உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/83

விக்கிமூலம் இலிருந்து


83அப்பா! மோட்டார் கார் சக்கரத்திலுள்ள டயரில் காற்று அடைக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மோட்டார் கார் டயரிலும் காற்று அடைக்கிறார்கள், சைக்கிள் டயரிலும் காற்று அடைக்கிறார்கள். ஆதியில் சைக்கிள் உண்டான காலத்தில் காற்று அடையாத கட்டி ரப்பரால் செய்த டயர் தான் உபயோகித்தார்கள். அது பலமாகவும் இருக்கும், சீக்கிரம் தேய்ந்து விடாமல் நீண்டநாள் உழைக்கவும் செய்யும். ஆனால் அந்த டயர் போட்ட வண்டிகளில் போவோர்க்கு சௌகரியமாயிருப்பதில்லை. வில் இல்லாத கட்டை வண்டியில் போவது போலிருக்கும். அதனால்தான் டயரினுள் காற்றை அடைக்கிறார்கள். அப்படிச் செய்தால் டயரினுள் செலுத்தப்படும் காற்று அமுங்கியிருப்பதால் ரப்பர்மாதிரி இருந்து கொண்டு வண்டி மேடுபள்ளங்களில் போகும் பொழுது மெத்தை மாதிரி உதவுகிறது. போகிறவர்களுக்கு சௌகரியமாயிருக்கிறது.

அம்மா! டயரின் உள்ளே ஒரு ரப்பர் குழாய் இருக்கும். அதில்தான் காற்றை அடைப்பார்கள். வெளியே காணும் டயர் கட்டியாய் பலமாயிருக்கும். அதனால் சீக்கிரம் தேயாது. அத்துடன் டயரில் பற்கள் போல் செய்திருப்பார்கள். அவை சக்கரம் சாலையில் வழுக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/83&oldid=1538233" இலிருந்து மீள்விக்கப்பட்டது