தமிழ்மொழி இலக்கிய வரலாறு/ஐங்குறுநூறு

விக்கிமூலம் இலிருந்து

10. ஐங்குறுநூறு

முன்னுரை

இது மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட ஐந்நூறு பாக்களை உடையது. இந்நூல் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவிலும் நூறு செய்யுட்கள் உள்ளன. அவை அத்திணைக்குரிய ஒழுக்கம் பற்றியவை. ஒரம்போகியார் மருதம் பற்றிய பாக்களையும், அம்மூவனார் நெய்தல் பற்றிய பாக்களையும், கபிலர் குறிஞ்சி பற்றிய பாக்களையும், ஓதல் ஆக்தையார் பாலைபற்றிய பாக்களையும்: பேயனார் முல்லை பற்றிய பாக்களையும் இந்நூலில் பாடி புள்ளனர்.

இந்நூலை முதன் முதலில் வெளியிட்டவர் டாக்டர் உ. வே. சாமிநாதையராவர். அண்மையில் திருப்பனந்தாள் காசி மடத்துப் பொருள் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார், பேராசிரியர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்களைக் கொண்டு விரிவான முறையில் புதிய பதிப்பு (மூன்று பகுதிகளாய்) வெளியிட்டுள்ளனர். இப்புதிய பதிப்பு மிக்க பயனுடையது; பாராட்டுக்குரியது.

ஐங்குறுநூற்றுப் புலவர்கள் : மருதம் பாடிய ஒரம் போகியார், ஆதன் என்னும் சேர மன்னனையும் அவன் வழி வந்த அவினியையும் தம் பாக்களில் வாழ்த்தியிருத்தலால் அவினி என்ற சேர மன்னன் காலத்தவராகலாம். இவர் தம் காலச் சோழ பாண்டியரையும், மத்தி, விரான் என்ற சிற்றரசர்களையும் கண்டு பழகியவர் என்பது இவர் பாக்களிலிருந்து தெரிகிறது.

நெய்தல் பாடிய அம்மூவனார் சேரநாட்டுக் கடற்கரை ஊர்களாகிய தொண்டி, மாந்தை என்னும் ஊர்களை வளம்படப் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள தொண்டிப் பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கபிலர் குறிஞ்சித்திணை பாடுவதில் இணையற்றவர். இவர் பாடல்கள் சொற்செறிவும் பொருட் செறிவும் உடையவை.

பாரி பற்றிய பாக்களைப் பாடியவர் ஓதல் ஆந்தையார் என்பவர். ஓதல்-ஓதலூர். ஓதலூர் குட்ட நாட்டிலுள்ளது. இவர் பாலைத் திணையில் உள்ள மரங்கள், பூக்கள் இவை இவை என நன்கு பாடியுள்ளார்.

முல்லை பற்றிப் பாடிய பேயனார் சிறந்த புலவர் என்பது அவர் பாக்களாற் புலனாகிறது. சேர நாட்டில் சிறைக்கல் வட்டத்துப் பையனுார் முற்காலத்தில் பேயனுர் என வழங்கப்பட்டது. சேரமான் இமய வரம்பனைப் பாடிய கண்ணனார் பெயரால் கண்ணனூர்' என்பதும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய காக்கை பாடினியார் பெயரால் 'காக்கையூர்' என்பதும் தோன்றினாற்போல, இப்பேய னாரைச் சிறப்பித்தற்குப் பேயனுர் தோன்றியிருக்கலாம். மேலும் பேயன் என்ற பெயர் சேர நாட்டுக் கல்வெட்டு களில் காணப்படுகின்றது. எனவே, முல்லை பாடிய பேயனார் சேர நாட்டினர் என்று கருதலாம்.1

பேரரசரும் சிற்றரசரும்:

ஐங்குறுநூற்றுப் பாடல்களில் ஆதன் அவினி (செ. 1-10). குட்டுவன் (178) என்ற சேர வேந்தரும், கடுமான் கிள்ளி (78) என்ற சோழ மன்னனும், தென்னவன் (54) , தேர்வண் கோமான் (55), கொற்கைக் கோமான் (188) என்ற பாண்டிய அரசனும் குறிக்கப் பெற்றுள்ளனர்; விரான் என்ற சிற்றரசன் சேரநாட்டு இருப்பையூரைச் சேர்ந்தவன்; வரையாது வழங்குபவன் (58), மத்தி என்பவன் ஒரு சிற்றரசன்; கொடையிற் சிறந்தவன். கழாஅர் என்னும் ஊருக்குத் தலைவன் (செ. 61).

