உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/204

விக்கிமூலம் இலிருந்து


204அப்பா! பழங்களும் காய்கறிகளும் அழுகிப்போகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ கூறும் தாவரப் பொருள்கள் மட்டுமல்ல, மாமிசப் பொருள்களும்கூட அழுகிப் போகும். ஆனால் தாவரப் பொருள்களும் மாமிசப் பொருள்களும் தாமாக அழுகிப் போவதில்லை.

அவை அழுகிப் போவதற்குக் காரணம் அவைகளில் பாக்டீரியா உன்னும் நுண்ணுயிர்கள் போய்ச் சேர்வதுதான். அந்த உயிர்கள் பழங்கள் முதலியவைகளை உண்ணுகின்றன. அப்பொழுது உண்டாகும் கழிவுப் பொருள்கள் தான் அழுகும் துர்நாற்றத்தைக் தருகின்றன. துர்நாற்றம் தாவரப் பொருள்கள் அழுகும் போது உண்டாவதைவிட மாமிசப்பொருள்கள் அழுகும் போதுதான் அதிகமாக உண்டாகும்.

அழுகும்படி செய்யும் பாக்டீரியா சூடும் நீரும் உள்ள பொழுதே அதிகமாகப் பல்கிப் பெருகுகின்றன. அதனால் தான் பனிக்கட்டிக் குளிர்ப் பெட்டியில் வைத்திருக்கும் பழங்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. நாம் காய்கறிகளை வற்றல் போட்டு வைப்பதும் நீரில்லாமல் செய்வதற்காகவே. திராட்சை, பேரீச்சை, அத்தி போன்ற பழங்களையும் வற்றல் போடுவதை நீ அறிவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/204&oldid=1538685" இலிருந்து மீள்விக்கப்பட்டது