உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் தோற்றமும் பரவலும்/இணைப்பு-2 இடம் மற்றும் பிறபெயர் விளக்கம்

விக்கிமூலம் இலிருந்து


இணைப்பு 2



இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்


- 1. அகஸ்டஸ் (Augustus) உரோமப் பெருவீரன் சூலியஸ் சீசரின் வழிவந்தன. கி.மு. 27 முதல் கி.பி.14 வரை, அரசாண்ட பேரரசன்.

2. அகேயன் (Achean): ஐரோப்பாவில், தென்மேற்கு ஜெர்மானியிருந்து கிழக்காக ஒடிக் கருங்கடலில் கலக்கும் டான்யூப் ஆற்றுப்பகுதியாம் வடக்கிலிருந்து வந்து, கி.மு. 1300ல், கிரீஸில் குடியேறிய தொல்பழங்குடியினர்.

3. அஸ்லிரியன் (Assyrian): மேற்கு ஆசியாவில், கிழக்குத் துருக்கி, சிரியா, இராக் நாடுகள் வழியாக ஒடிப் பாரசீக வளைகுடாவில் கலக்கும் யூப்பிரடஸ் ஆற்றோடு, தென் துருக்கி, இராக் நாடுகள் வழியாக ஓடி வந்து கலக்கும் டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியில், இந்தியா முதல் எகிப்து மற்றும் சிற்றாசியா வரை பர்வியிருந்த ஒரு பெரிய நாட்டின் தலைநகராகக் கி.மு. ஏழாவது நூற்றாண்டில் விளங்கிய அஸ்ஸிரிய நகரத்தில் வாழ்ந்த மக்கள். அவர்கள், வழங்கிய மொழி, மற்றும் அவர்கள் பண்பாடு.

4. அஸ்லீட்(Assiut): மத்திய எகிப்தில் உள்ள ஒரு நகரம்.

5. அட்டிஸ் (Attis): எகிப்து நாட்டில் இருந்த ஒரு பழங்குடியினர்; அவர்கள் மதகுருவின் சின்னம் சேவற் கோழி. 6. அப்போலோ (Appollo): கிரேக்க-உரோமப் பழங்கதைகளில், அழகு, இளமை, ஆற்றல், இசை, செல்வம் ஆகியவை வாய்ந்த ஒரு கடவுள், தமிழர் கடவுளாம் முருகனுக்கு ஒப்பான கடவுள்.

7. அமஜோனிட்டே (Amazonite) தென் அமெரிக்காவில் ஓடி அட்லாண்டிக் பெருங்கடலோடு கலக்கும் அமேஜான் ஆற்றங்கரையில் காணப்படும், நடுத்தர விலை உள்ள ஒருவகைப் பச்சைக்கல்.

8. அம்மான் (Ammon) பண்டை எகிப்தியரின் கடவுளாம் ஜேயஸ் (Zeus) அதாவது வியாழக்கடவுள் மற்றும் விவிலிய நூலில் வரும் "லாட்" (Lot) என்பான் வழி வந்து, தென்மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த, கெமிடிக் பழங்குடியினர்.

9. அர்ட்டேமிஸ் (Artmis) கிரேக்கப் பழம் புராணங்களில் வரும் திங்கள் கடவுள். கிரேக்க அப்பொலோ கடவுளின் உடன்பிறப்பு. பாரத திரெளபதி அம்மனுக்கு நிகராகக் கருதப்படும் கடவுள்.

10. அர்ஜிவ் (Argive) கி.மு. ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, கிரேக்கப் பழம் புலவரின் பாடல்களில் கூறப்பட்டிருக்கும் கிரேக்க மாவட்டம் ஒன்றில் வாழ்ந்திருந்த பழங்குடியினர்.

11. அலெப்போ (Aleppo) சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம்.

12. ஆர்க்கேயன் பாறை (Archaean Rock) நிலநூல் ஆய்வில் முதற்கண் காணப்படாத மதிக்கப்படும் பழம்பாறை.

13. ஆர்ச்செபெலகோ (Archipelago) கடலிடையே உள்ள தீவுக் கூட்டம்.

14. ஆன்த்ரோபோகிராபி (Anthropogeography) பழங்குடிமக்கள் இனம், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, சமுதாய வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு.

15. ஏஜியன் (Aegean) மத்திய தரைக்கடலில், கிரீஸுக்கும், துருக்கிக்கும் இடையில் உள்ள ஏஜியன் கடலில் உள்ள தீவுக் கூட்டங்களில், கிரேக்கப் பழங்குடியினர்களுக்கு முன் வாழ்ந்திருந்த வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தொல் பழங்குடியினர்.

16. அஸிஸி (Assis) மத்திய இத்தாலியில் உள்ள ஒரு நகரம்.

17. அஸ்டெக்ஸ் (Aztecs) அமெரிக்க நாட்டுச் சிகப்பு இந்தியர்கள் வழிபடும் நிலத்தெய்வம்.

