தமிழ்மொழி இலக்கிய வரலாறு/குறுந்தொகை

விக்கிமூலம் இலிருந்து

11. குறுந்தொகை

முன்னுரை

நான்கடிச் சிற்றெல்லையும், எட்டடிப் பேரெல்லையுமுடைய 398 செய்யுட்களும் ஒன்பது அடியுள்ள இரண்டு. செய்யுட்களும் (307, 399) கொண்ட இந்நூல், ஐங்குறு. நூற்றுக்கு அடுத்த மேல் எல்லையில் (அடிகளைப் பொறுத்த, வரையில்) உள்ளதாகும். பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்து இதன்கண் இடம்பெற்றுள்ளது. இப்பாடல்களைத் தொகுத்தவன் பூரிக்கோ என்பவன். பெயரால் இவன் ஓர் அரசன் என்பது தெரிகிறது. இவனைப் பற்றி வேறு ஒன்றும் அறியுமாறு இல்லை. இந்நூற் பாடல்கள் 20 புலவர்களால் பாடப்பெற்றுள்ளன. -- - - - -

இந்நூற் பாடல்கள் அகப்பொருள் பற்றியவை; குறிஞ்சி,

பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை ஒழுக் கங்களைப் பற்றிய பாடல்கள் இதன் கண் இடம் பெற். றுள்ளன. இந்நூலின் மூலத்தை மட்டும் முதன்முதல் வெளி யிட்டவர்தமிழறிஞர் சி. வை தாமோதரம்பிள்ளை என்பவர். பின்னர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் இதற்குப் பதவுரை, கருத்துரை, விளக்கவுரை மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி முதலியவற்றை அரும்பாடுபட்டு எழுதியுள்ளார். இந்நூலில் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், எஞ்சிய இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர்' உரை யெழுதினார் என்றும் சீவகசிந்தாமணியின் சிறப்புப் பாயிரத்தில் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். அவ்வுரை இப்போது கிடைக்கவில்லை.

இனி இந்நூற்பாக்களைப் பாடியுள்ள சங்ககாலப் புலவர் பெயர்களைக் கீழே காண்க : . .

குறுக்தொகையிற் பாடிய புலவர்கள்-203 பேர்.

    1. அஞ்சியாந்தை
    2. அண்டர் மகன் குறு வழுதி
    3. அணிலாடு முன்றிலார்
    4. அம்மூவனார்
    5. அரிசில் கிழார்
    6. அள்ளுர் நன்முல்லை
    7. அறிவுடைநம்பி
    8. ஆசிரியன் பெருங்கண்ணன்
    9. ஆதிமந்தியார்
    10. ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன்
    11. ஆலங்குடி வங்கனார்
    12. ஆலத்துார் கிழார்
    13. இடைக்காடனார்
    14. இருந்தையூர்க் கொற்றன் புலவன்
    15. இளங்கீரந்தையார்
    16. இளங்கீரனார்
    17. இளம்பூதனார்
    18. இறையனார்
    19. ஈழத்துப் பூதன் தேவன்
    20. உகாய்க்குடி கிழார்
    21. உருத்திரன்
    22. உரோடகத்துக்காரன்
    23. உலோச்சனார்
    24. உழுந்தினைம்புலவன்
    25. உறையன்
    26. உறையூர்ச் சல்லியன் குமரன்
    27. உறையூர்ச் சிறு கந்தன்
    1. உறையூர்ப் பல்கா யனார்
    2. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
    3. உறையூர் முதுகூத்த னார்
    4. உறையூர் முதுகொற்றன்
    5. ஊன் பித்தை
    6. எயிற்றியனார்
    7. ஐயூர் முடவனார்
    8. ஒக்கூர் மாசாத்தியார்
    9. ஒருசிறைப் பெரியனார்
    10. ஒத்ஞானி
    11. ஓதலாந்தையாா
    12. ஒரம் போகியார்
    13. ஓரிற் பிச்சையார்
    14. ஓரேருழவனார்
    15. ஒளவையார்
    16. கங்குல் வெள்ளத்தார்
    17. கச்சிப்பேட்டுக் காஞ் சிக்கொற்றன்
    18. கச்சிப்பேட்டு நன்னாகையார்
    19. கடம்பனூர்ச் சாண் டிலியன்
    20. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
    21. கடுகு பெருந்தேவன்
    22. கடுந்தோட் கரவீரன்
    23. கடுவன் மள்ளன்
    24. கண்ணன்
    25. கணக்காயன் தத்தன்
    26. கந்தக் கண்ணன்
    27. கபிலர்
    28. கயமனார்

