தமிழ்ப் பழமொழிகள் 2/கூ

விக்கிமூலம் இலிருந்து



கூ

கூ என்றவன் பேரில் கொல்லச் சினம். 9185


கூகைக்குப் பகலில் கண் தெரியாது.

கூகை விழித்தாற்போல் விழிக்கிறான்.

கூச் கூச் என்றால் நாய் மூஞ்சியை நக்குமாம்.

கூட்டத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல.

கூட்டம் பெருத்தால் குசுப் பெருக்கும். 9190


கூட்டு வியாபாரம் குடுமிப் பிடி.

கூட்டோடு கயிலாயம் சேர்ந்தாள் காரைக்கால் அம்மை.

கூட்டோடு போச்சுது குளிரும் காய்ச்சலும்.

கூட இருந்து கொண்டு கொள்ளியைச் செருகலாமா?

கூட இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார். 9195


கூடிக் குடியிருந்து கொண்டு கொள்ளி சொருகலாமா?

கூடத்தைக் கொடுத்தாலும் மாடத்தைக் கொடுத்தல் ஆகாது.

(கெடுத்தல்.)

கூடப் பிறந்தவனைக் கோள் சொல்லிக் கொல்லுகிறதா?

கூடம் ஒன்று போடும் முன்னே சுத்தி இரண்டு போடும். கூடம் இடிந்தால் மாடம். 9200


கூடி இருந்து குலாவுவார் வீட்டில் ஓடி உண்ணும் கூழும் இனிது.

கூடி இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார்.

கூடி எல்லோரும் தூக்கி விடுங்கள்; பிணக்காடாய் வெட்டிக் குவித்துப் போடுகிறேன் என்றான்.

கூடி வருகிற காலத்தில் குடுமி நட்டமா நிற்குமாம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, 9205

(வாழ்வது.)



கூடு இருக்கக் குருவி போன மாயம் என்ன?

கூடு புருவம் குடியைக் கெடுக்கும்.

கூடும் காலம் வந்தால் தேடும் பொருள் நடு மடியிலே.

கூடு முடி குடியைக் கெடுக்கும்.

கூடைக் கல்லும் பிள்ளையாரானால் எந்தக் கல்லைக் கும்பிடுகிறது? 9210


கூடை கூடையாகக் கொடுத்தாலும் குறை நீங்காது.

கூடை நகையும் குச்சிலிப் பொட்டும்.

கூடையைச் சுட்டுக் கரியாகுமா? கூந்தலைச் சுட்டுக் கரியாகுமா?

(மயிரை.)

கூண்டில் அகப்பட்ட புலிபோல்.

கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும். 9215


கூண்டோடு கைலாசம்.

கூண்டோடு போயின குளிரும் காய்ச்சலும்.

கூத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கரிசிக்காரிக்கு வழி இல்லை.

(கூத்தரிசிக்காரி. வழி ஏது? வழி இல்லை.)

கூத்தன் என்றும் கோழி என்றும் சொல்கிறார்களா?

கூத்தாட்டுச் சிலம்பம் படைவெட்டுக்கு ஆகுமா? 9220

(கூத்தாடி சிலம்பம்.)


கூத்தாடிக் கணவன் வயிற்றைக் கெடுத்தாள்; வாய்ப்பட்டி மாமியார் வாயைக் கெடுத்தாள்.

கூத்தாடிக்கு ஒரு குரங்கு கிடைத்தாற் போல.

கூத்தாடிக்குக் கீழே கண்; கூலிக்காரனுக்கு மேலே கண்.

கூத்தாடிக்கு மீசை எதற்கு?

கூத்தாடிக்கு முறை இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை. 9225


கூத்தாடிக் குரங்கு ஆகாமலும் சூதாடித் தோற்காமலும்.

கூத்தாடிகளில் பெரியவர்; கூட்டத்தில் சிறியவர்.

கூத்தாடி கிழக்கே பார்த்தான்; கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

கூத்தாடி குண்டாகரணம் போட்டாலும் பிண்டச் சோற்றுக்கு மன்றாட்டம்.

கூத்தாடி சிநேகம் குடியைக் கெடுக்கும். 9230

கூத்தாடி சிலம்பப்படை வெட்டுமா?

கூத்தாடிப் பெண்ணுக்குச் சூதாடிக் கணவன்.

கூத்தாடுவதும் குண்டி நெளிவதும் ஆற்றாதவன் செயல்.

(யாழ்ப்பான வழக்கு.)

கூத்திக் கள்ளன் பெண்டாட்டியை நம்பமாட்டான்.

கூத்திக் கள்ளனுக்குக் குணம் ஏது? 9235


கூத்திக்கு இட்டுக் குரங்கானான்; வேசிக்கு இட்டு விறகானான்.

(கொடுத்து.)

கூத்திக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத் தக்க படல்.

கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும்; கூத்தியார் செத்தால் ஒன்றும் இல்லை.

கூத்தியார் செத்தால் குறுங்கட்டில் வெறுங்கட்டில் ஆகுமா?

கூத்தியார் செத்தால் பிணம்: அவள் ஆத்தாள் செத்தால் மனம். 9240

(தாய்.)


கூத்தியார் பிள்ளைக்குத் தகப்பன் யார்?

கூத்தியார் போனால் குறுங்கட்டில் வெறுங்கட்டில்.

கூத்தியார் வீட்டுக்கு நாய் போல் அலைகிறான்.

கூத்தியாருக்கு வழி அற்றவன்.

கூத்திலே கோணங்கி வந்தாற் போல, 9245


கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது.

கூத்துக்கு ஏற்ற கோமாளி போல.

கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத் தக்க படல்.

கூத்துக்குப் பந்தம் பிடித்தாற் போல.

கூத்துக்குப் பீத்துக் கட்டினாற் போல. 9250


கூத்துக்குப் புகுந்தவன் கொட்டுக்கு அஞ்சித் தீருமா?

கூத்துக்கு மீசை சிரைக்கவா?

கூத்து நெல்லுக் குத்துகிற வீட்டில் வாய்க்கரிசிக்கு வழி இல்லை.

கூத்துக்குப் போனஇடத்தில் தேள் கொட்டினது போல.

கூத்துக்குப் போன இடத்தில் பேய் பிடித்தது போல. 9255


கூந்தல் அழகி. கூப்பிட்டாள் பந்தலிலே.

கூந்தலும் குடலும் கொண்டது கொள்கை.

 கூப்பாடு போட்டால் சாப்பாடு வருமா?

(கூப்பிட்டால் சாப்பாடு ஆகுமா?)

கூப்பிடப் போன தாதி மாப்பிள்ளையைக் கைக்கொண்டாள்.

(மாப்பிள்ளை கூடப் போன கதை.)

கூர்ச்சம் போல நிற்கிறான். 9260

கூர்ந்து கவனித்தால் குதிரையும் கழுதையாகத் தெரியும்.

கூர்மத்தை நம்பிக் குடிகெட்டுப் போனேன்.

(கூர்மம்-கூர்மபுராணம்.)

கூர்மையாளனே நேர்மையாளன்.

கூரிய சொல்லான் ஆரினும் வல்லான்.

கூரியன் ஆயினும் வீரியம் பேசேல். 9265

கூருக்கு எதிர் உதைத்தால் ஆர் எழ வருத்தும்?

(சூர் எழ.)

கூரை இட்ட நாள் முதல் தாள் முதல் தாரையிட்டு அழுதாள்.

(கூறை.)

கூரை இல்லா வீடு வீடு ஆகுமா?

கூரை ஏறிக் கோழி பிடிக்காதவனா வானம் ஏறி வைகுந்தம் காட்டுவான்?

(கோபுரம் ஏறி வைகுந்தம் போகப் போகிறான். கோழி பிடிக்காத குருக்களா?)

கூரைக் காய் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா? 9270


கூரை மீது ஓடும் குரங்கைப் பார்த்துக் கூட்டில் இருந்த குரங்கு விசாரித்ததாம்.

கூரைமேல் ஏறிக் குருவி பிடிக்காத குரு கைலாசத்துக்கு வழிகாட்டப் போனானாம்.

(வைகுந்தத்துக்கு, வானத்தைக் கீறி வழிகாட்டிப் போகிறாரோ?)

கூரைமேல் ஏறிக் கோணல் சுரைக்காய் அறுக்கத் தெரியாதவன் வானத்தைக் கிழித்து வைகுண்டம் காட்டப் போகிறானாம்.

கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் வரும்.

கூரையைப் பிரிக்கக் குரங்குக்குப் பிடி கடலை. 9275


கூலிக்காரன் பெண் சாதி குளி குளிக்கப் போகிறாளா? குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதா?

(முளைக்காமல்.)

கூலிக்கு அறுத்தாலும் குறுணிக்கு அறுக்கலாம்; வீணனுக்கு

அறுத்து வெளியிலே நிற்கிறேன்.

(வீணுக்கு.)

கூலிக்கு உழைக்கிறவனுக்கு ஆனைத் தாலியா?

கூலிக்குக் கழு ஏறுவார்களா?

(ஏற்பார்களா?)

கூலிக்குக் குத்துகிறவளைக் கேளிக்கை ஆடச் சொல்வது போல். 9280


கூலிக்குக் குத்துவாள் பிள்ளைக் குத்தவிடு பஞ்சமா?

கூலிக்கு தாலி அறுப்பாரும் இல்லை; மேலைக்கு இருப்பாரும் இல்லை.

கூலிக்கு நாற்று நட வந்தவனுக்கு எல்லைக்கு வழக்கோ?

