தந்தையும் மகளும்/48
48ஐஸைக் கையில் வைத்திருக்க முடியவில்லை அப்பா! அதற்குக் காரணம் என்ன?
அம்மா! சூடு குறைவான பொருளைச் சூடு மிகுந்த பொருளுடன் சேர்த்துவைத்தால் முதற்பொருள் இரண்டாவது பொருளின் சூட்டில் ஒரு பாகத்தைக் கிரகித்துத் தானும் சூடாக ஆகிவிடுகிறது. அதனால்தான் ஐஸ் காற்றிலுள்ள உஷ்ணத்தைப் பெற்று ஜலமாக உருகிவிடுகிறது
அதுபோலவே ஐஸைக் கையில் வைத்தால் அது காற்றிலுள்ள உஷ்ணத்தோடு கையிலுள்ள உஷ்ணத்தையும் கிரகிக்கத் தொடங்கிவிடுகிறது. அதனால்தான் ஐஸைக் கையில் எடுத்ததும் அதிகமாக உருக ஆரம்பிக்கிறது.
எப்பொழுதும் உடம்பு முழுவதும் எந்த இடத்தில் தொட்டாலும் ஒரே உஷ்ண நிலையில் அதாவது 98.4°F டிக்கிரியில் இருப்பதைக் காணலாம். அவ்விதம் இருந்தால் தான் உடம்புக்குச் சுகமாயிருக்கும். ஐஸைக் கையில் எடுத்ததும் அது கையிலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்து விடுவதால் கையிலுள்ள உஷ்ணநிலை குறைந்து விடுகிறது. அதனால்தான் ஐஸைக் கையில் வைத்திருக்க முடியவில்லை. கஷ்டமாகத் தோன்றுகிறது.