{| valign="top" |-

|
    1. கருவூர்க் கதப்பிள்ளை
    2. கருவூர்கிழார்
    3. கருவூர்ச் சேரமான் சாத்தன்
    4. கருவூர்ப் பவுத் திரன்
    5. கருவூர் ஓதஞானி
    6. கல்பொரு சிறுநுரை யார்
    7. கல்லாடனார்
    8. கவைமகன்
    9. கழார்க் கீரன் எயிற்றி
    10. கள்ளில் ஆத்திரை
    11. காக்கை பாடினியார் நச்செள்ளையார்
    12. காமஞ்சேர் குளத்தார்
    13. காலெறி கடிகையார்
    14. காவன் முல்லைப் பூதனார்
    15. காவிரிப்பூம் பட்டினத் துக் கந்தரத்தனார்
    16. காவிரிப்பூம் பட்டினத் துச் சேந்தங்கண்ண னார்
    17. கிடங்கிற் குலபதி நக் கண்ணன்
    18. கிளிமங்கலங்கிழார்
    19. குட்டுவன் கண்ணன்
    20. குடவாயிற்கீரத்தனார்
    21. குடவாயிற் கீரனக்கன்
    22. குப்பைக் கோழியார்
    23. குழல்தத்தன்
    24. குறியிறையார்
    25. குறுங்கீரன்
    26. குறுங்குடி மருதனார்
    27. குன்றியனார்
    28. கூடலூர் கிழார்
|
    1. கூவன் மைந்தன்
    2. கூழிக் கொற்றன்
    3. கொல்லன் அழிசி
    4. கொல்லிக் கண்ணன்
    5. கொற்றனார்
    6. கோக் குளமுற்றன்
    7. கோப்பெருஞ்சோழன்
    8. கோவத்தன்
    9. கோவூர்கிழார்
    10. கோவேங்கைப் பெருங்கதவன்
    11. சத்திநாதனார்
    12. சாத்தன்
    13. சிறைக்குடி யாந்தை
    14. செம்புலப்பெயனிரார்
    15. செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்
    16. செல்லூர்க் கொற்றன்
    17. சேந்தம் பூதனார்
    18. சேந்தன் கீரன்
    19. சேரமானெந்தை
    20. தங்கால் முடக் கொல் லனார்
    21. தாமோதரன்
    22. தாயங் கண்ணனார்
    23. திப்புத்தோளார்
    24. தீன்மிதி நாதன்
    25. தும்பிசேர் கீரனார்
    26. துரங்கலோரியார்
    27. தேவ குலத்தார்
    28. தேரதரன்
    29. தொல் கபிலர்
    30. நக்கீரனார்
    31. நம்பி குட்டுவன்
    32. நரிவெரூஉத்தை யார்
    33. நன்னாகையார்

|}

194 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

117. நாசும்போத்தன் 118. நாமலார் மகன் இளங்

    கண்ணன 

119. நெடும் பல்லியத்தை 120. நெடு வெண்ணிலவினார் 121. நெய்தற் காக்கியர் 122. படுமரத்து மோசிகீரனார் 123. படுமரத்து கொற்றன் 124. பதடிவைகலார் 125. பதுமனாச் 126. பரணர் 127. பருஉ மோவாய்ப் பதுமன் 128. பனம்பரனார் 129. பாண்டியன் பன்னாடு தந்தான் 130. பாண்டிய ஏனாதி

    நெடுங்கண்ணன் 

131. பாரகாபரன் 132. பாலை பாடிய பெருங் கடுங்கோ 133. பூங்கண்ணன் 134. பூங்கணுத்திரையார் 135. பூதத்தேவன் 136. பூதம்புல்லன் 137. பெருங்கண்ணனார் 138. பெருங்குன்றுார்கிழார் 139. பெருஞ்சாத்தன் 140. பெருந்தோட் குறுஞ் சாத்தன் 141. பெரும்பதுமனார் 142. பெரும்பாக்கன் 143. பேயனார் 144. பேயார் 145. பேரி சாத்தனார் 146. பேரெயின்முறுவலார் 147. பொதுக் கயத்து கீரந்தை 148. பொன்மணியார் 149. பொன்னகன் 150. மடல் பாடிய மாதங்கீரனார் 151. மதுரைக் கடையத்தார் மகன்

