உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/5

விக்கிமூலம் இலிருந்து


5அப்பா! சில வருஷங்களில் பிப்ரவரி மாதத்துக்கு இருபத்தொன்பது நாட்கள் என்று கூறுகிறார்களே, அதற்குக்காரணம் என்ன?

அம்மா! வருஷம் என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை அறிவாய், அப்படி அது ஒரு தடவை சூரியனைச் சுற்றி வருவதற்கான நேரத்தைத்தான் வருஷம் என்று கூறுகிறார்கள். ஒரு வருஷத்துக்கு 365 நாட்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் அது தவறு.

பூமி சூரியனை 365 நாட்களில் சுற்றி வந்து விடுவதில்லை அதற்கு மேல் 5 மணி 48 நிமிஷம் 45.7 செகண்டு நேரம் வேண்டியிருக்கிறது. அதற்காக நாம் ஒரு வருஷத்துக்கு 365 நாட்கள் 5 மணி 48 நிமிஷம் 45.7 செகண்டு என்று சொன்னால் சௌகரியமாய் இருக்காதல்லவா? அதனால் நான்கு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு நாளைக் கூட்டிக் கொள்கிறார்கள். அப்படி ஒரு நாள் கூடிய வருஷத்தை ஆங்கிலத்தில் லீப் வருஷம் என்று கூறுகிறார்கள். லீப் என்பதற்குப் பொருள் தாவுதல் என்பதாகும். இதற்காகத்தான் உனக்குப் பாடசாலையில் நாலால் மீதியின்றி வகுக்கக்கூடிய வருஷங்களில் பிப்ரவரிக்கு 29 நாட்கள் என்று கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஏன் அந்த ஒரு நாளைப் பிப்ரவரி மாத நாட்களுடன் சேர்க்கிறார்கள் என்று கேட்பாய். ஆதியில் பிப்ரவரிக்கும் 30 நாட்களே இருந்தன. ஜூலியஸ் சீஸர் என்னும் ரோம சக்கரவர்த்தி தம்முடைய பெயரால் ஜூலை என்று ஒரு மாதத்துக்குப் பெயரிட்டு, குளிரும் கூதலும் மிகுந்த பிப்ரவரிக்கு இத்தனை நாட்கள் எதற்கென்று அதன் நாட்களில் ஒன்றைக் குறைத்து அதை ஜூலை நாட்களுடன் கூட்டினார். அதன் பிறகு அகஸ்டஸ் சீஸர் என்னும் ரோம சக்கரவர்த்தி பிப்ரவரியிலிருந்து இன்னும் ஒரு நாளை எடுத்து தம் பெயரால் வழங்கும் ஆகஸ்ட் மாதத்து நாட்களுடன் சேர்த்தார் இவ்வாறு பிப்ரவரி மாதம் நாட்கள் குறைந்ததாக ஆகிவிட்டபடியால் அறிஞர்கள் லீப் லருஷத்தில் பிப்ரவரி மாதத்துக்கே ஒரு நாளைக் கூட்டும்படி சொல்லுகிறார்கள்.

இவ்வாறு நான்கு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு நாளைக் கூட்டினால் அப்பொழுது வருஷம் 11 நிமிஷம் 14 செக்கண்டு அத நேரம் உடையதாக ஆகி விடுகிறது. அதற்காக அறிஞர்கள் நானூறால் மீதியின்றி வகுக்கக்கூடிய நூற்றாண்டு வருஷம் தவிர ஏனைய நூற்றாண்டு வருஷங்களை லீப் வருஷமாகக் கருதுவதில்லை. ஆதலால் 1900 நாலால் வகுக்கக் கூடியிருந்தும் லீப் வருஷமாகாது. ஆனால் 2000 நானூறால் வகுக்கக் கூடியதாக இருப்பதால் லீப் வருஷமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/5&oldid=1538051" இலிருந்து மீள்விக்கப்பட்டது