உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/50

விக்கிமூலம் இலிருந்து


50 அப்பா ! இரும்பு ஆணி கிடைத்தாலும் ஆசாரி மரத்தாலும் ஆணி செய்து உபயோகிக்கிறாரே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மரத்தைவிட இரும்பு பலமுடையதாதலால் இரும்பு ஆணியை உபயோகிப்பதே நல்லது அல்லவா என்று நீ கேட்கிறாய். ஆம் அம்மா! இரும்பு ஆணிதான் பலமானது. ஆயினும் கதவுகளுக்குச் சட்டங்கள் சேர்க்கும் போது ஆசாரி மரத்தாலேயே ஆணி செய்து கொள்கிறார், அதற்குரிய காரணம் கூறுகிறேன் கேள்.

அம்மா! சட்டங்களை பலமாக இறுக்குவதற்கு இரும்பு ஆணியை உபயோகித்தால் குளிர் காலத்தில் இரும்பு ஆணி சுருங்கும். மரச்சட்டம் விரியும், ஆனால் இரும்பு, சுருங்கும் அளவு மரம் விரிவதில்லை. ஆதலால் சட்டம் இறுக்கமாக இராமல் நெகிழ்ந்து போகும்,

ஆனால் ஆணி மரத்தால் செய்ததாயிருந்தால் ஆணியும் சட்டமும் ஒரே அளவாகவே சுருங்கவும் விரியவும் செய்யும். அதனால் சட்டம் இறுக்கமாக இருக்கும், கழன்றுவிடாது.

இங்கிலாந்திலும் மர ஆணி உபயோகிப்பதுண்டு. அதற்குக் காரணம் வேறு. இங்கே தேக்கு மரம் மிகச் சிறந்த மரமாக இருப்பதுபோல் அங்கே ஓக் மரமே மிகச் சிறந்தது. அது ஒரு வகை எண்ணெய்ச் சத்து உடையது. அந்தச் சத்து இரும்பைத் தின்றுவிடும். அதனாலேயே அந்த மரத்தால் சாமான்கள் செய்யும் போது மர ஆணியை உபயோகிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/50&oldid=1538153" இலிருந்து மீள்விக்கப்பட்டது