உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/84

விக்கிமூலம் இலிருந்து


84அப்பா! தம்பி கடற்கரைக்குப் போயிருந்தபொழுது வாங்கி வந்த பலூன் வீட்டுக்கு வந்தவுடன் வெடித்துவிட்டதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா, அநேகமாக உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் உஷ்ணம் சேர்ந்தால் விரிந்து விடுகின்றன. அதிலும் வாயுக்களாக இருந்தால் சீக்கிரமாகவும் அதிகமாகவும் விரிந்துவிடும். தம்பி வாங்கின பலூனில் காற்றைத்தானே ஊதி உள்ளே அடைத்து வைத்திருக்கிறார்கள். நாம் கடற்கரையிலிருந்த பொழுது அங்குள்ள காற்று உஷ்ணமில்லாமல் குளிர்ந்ததாக இருந்தது. குளிர்ந்த காற்றுக்காகத்தானே நாம் கடற்கரைக்குப் போகிறோம்? பிறகு வீட்டுக்கு வந்தால் வீட்டிலுள்ள காற்று கடற்கரைக் காற்று மாதிரி குளிர்ந்திராமல் சூடாயிருக்கிறது. அதனால் பலூனும் பலூனிலுள்ள காற்றும் விரிகின்றன. ஆனால் பலூனைவிடக் காற்றே அதிகமாக விரிவதால் அது பலூனைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடுகிறது. அப்பொழுது சப்தம் உண்டாவதால் பலூன் வெடித்து விட்டது என்று கூறுகிறாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/84&oldid=1538234" இலிருந்து மீள்விக்கப்பட்டது