18. ஹமிடிக் இனம் (Hamitic Race) வட ஆப்பிரிக்கா, தென் ஆசியா, மற்றும் பண்டைய எகிப்து நாடுகளில், கி.மு.3000 ஆண்டு முதல் வாழ்ந்து வரும் பழங்குடியினர்.

19. ஹாரன் (Harran) கிழக்கு ஆப்பிரிக்காவில், எகிப்துக்குத் தெற்கில் உள்ள எதோப்பிய நாட்டின் மேற்கில் உள்ள ஒரு நகரம்.

20, இ.அ. (E.A.) பாபிலோனியப் பழம் புராணங்களில் வரும் நிலத்தடி நீர்க்கடவுள், அந்நாட்டு நிலத் தெய்வமாம் என்லியோடு (Enlil) உறவுடையது.

21. இப்னு பதூதா (Ibnu Batutha) கி.பி. 1304-1368ல் வாழ்ந்திருந்த ஆப்பிரிக்க நாட்டு, உலகப் பணி.

22. இஷ்தர் நின்னி (Eshar-Ninni) பாபிலோனியா மற்றும் அஸ் ரீயா நாடுகளில் அன்பு மற்றும், வளம் தரும் பெண் கடவுள்.

23. ஹிட்டிஸ் (Hits) சிற்றாசியாவிலும் சிரியாவிலும், கி.மு. 700க்கு முன் வாழ்ந்திருந்த தொல்பழங்குடியினர். 24. இட்ருசிகன் (Eirusema) மேற்கு, இத்தாலியின், மத்தியப் பகுதியாம் இட்ருசியா என்ற பகுதியில் வாழ்ந்திருந்த தொல்பழங்கால மக்களின் பண்பாடும் மற்றும் மொழி.

25. யூப்பிரடஸ் (Euphrates) கிழக்குத் துருக்கி, சிரியா மற்றும் இராக் நாடுகள் வழியாக ஓடிப் பாரசீக வளைகுடாவில் கலக்கும் ஆறு. அதனுடன் வந்து கலக்கும் ஆற்றின் பெயர் டைகிரிஸ்.

26. இயோலித்திக் (Eolithic) கரடுமுரடான கல்லால் ஆன செய்கருவிகள் பயன்படுத்தப் பெற்ற தொல்பழங்கால நாகரீகம் பற்றிய ஆய்வு.

27 இலியட் (liad) கிரேக்கர்கள், சிற்றாசியாவின் வடமேற்கில் உள்ள பழைய நகரமாகிய டிராயை (Troy) முற்றுகை இட்டபோது நடைபெற்ற ட்ரோஜன் (Trojan) சண்டையை இருபத்து நான்கு பத்தகம் அளவு பெரிதாகப் பாடப்பெற்ற பழங்கதை, கிரேக்கப் பெரும்புலவர் ஹோமர் அவர்களின் படைப்பு எனக் கூறப்படுகிறது.

25.ஹிரோடோடஸ் (Hirodotus) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர்.வரலாற்று நூலின் தந்தை என மதிக்கப்பட்டவர்.

29. உர் (ப்) யூப்பிரடஸ் ஆற்றங்கரையில் உள்ள சுமேரிய நாட்டுப் பழம்பெரும் நகரம்.

30. உராலி (Uralis) தென் இந்தியக் காடுகளில் வாழ்ந்திருந்த காடவர்க்கு இனமான தொல் பழங்குடியினர். சோவியத் குடியரசின் மையப்பகுதியில் ஒடும் ஆற்றுப் படுகையில் வாழ்ந்திருந்த பழங்குடியினர் என்றும். அவர்கள் மொழி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழமையானது என்றும் கூறப்படும்.

31. ஹெர்ரோபொலிட்டே (Heroopolite) சூயஸ் கால்வாய்க்கு அணித்தாக உள்ள ஒரு வளைகுடா.

32. "எத்னோக்ரபி” (Ethnography) மனித இனப்பரப்பு, தொல்பழங்கால மனித இனப்பரப்பு வேறுபாடு பற்றிய ஆய்வு அறிவு.

33. ஹமிடிக் இன்ம் (Hamitic Race) வட ஆப்பிரிக்கா, தென் ஆசியா, மற்றும் எகிப்திய நாட்டில், கி.மு. 3000 ஆண்டு முதல் வாழ்ந்து வரும் பழங்குடியினர்.

34. ஹெல்லனிக் (Helenic) தொல்பழங்காலக் கிரேக்க நாட்டு மொழி. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

35.ஹெல்லனிஸ்டிக் காலம் (Hellainistic Age) கிரேக்கப் பெருவீரன், அலெக்ஸாண்டர் மறைவுக்கும், அகஸ்டஸ் ஆட்சி ஏற்றதற்கும் இடைப்பட்ட காலம்.

36. எலாமிட்டே (Elamite) இன்றைய இரான் நாட்டில் உள்ள, பழம்பெரும் நாடாம் எலாம் என்ற நாட்டின் பழங்குடியினர்.

37. ஹெலியோபொலிஸ் (Helipolis) எகிப்தில், கெய்ரோ நகருக்கு வடக்கில் உள்ள பழம்பெரும் நகரின் இடிபாடுகள்.

