உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழரின் மறுமலர்ச்சி/அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்

விக்கிமூலம் இலிருந்து


அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்:



சி.என்.அண்ணாத்துரை

தோற்றம் - 15 - 9 -1909
தந்தை - நடராசன்
தாய் - பங்காரு அம்மாள்
பிறந்த ஊர் - சின்ன காஞ்சிபுரம்
வாழ்க்கைத் துணை - இராணி அம்மையார்
புனைபெயர் - சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன்
1929 - 34 - சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு
11-2-34 - முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது
1-2-36 - சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் 'பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும்காங்கிரசும்' பற்றிச் சொற்பொழிவு
1936 - சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிகட்சி உறுப்பினராக நிற்றல்
11-4-1937 - நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல்
1937 - விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி
9-12-37 - முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில்
26-9-38 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாத வெறுங்காவல்
13-1-39 - தமிழுக்காக உயிர்நித்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்ததில் உரை

18-1-39 - தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல்.
10-2-39 - சென்னை கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்
6-1-40 - பம்பாயில் பெரியார் - அம்பேத்கார் உரையாடல் மொழிபெயர்ப்பு
2-6-40 - காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு
7-3-42 - 'திராவிடநாடு' கிழமை இதழ் தொடக்கம்
14-3-43 - சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்.
5-6-43 - 'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல்.
19-8-44 - சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு அண்ணாதுரை தீர்மானம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல்.
15-12-45 - 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் - அண்ணா நடித்தல்.
மே 1946 - கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு
29-7-46 - நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல்
25-4-47 - 'வேலைக்காரி' நாடகம்.
1-6-47 - 'நீதிதேவன் மயக்கம்' நாடகம்.
15-8-47 - ஆகஸ்டு பதினைந்து 'விழா நாளே' என விளக்கம் தருதல்.
28-9-47 - தந்தை பெரியார் 69 வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை —'இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.'

14-1-48 - 'நல்ல தம்பி' திரையிடல்
18-6-49 - தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல்.
10-8-49 - 'மாலைமணி'- நாளிதழ் ஆசிரியர்.
17-9-49 - தி.மு.க. தோற்றம்
18-9-49 - 'திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு, நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல்; அரசுக்கு எதிர்ப்பு; பத்தாம் நாள் விடுதலை.
12-1-50 - நாடெங்கும் பொங்கல் விழா உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்.
1950 - திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல்.
1951 - 'ஆரியமாயை' நூலுக்குத் தடை
17-9-51 - திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல்.
16-12-51 - தி.மு.க. முதல் மாநில மாநாடு.
1-8-52 - சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர்
15-6-53 - 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம்.
13-7-53 - மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை
2-2-56 - தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம்.
29-4-57 - தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.
9-6-57 - 'ஓம் லேண்டு' ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல்
2-3-58 - தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.

24-4-59 - அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல்.
1-8-60 - இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை
1962 - சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை
26-2-62 - சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல்.
2-8-62 - விலைவாசி உயர்வுப்போர் சிறையில் - வேலூர் பத்து வாரம்.
17-11-63 - கட்டாய இந்தி - 17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல்;
16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல்.
1-3-67 - தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல்.
14-4-67 - 'தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல்
10-1-68 - இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல்
8-9-68 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல்
4-1-69 - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு.
2-2-69 - புகழ் உடம்பெய்தல்.