1 ஐங்குறுநூறு மூலமும் விளக்க வுரையும், பக். 194-5. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஊர்கள்: இந்நூலில் கீழ்வரும் ஊர்கள் இடம் பெற்றுள்ளன: தேனூர் (54), சோழர் ஆமூர் (56) , இருப்பை (58) , மத்தி கழாஅர் (61) , தொண்டி (171) , கொற்கை (185), ஊர்களின் பொதுப் பெயர்களாகப் பேரூர்(77) , நல்லூர் (2.98) , மூதூர் (372) , சீறுார் (382), பாக்கம் (முல்லை நிலத்து ஊர்-439), வயலூர் (459) என்பவை: இடம் பெற்றுள்ளன.

பேரூர் என்பது ஊரினும் பெரியது; 'சீறுார்’ என்பது ஊரினும் சிறியது. 'மூதூர்’ என்பது காலப்பழமை வாய்ந்த ஊர் எனப் பொருள்படும். சங்கப் பாக்களிலேயே ஓர் ஊர் 'மூதூர்' எனப்பட்டது எனின், அவ்வூரின் பழமையை: எண்ணிப் பார்த்தல் வேண்டுமல்லவா?

சிறப்புச் செய்திகள்

பாசறை என்பது அரசரும் அமைச்சரும் போர் புரியத் தங்கியிருக்கும் இடம். படைத்தலைவரும், வீரரும், இயவரும் உள்ள இடம் பாடி என்பது. போர் நிகழ்ச்சியின் பெருமை, காலம் முதலிய நிலைமை நோக்கித் தக்கவாறு பெருக்கி அமைக்கும் பாடி இருக்கை கட்டூர் என்பது (445). இங்ஙனம் இவை வேறு வேறு காணப்படினும், பொதுவகையில் " 'பாசறை' என்ற இடத்து இவை யாவும் அடங்கிவிடும். இவை காலப்போக்கில் ஊர்களாக மாறுதலும் உண்டு. திரு எதிர்கொள்பாடி, பெருங்கட்டூர் என்னும் ஊர்களின் பெயர்கள் பாடியையும் கட்டூரையும் நினைவூட்டுதலைக் காணலாம் ?2

குறிஞ்சி நிலத்தில் முருகன் வணக்கம் நடைபெற்றது. குறவன் தன் உறவினருடன் மழைவேண்டும் எனக் கடவுளை வேண்டுவான் (251). மகப்பேறு இல்லாத குறவன் கடவுளை வேண்டி மகனையோ மகளையோ பெறுவான்:

2 க்ஷ, பக்.971

(257) . குறமகள் வேங்கை மலர்களைக் கொண்டு கோவிலில் உள்ள இறைவனைப் பூசித்து விழிநீர் வார வழிபடுவாள் (269).

உண்ணுநீர் கொள்ளும் துறையில் தெய்வம் உறையும், அது மக்களுக்கு நோய் செய்யும் என்று அக்காலத்தார் நம்பினர் (28). அம்மக்கள் ஊழ்வினையில் நம்பிக்கை. கொண்டவர்கள் என்பதைப் பல பாடல்கள் உணர்த்துகின்றன. (110, 374, 378); தவத்திலும் நோன்பிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர் (111, 365). ஊரிலுள்ள குளத்தில் தைத்திங்களில் இளமகளிர் நீராடி நோற்பது சங்க கால வழக்கம் (84). இதனை மார்கழி நீராடல் என்றும் தைந் நீராடல் என்றும் பிற்காலத்தார் கூறுவது வழக்கம். இந்நோன்பு பற்றிய விளக்கம் 'பரிபாடல்' என்னும் பகுதியில் விரித்துரைக்கப்படும். ஊரில் இந்திரவிழவு நடைபெற்றது என்று ஒரு செய்யுள் (62) கூறுகின்றது.

