உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/88

விக்கிமூலம் இலிருந்து


88அப்பா! ஆகாயக் கப்பலில் போகும்போது அது பழுதானால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா?

அம்மா! அதிலிருந்து இறங்கித் தப்பித்துக் கொள்வதற்காக அதை ஒட்டுபவர்கள் 'பாரச்சூட்” என்ற பொருளை வைத்திருப்பார்கள். அதை விரித்தால் அது பெரிய குடை போலிருக்கும். அதை பட்டி னாலாவது நைலான் என்னும் துணியினாலாவது செய்கிறார்கள். சாதாரணமாக அது ஒவ்வொன்றும் குறுக்கே 24 அடி அகலமும் 20 ராத்தல் நிறையும் இருக்கும்.

ஏதேனும் அபாயம் நேர்ந்து இறங்க வேண்டியிருந்தால் அப்பொழுது அதைக் குடைபோல் விரித்து அதில் உட்கார்வதற்காக உள்ள இருக்கையில் உட்கார்ந்து இறங்குவார்கள்.

அம்மா! ஏதேனும் ஒரு பொருள் கீழே பூமியை நோக்கி வரும்பொழுத அதைப் பூமியின் இழுப்புச் சக்தி பூமியை நோக்கி இழுக்கிறது. அதே சமயத்தில் காற்றானது அதைக் கீழே விழவொட்டாமல் மேலே தள்ளுகின்றது. ஆனால் பூமியின் இழுப்புச் சக்தி காற்றின் எதிர்ப்புச் சக்தியைவிட அதிக பலமுடைய தாகையால் காற்றால் பொருள்களைக் கீழே விழாமல் செய்துவிட முடிவதில்லை, அது செய்யக் கூடியதாயிருப்பதெல்லாம் பொருளைத் தடாரென்று வந்து விழாமல் மெதுவாக வந்து சேரும்படி செய்வதுமட்டுமே.

அம்மா! காற்று விரைவாக விழுவதைத் தடுக்கிறது என்று சொன்னேன் அல்லவா? பொருளானது தட்டை யாகவும் அதிகப் பரப்புடையதாகவுமிருந்தால் அப்பொழுது காற்றின் எதிர்ப்புச் சக்தி அதிகமாயிருக்கும். அப்போது பொருள் யாதொரு சேதமுமின்றி பூமியில் வந்து சேர்ந்துவிடும். ஆகாய விமானிகள் உபயோகிக்கும பாரச்சூட் குடையானது 24 அடி அகலமுடையதாக இருப்பதால் அதன் உதவியால் அவர்கள் மெதுவாக வந்து பூமியில் இறங்கிவிடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/88&oldid=1538250" இலிருந்து மீள்விக்கப்பட்டது