தந்தையும் மகளும்/46

விக்கிமூலம் இலிருந்து


46அப்பா! சூடாக்காமலும் கொதிக்க வைக்க முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா ! எந்தத் திரவத்தையானாலும். ஆவியாக மாற்றுவதைத்தான் கொதிக்க வைத்தல் என்று கூறுகிறோம். தண்ணீரைச் சுடவைத்தால் அதன் உஷ்ண நிலை 212°F அல்லது 100° C டிக்கிரி ஆனதும் கொதிக்க ஆரம்பிக்கிறது. அதாவது அது திரவமாக இருந்த நிலையைவிட்டு ஆவி நிலையை அடைகிறது, இது தான் தினந்தோறும் நம்முடைய வீட்டில் நடைபெறுவது.

சில பொருள்கள் ளகுவதற்கும் கொதிப்பதற்கும் அதிகமான உஷ்ணம் தேவை. தங்கம் 1064°C டிக்கிரியில் இளகி 2530°C டிக்கிரியில் கொதிக்கும், திரவ ரூபமாயுள்ள பாதரஸம் கூட 357°C டிக்கிரியில்தான் கொதித்து ஆவியாக மாறும்.

ஆயினும் குறைந்த உஷ்ண நிலையில் கொதித்து ஆவியாக மாறும் சில பொருள்களும் உள. அம்மா! நீ ஹைட்ரோஜன் நைட்ரோஜன் ஆக்ஸிஜன் ஆகியவைகளை வாயுக்கள் என்றே கேட்டிருப்பாய். ஆனால் நீராவியைக் குளிர்ப்பித்து நீர் ஆக்குவதுபோல் அவைகளையும் குளிர்ப்பித்து திரவங்களாக ஆக்கி விடலாம். அந்தத் திரவங்கள் ஐஸைவீடச் சுமார் 180 டிக்கிரி குறைவான நிலைமையிலேயே கொதிக்து ஆவியாக மாறிவிடுகின்றன. ஐஸ் தான் அதிகக் குளிர் என்று கூறுவாய். அதைவிட 180 டிக்கிரி குறைவு என்றால் எவ்வளவு அதிகக்

குளிராயிருக்கும் என்று யோசித்துப்பார், அந்தக் குளிரிலேயே அவை ஆவியாகி விடுவதால்தான் அவைபோன்ற வஸ்துக்களைச் சூடாக்காமலேயே கொதிக்க வைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/46&oldid=1538145" இலிருந்து மீள்விக்கப்பட்டது