அணிகள்: ஐங்குறுநூற்றுப் பாடல்களில் காணப்படும் அணிகள் சிலவேயாகும். அவை வளை (20), இழை (இழைத்துச் செய்யப்பட்டது-25), தொடி (83), காஞ்சி (176), சங்குவளையல் (196) , மணிப்பூண் (மணிகள் பதித்த, நகை-232) , மேகலை (306) , பாண்டில் (பொன்னால் வட்டமாகச் செய்யப்பட்டதோர் அணிவகை. இதனைச் சுற்றி மணிகள் கோத்து மேகலையோடு அணிதல் பண்டை மரபு -310), சிலம்பு, கழல் (388) .

பிற செய்திகள்: குடிமக்கள் நாடு காவற்பொருட்டு: அரசனை வாழ்த்துதல் மரபு (1) . கடல் துறையிலிருந்து கப்பல்கள் கடலில் ஓடின (192). கரை உடைந்து தீமை விளையாதிருக்கக் குளங்களுக்குக் காவலர்களை நிறுத்துதல் பண்டை மரபு. தினைப்புனத்தில் புலிபோல் உருவம் சமைத்து விலங்குகள் தினைப்பயிரை அழிக்காதபடி குறவர்


310 உரை, பக். 742, தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பார்த்துவந்தனர் (246) . குறிஞ்சி நில வீடுகள் புல்லால் வேயப்பட்டு இருந்தன (252) . ஊரைச் சேர்ந்து இருப்பது சேரி (297). சங்ககாலத்தில் நூறாயிரம் என்னும் எண்ணுப் பெயருக்கு மேலாகத் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் பேரெண்களும் வழக்கில் இருந்தன என்பது சங்கப்பாக்களால் தெரிகிறது. இந்நூலில் வெள்ளம் என்னும் பேரெண் குறிக்கப்பட்டுள்ளது (281). நள்ளிரவு 'நடுநாட் கங்குல்' (296) எனப்பட்டது. இதனால் பகல் பன்னிரண்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை உள்ள பொழுது பாதி நாளாகக் கணக்கிடப்பட்டது என்பது தெரிகிறது. இரவு பன்னிரண்டு மணியிலிருந்து மறுநாள் பகல் பன்னிரண்டு உள்ள பொழுது அடுத்த பாதிநாளாகும். எனவே, சங்ககால மக்கள் பகல் பன்னிரண்டு மணியி லிருந்தே தங்கள் நாளைக் கணக்கிட்டனர் என்பது தெளி வாகிறது. இஃது அறியத்தகும் அரிய செய்தியாகும். .மயில்கள் மழை வரவினை அறிந்து தோகையை விரித்து ஆடும் (298),

- போரில் இறந்துபட்ட மறவர்க்குக் கல் நடுதலும், அக் கல்லில் வீரன் உருவத்தையும் அவன் பெயரையும் பிற சிறப்புகளையும் பொறித்தலும் மரபு; அந்நடுகல் எழுத்துடை நடுகல்' எனப்பட்டது; அது வீரராலும் பிறராலும் பூசிக்கப்பட்டுவந்தது (352). செல்வர் பொன்கயிறு கொண்டு யானை கட்டுதல் வழக்கம் (356). பாலைநிலத்தில் செல்பவர் நெல்லிக்காயையும் பலாச்சுளையையும் உண்பது வழக்கம் (381) .

பாண்டில்-கால் நிறுத்திய விளக்கு. இந்நூலில் யவனர் பாவைவிளக்கு இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தகும்; தலைவன் தன் மகனுக்குத் தன் தந்தை பெயரை இட்டு அழைப்பது மரபு; அதனால் அம்மைந்தன் தந்தை பெயரன்" எனப்பட்டான், இவ்வழக்கு நாளடைவில். பெயரன்" எனக் குறைந்து வழங்கியது. அது இக்காலத்தில் 'பேரன்' என

மருவி வழங்கப்படுகிறது. மகளிர்க்கு இடக்கண் துடித்தல் நல்ல குறி 2.18).

