உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/47

விக்கிமூலம் இலிருந்து


47அப்பா! ஐஸ் உருகிவிடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! ஒரு சூடான பொருளை மற்றொரு பொருளுடன் சேர்த்து வைத்தால் இரண்டாவது பொருள் முதல் பொருளின் சூட்டில் ஒரு பாகத்தைக் கிரகித்துத் தானும் சூடாக ஆகிவிடுகிறது. காற்று ஐஸைவிடச் சூடானது அல்லவா? அதனால் ஐஸ் காற்றிலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்கிறது.

உஷ்ணம் அளக்கும் கருவியாகிய தெர்மாமீட்டரை ஐஸ் மீது வைத்தால் அப்பொழுது தெர்மாமீட்டரில் உள்ள பாதரஸம் O°C என்ற இடத்தில் நிற்கும். அதிலிருந்து நாம் ஜலம் ஐஸாக மாறி உறைவது அந்த டிக்கிரியில் தான் என்று அறிந்துகொள்ளலாம். ஆதலால் ஐஸ் அதற்கு அதிகமான உஷ்ண நிலை அடையுமானால் ஐஸ் கட்டியாக இல்லாமல் ஜலமாக உருகிவிடும். அதனால்தான் ஐஸ் காற்றிலுள்ள உஷ்ணத்தைக் கிரகிப்பதால் உஷ்ணநிலை அதிகமாகி உருகிவிடுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/47&oldid=1538146" இலிருந்து மீள்விக்கப்பட்டது