38. என்கி (Enki) பாபிலோனிய நாட்டுப் பழங்குடியினராகிய சுமேரியர்களின் “உலகின் தோற்றமும் பேரழிவும்" என்ற பழங்கதையில் சுமேரிய முன்னோர்களைத் தோற்றுவிக்க அணு என்ற வான் கடவுளோடு, நிலப்பெண் கடவுளுக்கும் ஆண் கடவுளுக்கும் துணை நின்ற நீர்க் கடவுளாகக் கூறப்பட்டுள்ளது.

39. என்லில் (Enlil) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் நிலக்கடவுள்.

40. ஹொலோபிரெஸ்டிக் (Holophrastic) ஒரு தொடர் அல்லது வாக்கியத்தால் கூறப்படும் ஒரு பொருளை, ஒரே சொல்லில் விளக்குவது.

41. ஹொமொஜீனியஸ் (Homogeneous) ஒரே மனிதகுலத்தைச் சேர்ந்த...

42. ஒடிஸி (Odyssey) கிரேக்கப் பெரும் புலவர் ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் ஒரு பழங்கதை.

43. ஒப்ஹிடெஸ் (Ophites) மனித அழிவைக் கொண்டு வந்துவிட்ட நாகப்பாம்பினை வழிபட்ட பண்டைக் கிறித்துவ சமயத்தவர்.

44. ஒபிர் (Ophir) விவிலிய நூலில் கூறப்பட்டிருக்கும் பொன்வளம் கொழிக்கும் நாடு. சிலர், பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பழைய துறைமுகமாகிய சோபரா (Sopara) என்றும், சிலர், சிந்துநதி கடலோடு கலக்குமிடத்தில் உள்ள சமஸ்கிருத அப்ஹிர் (Abhira) என்றும் சிலர் அரேபியாவில் எங்கோ உள்ள ஓர் இடம் என்றும் கூறுவர்.

45. ஓனெஸ் (Oannes) பாரசீக வளைகுடா வரை நீந்தி வந்ததாகவும், தன்னோடு நாகரீகத்தையும் கொண்டு வந்ததாகவும் கூறப்படும் கற்பனை மனித மீன்.

46. ஹெளஸ்ஸா (Haussa) ஆப்பிரிக்காவில் உள்ள நைசீரியா மற்றும் சூடான் நாட்டில் வாழும் நீக்கிரோக்கள், மற்றும் அவர்களின் மொழி.

47. ஹரியன்கள் (Hurrians) இன்றைய சிற்றாசியாவாம் பழைய கிழக்கு அனடோலியாவுக்கும், யூபிரடெஸ், டைகரஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட நாடாம் வடக்கு மெலபடோமியா வுக்கும் இடையில் அர்மீனிய மலையத்தே தோன்றிய

பழங்குடியினர்: அவர்களின் மொழி. இந்தோ - ஐரோப்பிய மொழியோ, செமிடிக் இன மொழியோ அன்று. ஜார்ஜியன் மற்றும் காகேஸியன் மொழி இனத்தைச் சேர்ந்தது.

48. கட்டிகரா (Katigara) தென்சீனக் கடலில் உள்ள வியட்நாமின் ஒரு பகுதியாய், சைகோன் நகரைத் தலைநகராகக் கொண்டது. கொச்சின் சைனா (Cochin-china) எனவும் அழைக்கப்படும் நாடு.

49. கர்நக் (Karnak) எகிப்தில் ஒடும் நைல் நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றுார்.

50. கரியன்கள் (Carians) சிற்றாசியாவில் தென்மேற்குப் பகுதியில் இருந்த பழம்பெரும் நாடு.

51. கலட்(Kalat) தென்மேற்குப் பாகிஸ்தானின் ஒரு வருவாய்க் கோட்டம்.

52. கனட்டே (Khan-ate) ஓர் அரசன் அல்லது அதிகாரியின் ஆட்சிக்கு உட்பட்டநிலப்பரப்பு: அதாவது வருவாய்க் கோட்டம்.

53. கிஷ் (Kish) பாபிலோனியாவில உள்ள தொல் பழங்காலச் சுமர் நாட்டில் இருந்த ஒரு நகரம்.

54. க்யோ-கெள (Kiao-Chow) கிழக்குச் சீனாவில் உள்ள ஒரு நகரம்.

55. கிரீட் (Crete) மத்திய தரைக்கடலில் உள்ள ஒரு கிரேக்கத் தீவு.

56. கிரோனஸ் (Cronus) கிரேக்கப் பழம் புராணத்தில் உரானஸ் என்பான் மகனாய்ப் பிறந்து, தந்தையின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டவனும், அவன் மகன் ஜெயஸ் என்பானால் பதவி இழக்கப்பட்டவனும் ஆவன்.

57. க்ளாடியன் (Claudian) கி.பி.390-404 ஆண்டளவில் இருந்த உரோமப் புலவர்.

58. க்ளாடியஸ் (Claudius) கி.பி.41 முதல் 54 வரை அரசாண்ட உரோமப் பேரரசன்.