விளையாட்டுகள் : பிள்ளைகள் சிறுதேர் உருட்டி விளையாடினர் (66, 403). சிறுமிகள் மணலால் பாவை செய்து நீர்த்துறையில் விளையாடினர் (69) . ஆடவரும் பெண்டிரும் புனலாடுதல் வழக்கம். தலைவன் பரத்தையோடு புனலாடுவான். தலைவி அதனையறிந்து ஊடல் கொள்வாள் (71,80) , நீரில் பாய்ந்து விளையாடல் பண்ணை பாய்தல்' (74) எனப்பட்டது. வண்டல் மண்ணைக்கொண்டு பாவை செய்து விளையாடுதல் சிறுமியர் வழக்கம். அப்பாவை 'வண்டல் பாவை' எனப்பட்டது (124) . சிறுமிகள் விரும்பி விளையாடும் ஒருவகை விளையாட்டுப் பொய்தல்' எனப் பெயர் பெற்றது. அதனை ஆடிமுடித்து இளமகளிர் குவிந்த வெண்மணலில் குரவை ஆடுவர் (181) . குரவை என்பது பெண்கள் எழுவர் அல்லது ஒன்பதின்மர் கைகோத்து ஆடும் விளையாட்டு வகை. மகளிர் பந்தாடுதல் வழக்கம் (295) . பெண்கள் கிளிகளை வளர்த்துப் பேசக்கற்பித்தல் வழக்க மாகும் (375) பெண்கள் பந்தும் பாவையும் ஆடுதல் போலவே கழங்கு வைத்தும் ஆடிவந்தனர் (377). பரத் தையர் வேழ மரத்தின் புழை பொருந்திய தண்டில் அஞ்ச னத்தைப் பெய்து வைப்பர் (செ. 16).

மேற்கோள் : ஐந்குறுநூற்றுச் செய்யுட்கள் சிறிய பாக்களாயிருப்பினும் தமிழ்வளம் செறிந்தவை; இனிமையும் எளிமையும் வாய்ந்தவை. பிற நூல்களுக்குத் தேவையான சொற்களையும் சொற்றொடர்களையும் வழங்கும் நிலையில் அமைந்தவை. சான்றாகக் கீழ் வருவனவற்றைக் காண்க: 1. தாழிருங் கூந்தல் வம்மதி விரைந்தே 411 தாழிருங் கூந்தல் தையால் நின்னை’’ -சிலப். காதை 2, வரி 80 2. கல்லேறு தழீஇ நாகுபெயர் காலை” 445 இளமணாஆி நாகுதழுவி ஏறுவருவன கண்டேன்' -

-அப்பர் தேவாரம் தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

3.'மா விருஞ் சோலை 353 மால் இருஞ் சோலை' பரிபாடல் . 'தேமொழி அரிவை தெளிந்திசின் யானே 466

4.'தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி'

    சிலம்பு,காதை 20வரி 68

5. 'அங்கண் இருவிசும் பதிர'

(469)

'அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்'

. -நாலடியார்,செ.51

6.'இரும்பொறை-பெரியமலை

                  431

பொறையன்-மலையன் சேர அரசர்க்குரிய பெயர்களுள் ஒன்று. இரும்பொறை மரபினர்-பெரிய மலை (நாட்டின் ஆட்சிக்குரிய) மரபினர். யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் பெயரைக் காண்க.

7. “பேரமர்க் கண்ணி 496.

பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே'

        -குறுந்தொகை 131

8. போதவிழ் கூந்தலும் பூவிரும் புகவே' 496

போதவிழ் செல்வி பொருந்துதல் விரும்பிய'

-மணி, காதை 18, வரி 26,

9. பொன்னேர் மேனி மடந்தை' 388. 'பொன்னார் மேனியனே' -சுந்தரர் தேவாரம்

அந்தணர் கூட்டுறவு : தலைவன் ஏறிவந்த குதிரையினது நெற்றிமயிர், சிலவாய மயிர் பொருந்திய குடுமியை ஒத்திருந்ததைக் கண்ட தோழி, தலைவியை நோக்கி, நம்மூரில் வாழும் பார்ப்பணச்சிறுவர்களைப்போல நம் தலைவன் ஊர்ந்து வந்த குதிரையும் குடுமி பொருந்திய தலையை உடையது. ’’ என்று கூறி நகைத்தாள்.

  • அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்

குடுமித் தலைய மன்ற நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே...' (202)

முன் குடுமியைப் பெற்றிருத்தல் பார்ப்பனருக்கு ஆசார விதி. முன் குடுமிச் சோழியா' என்பது காளமேகப் புலவரது பாடல் தொடர். "நம்மூர்ப் பார்ப்பனர்" என்று தோழி கூறுதலை நோக்க, ஐங்குறுநூறு செய்யப்பெற்ற காலத்தில் வடமொழியாளராகிய வேதியர் பல ஊர்களில் குடியேறி இருந்தமை தெளிவாகும். வேதம் ஒதுதலால் வேள்வி நடக்கும்-அதனால் வானம் பொய்யாது மழை பொழியும்-விளைபொருள் மிகும்-இல்லறம் சிறக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. அதனாற்றான், தலைவி நாட்டு நலத்தையும் வீட்டு நலத்தையும் நினைத்தபொழுது, பார்ப்பார் ஓதுக' (4) என்றாள். -

இங்ஙனம் வேதம் ஓதி வந்ததாலும் அறவொழுக்கம் பூண்டிருந்ததாலும் தமிழ் மக்கள் அந்தணரை மிக்க மரியாதை யுடன் நடத்திவந்தனர். அவருள் ஒரு சார் நன்மக்கள் தவக் கோலம் பூண்டு பலவூர்களுக்கும் சென்று வந்தனர். தலைவி தலைவனுடன் சென்றுவிட்டதை அறிந்து அவளைத் தேடிச் சென்ற செவிலி இங்ஙனம் யாத்திரையை மேற்கொண்ட அந்தணரைக் கண்டாள்: மிக்க மரியாதையுடன் அவர்களை அழைத்துத் தன் மகள் பற்றி வினவினாள்:

சேட்புல முன்னிய வசைகடை யந்தணிர் - நும்மொன் றிரந்தனென் மொழிவல்' (384) அறம்புரி யருமறை கவின்ற நாவின் திறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவல் (387) அந்தணர் தவம், வேள்வி, நோன்பு இவற்றை மேற் கொண்டமையால் தமிழகத்துச் சமய வாழ்வில் பெரும்பங்கு கொள்ளலாயினர். அதனால் அவர்கள் சொல்லிவந்த தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கதைகளும், வடமொழி இலக்கண முறைகள் சிலவும் செல்வாக்குப் பெற்றன. "அருந்ததி அனைய கற்பு’ (442) என்பது வடநாட்டுக் கதைகளுள் ஒன்றாகும். அந்தாதி முறையிற் பாடுவதும் அவர் வழக்கேயாகும். அந்தாதி (அந்தம்-1ஆதி) என்ற தொடரே வடசொல் தொடராகும்,

இங்ஙனமே அவர் பயன்படுத்திவந்த வடசொற்களும் தமிழகத்தில் வழக்குப் பெற்றன; காலப்போக்கில் இலக் கியத்திலும் இடம் பெறலாயின. அவற்றுள் சில இந் நூலிலும் இடம் பெற்றுள்ளன. அவை அஞ்சனம்-மை (16), எந்திரம் (55), சிமையம்-உச்சி (100, 268), தவம் (11), அச்சிரம்-முன்பனி (223, 464, 470), தேசம் (317), பிரசம்-வண்டு (406) , கருவி, கற்பம் (461).

தேசம்’ என்ற வடசொல் தமிழில் தேயம் என முதலில் வழக்குப் பெற்றது; பின்பு தேஎம்' என மருவியது (317), .

பிற தொகை நூல்களில் உள்ள வடசொற்களையும் வட நாட்டுக் கதைகளையும் விட இந்நூலில் உள்ள வடசொற்களும் கதைகளும் மிகக் குறைந்த அளவின என்பது நினைவிற் கொள்ளத்தகும்.