கூலிக்கு நெல் குத்தலாமாம்; கைமூலம் தெரியக் கூடாதாம்.

கூலிக்குப் பாவம் குறுக்கே. 9285

(வந்தது. பாவி குறுக்கே வந்தான்.)


கூலிக்குப் போனாலும் குறுணி நெல் கிடைக்கும்.

கூலிக்கு மார் அடிப்பது.

கூலிக்கே குத்துவதானாலும் கமுக்கட்டு மயிர் தெரியாமல் இருக்குமா?

கூலி குறைத்தாயோ? குறை மரக்கால் இட்டாயோ?

கூலி குறைத்தால் வேலை கெடும். 9290


கூலிப் படை குத்துமா? கூவத்தைக் கண்டு கடல் ஒத்துமா?

கூலிப் படைவெட்டுமா?

கூலியும் கொடுத்து எதிர் மூச்சும் போட்டாளாம்.

(போடுகிறது.)

கூலியைக் குறைக்காதே; வேலையைக் கெடுக்காதே.

கூவுகிற கோழிக்கும் குந்திக் கொண்டு இருக்கிற அம்மையாருக்கும் என்ன வேலை? 9295


கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக் கொண்டவன் பிழைப்பான்.

கூழ் ஆனாலும் குளித்துக் குடி, கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு.

கூழ் என்றாலும் குடிக்கிறவன் பிழைப்பான்.

கூழ் என்றாலும் வாழ்வுக்குத் தக்கதாகக் குடிக்கத்தான் வேண்டும்.

(வாழ்வுக்குத் தக்கதென்றால்.)

கூழ் குடிக்காத பொட்டை, கேழ்வரகு ஏண்டா நட்டாய்? 9300

கூழ் குடிக்கிறாயா அப்பா? குறுணி குடிப்பேன் குப்பா.

கூழ் குடித்த குழந்தை குந்தாணி.

கூழ் குடித்தவன் ஆனான்; குந்தித் தின்றவன் குடியால் மடிந்தான்.

கூழ் குடித்தால் குந்தாணி, கஞ்சி குடித்தால் கழுக்காணி.

கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்க வேண்டும். 9305

(குட்டு-இரகசியம்.)


கூழ் குடித்தாலும் கூட்டு ஆகாது.

கூழ் சுடுகிறது, கீரைக்குக் கேடு.

கூழ் சுடுகிறதென்று ஊதிக் குடிக்கிற வேளை.

கூழ்ப் பதனிப் பானையில் கைவிட்டவன் விரலைச் சப்பாமல் வேட்டியிலா துடைப்பான்?

கூழ் புளித்தது, பால் கூடப் புளித்ததென்று விட்டு விடாதே. 9310


கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமல் சொல்லலாமா?

கூழாய் இருந்தாலும் மூடிக் குடி.

கூழிலே விழுந்த ஈ குழம்புகிறது போல.

கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும் பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும் ஒரே அழுகை.

(விதனம் ஒன்றே.)

கூழுக்குக் குட்டிச் சுவரோடு போனவனே! 9315


கூழுக்குக் குறடு மாங்காய்.

(மிளகாய்.)

கூழுக்குப் பாடிக் குடியைக் கெடுத்தான்.

கூழுக்கும் ஆசை; மாவுக்கும் ஆசை.

கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.

கூழுக்கும் கொழுக்கட்டைக்கும் ஒன்றே குறி. 9320


கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்; குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.

கூழுக்கு மாங்காய் தோற்குமா?

கூழும் பஞ்சமோடி? கொடுமை மாமியாரே!

கூழைக் குடிக்கிறாயா அப்பா? குறுணி குடிப்பாய் அப்பா!

கூழைக் குடித்தாலும் குப்பையைச் சுமந்தாலும் குப்பைக் காட்டுப் பெண் ருக்குமிணி; பாலைக் குடித்தாலும் பட்டுக்கட்டினாலும்பட்டணத்துப் பெண் பறக்கை. 9325

(பட்டணத்துப் பெண் தட்டுவாணி.)


கூழைக் கும்பிடு.

கூழை குடியைக் கெடுக்கும்; குட்டைக் கலப்பை காட்டைக் கெடுக்கும்.

கூறி விற்காதே; தேடி வாங்காதே.

கூறு கெட்ட மாட்டுக்கு ஆறு கட்டுப் புல்லா?

கூறையும் தாலியும்.

கூனனைக் கொண்டு குழப்படி மகளே, காணிக்குப் பேரப்பிள்ளை. 9330

(குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற.)


கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்.

கூனியூர் சென்றால் இங்கிருந்தே கூனிக் கொண்டா போக வேண்டும்?

கூனி வாயால் கெட்டது போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/கூ&oldid=1160280" இலிருந்து மீள்விக்கப்பட்டது