59. குவார்ட்ஸைட்டே (Quartzite) பெரிய சக்கிமுக்கிக் கல் கலந்த, மின்னொளி வீசும், எளிதில் உருமாற்றம் செய்யக் கூடிய மணற்பாறை.

60. காப்படொசியா (Cappadocia) சிற்றாசியாவின் கிழக்குப் பகுதி. செமிடிக் இனத்து வணிகர்களால், தொடக்க காலத்தில் குடியேறப் பெற்ற பின்னர், பர்ஷியர்களால் கி.மு.584ல் வெற்றி கொள்ளப்பட்டது.

61. கேனன் (Cannan) இன்றைய இஸ்ரேல் நாடு எனப் பெரும்பாலும் கருதப்படுவது, ஜோர்டானுக்கு.மேற்கிலும், சிரியாவுக்குத் தெற்கிலும் இருப்பது.

62. கோயிட்டெய்(Kuetei) கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாகிய போர்னியாவில் வழக்காற்றில உள்ள எழுத்து.

63. க்நொஸெஸ் (Knossos) பண்டைய கிரீட் நாட்டின் தலைநகர்.

64. காக்காஸியன் (Caucasian) தெற்கு ஐரோப்பாவில், கருங்கடலுக்கும், காஸ்பியன் கடல்களுக்கும் இடையில் உள்ள மலைத் தொடர்களின் இரு பக்கங்களிலும் வாழந்த பழங்குடி மக்களின் பண்பாடு.

65. கூஸ்கோ (Cuzco) தென் அமெரிக்காவில் பசிபிக்கடலைச் சார்ந்துள்ள பெரு நாட்டின் ஒரு நகர். 66. கோண்டு (Gondwana) வனம் கல்தோன்றி மண்தோன்றாக் காலமாம் தொல் உயிர் ஊழிக் காலத்தில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வழியாக, ஆஸ்திரேலியா முதல் தென் அமெரிக்கா வரை, நீண்டு பரந்து கிடந்த நிலப்பரப்பு.

67. சப்ஹ (Sabah) தென் சீனக் கடலை ஒட்டி, வடகிழக்குப் போர்னியோவில் உள்ள மலேசிய மாநிலம்.

68. "சாப" (Saba) தென் அரேபியாவில் இருந்த தொல் பழம் நாடு.

69. சபஹேயன் (Sabaean) தென் ஆபிரிக்க மொழி - கல்வெட்டுகளில் மட்டுமே காணக் கூடியது.

70. சாகய்ஸ் (Sakais) மலேயத் தீபகற்பத்தில் வாழ்ந்த பழங்குடியினர்.

71. சாலமன் (Solomon) கி.மு. 10வது நூற்றாண்டில், இஸ்ரேல் ஆண்ட டேவிட் என்ற அரசன் மகன். முதலாவது கோயிலைக் கட்டியவன். அறிவுக்குப் புகழ் பெற்றவன். . .

72. சால்டிஸ் (Chaldeas) தெற்கு பாபிலோனியாவில், துருக்கியில் தோன்றி, பாரசீக வளைகுடாவில் கலக்கும் யூப்ரடஸ் ஆற்றின் வண்டல் படிந்து உண்டான கீழ்ப் பகுதியாம் மெஸ்படோமியாவில் உள்ள நிலப்பரப்பு.

73. சால்டிஸ் (Chaldeams) சால்டீம்ஸ் நாட்டு மக்கள்.

74. சிக்கா (Sicca) ஆப்பிரிக்காவின் வட கடற்கரையைச் சார்ந்த இடம். பொயினிஷியா மக்களின் குடியேற்ற நாடு; பெண்களைத் தேவதாசிகளாக, அதாவது கடவுளுக்குப் பணி புரிவர்களாகக் கொடுக்கும் வழக்கம் இருந்த ஓர் இடம். 75. சிரியா (Syria) மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரையைச் சார்ந்த தொல்பழம் நாடு. -

76. சித்தியன் (Scythian) தென்கிழக்கு ஐரோப்பா, மற்றும் ஆசியாவில், தொல் பழங்காலத்தில் வாழ்ந்திருந்த, நாடோடி வாழ்க்கையும், போர்க் குணமும் வாய்ந்த மக்களின் நாகரீகம், மற்றும் அவர்கள் வழங்கிய இராணிய மொழி.

77. ஷீபா (Sheba) கி.மு. பத்தாம் நூற்றாண்டில் இஸ்ரேலை ஆண்டிருந்த சாலமன் மன்னனின் பெருமை அறிவாற்றல்களை ஆய்ந்து அறிய அவன் அவைக்குச் சென்ற ராணி. அவள் ஆட்சி தென்மேற்கு அரேபியாவில் உள்ள யேமன் நாடு வரை பரவியிருந்தது.

78. சிய்பெலெ (Cybele) ஆசியப் பழங்குடி மக்களால் வழிபடப் பெற்ற தொல் பழங்கால, நிலச்செல்வம் கிரேக்க நிலத்தெய்வம் "ரேகா" (Reha) வாகக் கருதப்படும்.

