத்துவிடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பழுக்கக் கூடிய பருவத்திலுள்ள காய்கள் எப்படிப் பழுக்கின்றன என்று எண்ணுகிறாய். அவற்றில் எதிலீன் என்னும் ஒரு வகை வாயு உண்டாகிறது; அதுதான் காயிலுள்ள நுண்ணறைகளைக் கிழித்துப் பழுக்கும்படி செய்கிறது அந்த வாயு அதிகமாக உண்டாகுமானால் காய்கள் சீக்கிரமாகப் பழுத்துவிடும். உண்டாகும் வாயு சிறிதளவாக இருந்தாலும் வெளியே போகாமல் தடுக்கப்படுமானால் அது சீக்கிரமாக நுண்ணறைகளைக் கிழித்து பழுக்கச் செய்துவிடும். அவ்விதம் அந்த வாயுவை வெளியே போகாமல் தடுப்பதற்காகத்தான் காய்களைப் பாத்திரங்களில் போட்டு மூடி வைக்கிறார்கள். மேனாடுகளில் காய்களை ஒரு அறையில் அடுக்கி வைத்துக் கொண்டு அதனுள் இந்த வாயுவைச் சிறிது அனுப்புவார்கள். காய்கள் பழுத்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/202&oldid=1538680" இலிருந்து மீள்விக்கப்பட்டது