தந்தையும் மகளும்/9

விக்கிமூலம் இலிருந்து


9 அப்பா! நட்சத்திரங்களைப் பகலில் பார்க்க முடியுமா?

அம்மா! நட்சத்திரங்கள் வானத்தில் பகலிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பகலில் அவற்றின் ஒளியைவிட சூரியனுடைய ஒளியே அதிகமாயிருப்பதால், அவை நம்முடைய கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் சில நாட்களில் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலும் வரும். அத்துடன் அவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டிலும் இருக்கும். அப்பொழுது சூரியன் நமக்குத் தெரியாமல் போய்விடும். அப்படி சூரியன் மறைவதைத்தான் சூரிய கிரகணம் என்று கூறுவார்கள். அவ்வாறு சூரியன் மறையும் சமயத்தில் பார்த்தால் வானத்திலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் நம்முடைய கண்களுக்கு நன்றாகத் தெரியும்.

அது மட்டுமன்று அம்மா! சூரிய கிரகணம் உண்டாகாத காலத்திலுங்கூட நாம் பகலில் நட்சத்திரங்களைப் பார்க்கலாம். அதற்கு நம்முடைய வெறுங்கண்கள் உதவா. பெரிய தொலைநோக்கி வழியாகப் பார்க்க வேண்டும். தொலைநோக்கி நட்சத்திரங்களின் உருவத்தைப் பன்மடங்கு பெரிதாக ஆக்கிக் காட்டுமாதலால் பகலில் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட நாம் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/9&oldid=1538060" இலிருந்து மீள்விக்கப்பட்டது