79. சுக்ஹு (Sukuh) மத்திய அமெரிக்காவில் உள்ள பண்டைய நிலப்பகுதி.

80. சுசா (Susa) இரான் நாட்டின் தெற்கில் இருந்து அழிந்து போன தொல் பழம் இடம்.

81. சுமத்ரா (Sumatra) மலையத் தீபகற்பத்திற்குத் தெற்கில் உள்ள கிழக்கிந்தியத் தீவுக் கூட்டங்களில் பெரிய தீவு.

82. சுமர் (Sumer) யூபிரடஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கின் கீழ்ப் பகுதியில் இருந்த தொல்பழம் நிலப் பகுதி.

83. சுமேரியன் (Sumerian) தென் மேற்கு ஆசியா, யூபிரடஸ் ஆற்றங்கரையில் இருந்த தொல் பழம் நாடாகிய பாபிலோனியாவில் வாழ்ந்திருந்த, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்திய பழங்குடியினர். 84. செலபெஸ் (Celebes) கிழக்கிந்தியத் தீவுகளில் போரினியோவுக்குக் கிழக்கே உள்ள தீவு.

85. செல்லீயன் (Chellean) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. பழங்கற் காலத்திய செய்கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்.

86. சேனா (Sena) கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இலங்கை ஆண்ட அரச இனம்.

87. செப்ஹர் (Sephar) செபியின் எனக் கருதப்படும் ஒரு நாடு.

88. செமான்ங்ஸ் (Semangs) ஜாவாவில் வடக்குக் கடற்கரையில் உள்ள ஒரு நகரம்.

89. ஸெஸ்டெர்செ (Sesterce) உரோம் நாட்டு நாணயம். தொடக்கத்தில் வெள்ளியாலும் அடுத்து, பித்தளை அல்லது செப்பில் செய்யப்பட்டது.

90. செரம் (Ceram) கிழக்கிந்தியத் தீவுகளில் இந்தோனேஷியாவைச் சார்ந்த ஒரு தீவு.

91. ஜஸ்பர் (Jasper) ஒரு வகை வண்ணக் கருவிகள்.

92. ஜஸ்பர்ஸ் (Jaspers) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தத்துவ மேதை.

93. ஸொகொடோ (Sokoto) மத்திய ஆப்பிரிக்காவில், ஹெளஸா இனத்து மக்கள் வாழும் பல பகுதிகளுள் ஒன்று.

94. ஸொகொத்ரா (Sokotra) இந்தியப் பெருங்கடலில் அரேபியாவுக்குத் தெற்கில் உள்ள ஒரு தீவு.

95. ஸொலிமி (Solymi) கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் ஒருவரால் தென் ஆசியாவிற்குத் தெற்கில் இருந்த லிசியா (Lycia)வுக்குத் தம் நூலில் இட்டு வழங்கிய வேறு ஒரு பெயர்.

96. ஸோபரா (Sopara) பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பழைய துறைமுகம்.

97. ஸ்ட்ராபோ (Strabo) கி.மு. அல்லது கி.பி. யில் வாழ்ந்திருந்த கிரேக்க நாட்டு நில நூல் வல்லார்.

98. ஸ்லாவோனிக் (Slavonic) ஐரோப்பிய யுகோஸ்லாவியா நாட்டுக்கு வடக்கில் பால்கன் என்ற உள்நாட்டுக் கடல் பகுதியில் உள்ள நாடு; அந்நாட்டு மக்கள்.

99. ஜுலுஸ் (Zulus) ஆப்பிரிக்காவின் தென்கிழக்கில் உள்ள பண்டு (Bantu) என்ற நீக்ரோ இனத்தவர்; அவர்கள் வழங்கும் மொழி.

100. டிமெடெர் (Demeter) கிரேக்கப் பழம் புராணங்களில் வரும் உழவு மற்றும் பயன் அளிக்கும் கடவுள்.

101. டிராப்பியன் (Trappian rock) ராக் ஒரு வகை அடுக்குப் பாறை.

102. டாரியஸ் (Darius) கி.மு.588 முதல் 486 வரை பர்ஷிய நாடாண்ட அரசன்.

103. டெல்பி (Delphi) கிரீஸ் நாட்டின் நடுப்பகுதியில், தெய்வ வாக்குக் கூறப்படுவதாகப் (அதாவது குறி சொல்லப் படுவதாக) புகழ் பெற்ற பழம்பெரு நகர்.

104. டேடன் (Dedan) பாரசீக வளைகுடாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று. 105. டொங்-கிங் (Tong-King) பிரென்சு-இந்தோ சீனாவின் பழைய மாநிலம். கி.பி. 1946-ல் வியட்நாம் நாட்டின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது.

106. டொமிடியன் (Domitian) கி.பி.31 முதல் 96 வரை அரசாண்ட உரோமப் பேரரசன்.

