தந்தையும் மகளும்/35

விக்கிமூலம் இலிருந்து


35அப்பா! கப்பல் போகும்போது பாறைகள் இருப்பதை அறிந்து விலகிப்போக முடியுமா?

அம்மா! கப்பல் போகும்போது கடல் நீரில், மேலே தெரியக்கூடிய பாறைகள் இருந்தால் அவற்றை, தூரத்தில் வரும்பொழுதே தூரதிருஷ்டிக் கண்ணாடியின் உதவியால் கண்டு கொள்வார்கள். ஆனால் பாறைகள் கடல் நீருக்கு அடியில் மறைந்திருந்தாலோ, அப்பொழுதும் அவற்றை முன் கூட்டித்தெரிந்து கொள்வார்கள். முன் கூட்டித் தெரிந்து கொண்டால்தான் கப்பல் அபாயமின்றிப் பிரயாணம் செய்ய முடியும. அதற்காக மாலுமிகள் ஹைட்ரோபோன் என்னும் கருவியை உபயோகிக்கிறார்கள். அது எப்படி என்று கூறுகிறேன், கேள்.

அம்மா!நாம் பேசினால் காற்றில் அலைகள் உண்டாகின்றன என்றும் அவை காதுக்குள் வந்து சேர்வதால்தான் சப்தம் கேட்கிறது

என்றும் நீ அறிவாய். கடலில் அலைகள் கரையில் மோதும் போது, கரையானது அலைகளைக் கடலுக்குள் திருப்பி விடுகின்றன. அதுபோல் நாம் பேசும் சப்தஅலைகளும் ஏதேனும ஒரு கட்டிடத்தில் மோதினால் அது அவற்றை நமக்கே திருப்பி அனுப்பி விடுகின்றன அப்பொழுது நாம் பேசியது மறுபடியும் நமக்குக் கேட்கிறது. இப்படித் திரும்பிவரும் ஒலியை எதிரொலி என்று கூறுவார்கள்.

ஒலியானது செல்லும் வேகத்தைத துல்லியமாக அளந்து ஒரு செக்கண்டு நேரத்தில் 1100 அடி தூரம் செல்வதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது ஐந்து செக்கண்டு நேரத்தில் ஒருமைல் தூரம் போவதாகக் கூறலாம்.

ஒலியானது சென்று எதிரொலியாகத் தீரும்பி வந்து சேர ஐந்து செக்கண்டு நேரம் பிடிக்குமானால் ஒலியைத் திருப்பி அனுப்பிய பொருள் அரைமைல் தூரத்தில் இருப்பதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டதே டீஹட்ரோபோன் என்பது. இந்தக் கருவியை நீருக்குள் தொங்கவிட்டு கப்பல் போகும் திசையில் திருப்பி வைத்துக் கொண்டு ஓசைசெய்வார்கள். அந்த ஓசையில் எதிரொலியைப் பெறுவதற்காக அதில் ஒரு வாய் இருக்கும். எதிரொலி அதில் வந்து சேர்வதை கப்பலில் உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். ஒலி கடலுக்குள் போய் எதிரொலயாகி வர எவ்வளவும் நேரமாயிற்று என்று தெரிந்து கொண்டு அது முட்டிய பாறை இவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்வார்கள். இந்தக் கருவியைக்கொண்டுதான் கடலின் ஆழத்தையும் கண்டுபிடிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/35&oldid=1538115" இலிருந்து மீள்விக்கப்பட்டது