உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/203

விக்கிமூலம் இலிருந்து


203அப்பா! காய்கறிகளும் பழங்களும் நாளானால் சுவை குறைந்து விடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! புதிய காயகறிகளும் பழங்களும்தான் அதிகச் சுவையாயிருக்கும். செடிகளும் மரங்களும் காற்றிலுள்ள கரியமில வாயுவைக் கிரகித்து அதிலுள்ள கரியை எடுத்துக்கொண்டு பிராணவாயுவை வெளியே விட்டுவிடுகின்றன என்பதை நீ அறிவாய். காய்கறிகளையும் பழங்களையும் நாம் செடிகளிலிருந்து பறித்துவிட்டாலும் அவைகள் கரியமில வாயுவைக் கிரகிப்பதையும் பிராண வாயுவை விடுவதையும் உடனே நிறுத்திவிடுவதில்லை. இவ்விதம் சுவாசம் நடைபெறுவதால் அவற்றிலுள்ள இனிமையும் மணமும் குறைந்துவிடுகின்றன.

இதைத் தடுப்பதற்காகக் காய்கறிகளைச் சிறிதுநேரம் ஆவியில் வைத்தோ அல்லது கொதிக்கும் நீரில் போட்டோ எடுப்பார்கள். பழங்களைச் சர்க்கரைப்பாகில் போட்டு வைக்கலாம், அல்லது சர்க்கரையில் பொதிந்து வைக்கலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/203&oldid=1538681" இலிருந்து மீள்விக்கப்பட்டது