107. டோடொனா (Dodona) தொல் பழங் கிரேக்க நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருந்த பழம்பெரும் நாட்டில், சீமை ஆல் அல்லது கருவாலி மரங்கள் நிறைந்த சோலையில் யூதர்களுக்குத் தெய்வ வாக்குக் கிடைக்கும் இடமாகப் புகழ் பெற்ற ஒரு நகரம்.

108. ட்ரோஜன் (Trojan) வடமேற்குச் சிற்றாசியாவில் இருந்த தொல் பழம் நகராகிய டிராயில் (Troy) இருந்த தொல் பழங்கால மக்கள். பண்டைக் கிரேக்க வீரகாப்பியக் கதைக் களமாய்த் திகழ்ந்தது டிராய் நகர். "பிரியம்" என்ற அரசன் மகள் பாரிஸ் என்பவனால் கடத்தப்பட்ட மெனெலாயஸ் (Menelaus) மன்னன் மனைவி ஹெலன் (Helan) என்பவனை மீட்பதற்காகக் கிரேக்கர் தொடுத்த போர் நடந்த இடமாகும்.

109. டெளடோனிக் (Teutonic) வட ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மானியர் உட்பட உள்ள தொல் பழங்குடியினர்.

110. டைகிரீஸ் (Tigris) துருக்கி மற்றும், இராக் நாடுகளில் ஓடி, யூப்பிரடஸ் ஆற்றோடு அது, பாரசீக வளைகுடாவில் விழும் முன் கலக்கும் ஒர் ஆறு.

111. டெர்மிலோயி (Termiloi) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியர் அவர்களால், தென் ஆசியாவின் தெற்கில் இருந்ததாகக் கூறப்படும் ‘சொலிமி’ (Solimi)யை அடுத்திருந்த ஒரு நிலப்பகுதி. 112. தகோபா (Takoba) தூர கிழக்கு நாடுகளில் ஒன்றான மலைய தீபகற்பத்தில் உள்ள ஓர் ஊர்.

113. தாஸ்மானியா (Tasmania) ஆஸ்திரேலியாவுக்குத் தென் கிழக்கில் உள்ள ஒரு தீவு.

114. தாய்லாந்து (Thailand) தென்கிழக்கு ஆசியாவில், வங்காள விரிகுடா மற்றும் சயாம் வளைகுடாப் பகுதியில் உள்ள ஒரு நாடு.

115. நீம்ராட் (Nimrod) கிறித்தவ விவிலிய நூலில் வரும் "குஷ்" என்பான் மகன். நல்ல வேட்டையாளன்.

116. நியோலித்திக் (Neo-Lithic) புதிய கற்காலம். மெருகேற்றப்பட்ட கல்லில் செய்யப்பட்ட படைக் கலங்களைக் கையாண்ட காலம்.

117. நின்லில் (Ninlil) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் ஆண் நிலத் தெய்வம் என்லில் (Enli) என்பான் மனைவி.

118. நீரோ (Nero) கி.பி. 54 முதல் 68 வரை ஆட்சியில் இருந்த உரோமப் பேரரசன்.

119. நெக்கோ (Necho) சூயஸ் கால்வாயை வெட்டத் தொடங்கிய எகிப்திய மன்னன்.

120. நெகிரிட்டோ (Negrito) கிழக்கிந்தியத் தீவுகள், பிலிபைன்ஸ், மற்றும ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் பல்வேறு வகை நீகிரோ இனத்தவர்.

121. நோஅக் (Noah) விவிலியக் கதையில் கூறுமாறு, ஊழிப் பெருவெள்ளத்தின் போது இறைவன், தன் அருளால் ஆற்றலால் படைத்த தோணியை ஓட்டியவர். 122. ப்யூனன் (Funan) இன்றைய தாய்லாந்து, அன்றைய சயாம் வளைகுடாவின் கரையில் உள்ள ஒரு நகரம்.

123. "ப்யூம்" (Fayum) எகிப்தின் வடக்கு மாநிலம்.

124. ப்ரான்சி பொதா (Branchi poda) பொதா தட்டையான இலை போலும் உறுப்புகளைக் கொண்ட நண்டு நத்தை போலும் கெட்டியான மேல் தோடுகளைக் கொண்ட, கடல் வாழ் உயிரினங்களோடு உறவுடைய உயிரின வகை.

125. பதான்ஸ் (Pathans) ஆப்கானிஸ்தானத்து முஸ்லிம் இனம்.

126. பஹரேயின் (Bahrein) பாரசீக வளைகுடாவில் உள்ள தீவுக் கூட்டம்.

127. பாரஒக் (Pharoh) எகிப்தியத் தொல்பழக்கால மன்னர்களின் பட்டப்பெயர்.

128. பிலாஸ்கி (அ) பிலாஸ்கியன் (Pilasgi or Pilasgian) கிரேக்கம் மற்றும் அதன் அண்டை நாடுகளில் வாழ்ந்தவராகக் கருதப்படும், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, கிரேக்க மொழியல்லாத மொழி பேசிய ஒரு மக்கள் இனம்.

129. பாலியோலித்திக் (Paleolithic) பழங் கற்காலத் தொடக்க காலம். புதிய கற்காலம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட காலம்.

130. பலுஜிஸ்தான் (Baluchistan) மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு நாடு.

131. பஹாலிக் கல்ட் (Phallic Cult) படைப்பு ஆற்றல் சின்னமாக, இலிங்க வடிவை வழிபடும் வழிபாட்டு நெறி. 132. பாக்ட்ரியன் (Bactrian) இன்றைய ஆப்கானிஸ்தானத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த தொல்பழம் நாட்டின் மக்கள், அவர்கள் பண்பாடு.

133. பாபிலோனியன் (Babylonian) தென்மேற்கு ஆசியாவில், துருக்கி, சிரியா, இரான் வழியாக ஓடிக் கருங்கடலில் கலக்கும் யூபிரடஸ் ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள தொல் பழம் பேரரசு நிலவும் நாட்டு மக்கள் மற்றும் அம்மக்கள் நாகரீகம்.

134. பார்த்தியன்ஸ் (Parathians) இராக் இரான் நாடுகளுக்கு வடக்கில் உள்ள காஸ்பியன் என்ற உள்நாட்டுக் கடலுக்குத் தென்கிழக்கில் இருந்து தொல் பழங்கால நாடும் மக்களும்.

135. பாலி (Bali) கிழக்கிந்தியத் தீவுகளில், ஜாவாவுக்குக் கிழக்கே உள்ள ஒரு தீவு.

136. பாலிஒண்டாலஜி (Paleontology) மர இனம், மா வினங்களின் அடிப்படையிலான நிலஇயல் ஆய்வின் படி, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து நிலையைக் கணிக்கும் அறிவு.

137. பாலினெஸ் (Balinese) பாலி நாட்டு மக்கள் அவர்கள் பண்பாடு.

138. பிரிட்டிஷ் நிம்ராட் (British Nimrod) தென்மேற்கு ஆசியாவில் யூபிரடஸ் ஒட்டிய சுமேரிய நாட்டு நகரங்களில் ஒன்று.

139. (அ) பிலின்ட் சில்லுகள் (Flint Flakes) மத்திய பாலியோ - லிதிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட முனைகள் சீர் செய்யப்பட்ட தொழில் செய்கருவிகள். ஐரோப்பாவில், மத்திய கற்காலத்தில் சீர்செய்து செதுக்கப்படா நிலையிலேயே பயன்படுத்தப்பட்டன. 140. ப்ய்லோன் (Pylon) எகிப்தியக் கோயில்களின் கோபுர வாயில்.

141. பிளைனி (Pliny) கி.பி.23 முதல் 79 வரை வாழ்ந்திருந்த உரோம் நாட்டு எழுத்தாளர்.

142. புன்ட் (Punt) எகிப்தியர்களின் தொல் பழங்கால வாழிடம். கி.மு. 2750 முதல் வாணிக நிலையம். டோமாலி கடற்கரையில் இருந்தது.

143. பெட்ரா (Petra) ஜோர்டன் ஆற்றுப் பகுதியில் உள்ள அரபு நாட்டின் பழைய நகரம்.

144. பெரு (Peru) தென் அமெரிக்காவில் பசிபிக் கடற்கரையைச் சார்ந்த நாடு.

145. பெல்லேரோ போன் (Bellerophon) கிரேக்க நாட்டுப் பழங்கதைகளில் தென் கிரேக்கத்தில் இருந்த ஆடம்பர வாழ்க்கைக்கும், வாணிகத்திற்கும் பெயர் பெற்ற கோரித் (Corith) நகரை ஆண்டவனும், அறிவாற்றலும், பேராசையும் கொண்ட சிஸ்ய்பஹுஸ் (Sisyphus) மன்னனின் பெயரனுமாவன்.

146. பொலினீஷியா (Polynesia) பசிபிக் பெருங்கடலில் பரவலாகக் கிடக்கும் தீவுக்கூட்டம்.

147. பொய்னிஷியர் (Phoenicians) மத்திய தரைக் கடலைச் சார்ந்து, இன்றைய சிரியா மற்றும் பாலஸ்தீனத்துத் தொல் பழங்காலத்து நாட்டில் வாழ்ந்தவர். கடல் ஓட வல்ல வணிகர்.

148. போர் பெரிடிக் (Porpheitic) கரும்சிவப்பு, ஊதா வண்ண எகிப்தியப் பாறை.

149.போர்னியோ (Borneo) கிழக்கிந்தியத் தீவுக் கூட்டங்களில் மிகப் பெரிய தீவு. 150. போஸிடொன் (Poseidon) கிரேக்கப் பழங்கதைகளில் வரும் கடல் தெய்வம்.

151. மக்காய் (Mackay) ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு துறைமுகம்.

152. மங்கோலிட் (Mangoloid) மத்திய ஆசியாவைச் சேர்ந்த மஞ்சள் நிற மேனி, கறுத்துக் குந்தி நிற்கும் மயிர், சாய்ந்த பார்வை உடைய மக்கள் இனத்தவர்.

153. மருடுக் (Marduk) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் தலையாய கடவுள்.

154. மலேஷியா (Malaysia) கிழக்கிந்தியத் தீவுக்கூட்டம்.

155. மலேயா (Malaya) தூரக்கிழக்கில், தாய்லாந்து உள்ளிட்ட ஒரு தீபகற்பம்.

156. மவோரி (Maori) பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்குத் தென்கிழக்கில் உள்ள நியூஸிலேண்ட் (New Zealand) நாட்டின், தொல் பழங்குடியினராம் பழுப்பு நிற மேனி மக்கள் மற்றும் அவர்கள் வழங்கும் மொழி.

157. மார்க்கோ-போலோ (Marco Polo) கி.மு. 1254 முதல் 1224 வரை வாழ்ந்திருந்தவன்.இத்தாலி நாட்டுத் தொல் பழங்கால மாநிலமாம் வெனீஸ்யாவைச் சேர்ந்தவன். உலகம் சுற்றி வந்தவன்.

158. மிட்டானி (Mitanni) யூபிரடஸ் ஆற்றின் வளைவில் உள்ள தொல் பழம் நாடு. கி.மு. 15ஆம் நூற்றாண்டில் எகிப்தோடு போரிட்டுக் கொண்டிருந்த நாடு.

159. முண்டா (Munda) பர்மா மற்றும் மலேயத் தீவுகளில் வழங்கிய தொல் பழமொழி. 160. முஸ்காட் (Muscat) அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையில் உள்ள ஒமன் வளைகுடாவை அடுத்து உள்ள ஓமன் நாட்டுத் தலைநகர்.

161. மெக்ஸிகோ (Mexico) வட அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கில் உள்ள நாடு.

162. மெம்பிஸ் (Memphis) எகிப்தில் நைல்நதி, மத்திய தரைக் கடலோடு கலக்குமிடத்தில் உள்ள தொல் பழங்கால நகர். ஒரு காலத்தில் எகிப்தின் தலைநகராகவும் இருந்தது.

163. மெர்கா (Merca) இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடாவை அடுத்து, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள டோமாலி நாட்டில் உள்ள ஒரு நகரம்:

164, மெஸபொடாமியா (Mesopotamia) தென்மேற்கு ஆசியாவில், டைகிரிஸ், யூபிரடஸ் ஆறுகளுக்கு இடையில் இருந்த தொல் பழம் நாடு. இன்றைய இராக் நாடு.

165. மித்திராயிச் சமயம் (Mithraic Religom) பர்ஷிய நாட்டில், தொல் பழங்காலத்தில் இருந்த ஒளி, உண்மைகளின் கடவுளாகக் கருதப்பட்ட மித்ராவை வழிபடும் சமயம்.

166. மெலனேஷியா (Melanesia) தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி (Fiji) தீவு உள்ளிட்ட தீவுக் கூட்டம்.

167. மேகாலித் (Megalith) வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தொல் பழங்காலத்தில், நினைவுச் சின்னங்கள் அல்லது கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்டபெரிய பாறாங்கல்.

168. மோன்-க்மெர் (Mon-Khmer) இந்தோ சீன நாட்டில் வழங்கும் மொழிக் குடும்பம். 169. மெலெனேஷியர் (Melanesians) ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில் உள்ள பவளத்தீவாம் மெலெனேஷியத் தீவில் வாழும் மக்கள்.

170. மினோயன் (Minoan) மத்திய தரைக் கடலில் உள்ள கிரேக்கத் தீவாம் கிரீட்டில் (Crete) கி.மு. 3000 முதல் 1100 வரை நிலவியிருந்த வரலாற்றுக்கு முந்திய பண்பாடு.

171. யுகாட்டன் (Yucatan) வட அமெரிக்கத் தீப கற்பத்தில், மெக்ஸிகோ வளைகுடா வரை நீண்டு இருக்கும் ஒரு நாடு.

172, யேமன் (Yemen) தென்மேற்கு அரேபியாவில் செங்கடல் பகுதியில் உள்ள நாடு.

173. வில்லா (Villa) இத்தாலி நாட்டில் சிற்றூரில் உள்ள வீடுகளைக் குறிக்கும் பெயர்.

174. வெஸ்பாஸியன் (Ves-pa-sian) கி.பி. 69 முதல் 79 வரை ஆண்ட உரோமப் பேரரசன்.

175. வோகன் (Vocan) பிரென்ச்-இந்தோசீனாவில், அன்னம் என்னும் மாநிலத்தில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருதக் கல்வெட்டில் காணப்படும் ஒரு நகரம்.

176. ஜென் (ZEN) போதி தர்மன் என்ற பெயர் பூண்டு, சீனா சென்ற காஞ்சிச் சிற்றரசன். அங்கு போதித்த தியானத் தத்துவத்திற்கு அங்கு இடம் பெற்ற பெயர்.

177. ஜூலுஸ் (Zulus) தென்ஆப்பிரிக்கா, நெட்டால் பகுதியில் வாழ்ந்திருந்த பண்டு (Bantu) என்ற நீக்ரோ இனத்தவர், மற்றும் அவர்கள் வழங்கிய மொழி.