    வெண்ணாகன்

152. மதுரைக் கண்டராதத்தன் 153. மதுரைக் கண்ணனார் 154. மதுரைக் கதக்கண்ணன் 155. மதுரைக் காஞ்சிப் புலவன் 156. மதுரைக் கொல்லன் புலவன் 157. மதுரைச் சீத்தலை சாத்தனார் 158. மதுரை நல்வெள்ளியார் 159. மதுரைப் பெருங் கொல்லன் 160. மதுரை மருதங்கிழார் மகன்

    இளம்போத்தன்

161. மதுரை மருதனிள நாகனார் 162. மதுரையளக்கர் ஞாழார் மகன்

    மள்ளன்

163. மதுரையறுவை வணிகன்

    இளவேட்டனார்

164. மதுரை ஆசிரியன் கோடங்

    கொற்றேவன் 

165. மதுரைஈழத்துப்பூதன் 166. மதுரை எழுத்தாளன் சேந்தன் 167. மதுரை வேளாதத்தன் 168. மள்ளனார் 169. மாங்குடிகிழார் 170. மாங்குடி மருதனார் 171. மாடலூர்கிழார் 172. மாதிரத்தன் 173. மாமலாடன் 174. மாமுலனார் 175. மாயெண்டன் 176. மாலைமாறன் 177. மாவளத்தான் 178. மிளைக்கந்தன் 179. மிளைகிழான் நல்வேட்டனார் 180. மிளைப்பெருங்கந்தன் 181. மிளைவேள் தித்தன் 182. மீனெறி தூண்டிலார் 183. மோசி கீரனார் 184. மோசி கொற்றன் 185. மோதாசனார் 186. வடம வண்ணக்கன் 187. வடம வண்ணக்கன்

    பேரி சாத்தனார்

188. வடமன் தாமோதரன் 189. வருமுலையாரித்தி 190. வாடாப் பிரமந்தன் 191. வாயிலான் தேவன் 192. வாயிலிளங் கண்ணன் 193. விட்ட குதிரையார் 194. வில்லக விரலினார் 195. விற்றூட்டு மூதெயினனார் 196. வெண் கொற்றன் 197. வெண் பூதன் 198. வெண் பூதியார் 199. வெண் மணிப்பூதி 200. வெள்ளி வீதியார் 201. வெள்ளூர் கிழார் மகனார்

    வெண் பூதியார்

202. வேட்ட கண்ணன் 203. மேம்பற்றுக் கண்ணன் கூத்தன்

இப்புலவருள் அரச மரபினர் சிலர் உளர். அவருள். கருவூர்ச் சேரமான் சாத்தன்.சோமானெந்தை, நம்பி குட்டுவன். பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் சேர அரச மரபினர் ஆவர். மாவளத்தான். கோப்பெருஞ்சோழன் என்பவர் சோழ அரசமரபினர் ஆவர்.குறுவழுதி, பாண்டியன் பன்னாடு தந்தான் என்ற இருவரும் பாண்டிய அரச மரபின ராவர். மிளைவேல் தித்தன் என்பவன் ஒரு சிற்றரசனாய் இருத்தல் வேண்டும். ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன், என்பவனும் அரச மரபினனேயாவன். 196 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

  அக்கால அரசியல் உயர் அலுவலாளருள் சிலரும் கவி பாடும் ஆற்றல் பெற்று விளங்கினர். வள்ளுவன் என்பது அரசாங்க உள்படு கருமத் தலைவனுக்கு வழங்கப்பட்ட அலுவல் பெயராகும். அரசாங்கச் செய்திகளை அரசனுக்கு அறிவித்துவந்த உள்படு கருமத் தலைவன் 'செய்தி வள்ளுவன்’ எனப்பட்டான்போலும்! அவனது இயற்பெயர் பெருஞ்சாத்தன் என்பது. அவன் இந்நூலில் ஒரு பாடலைப் பாடியுள்ளான்.
  படைத்தலைவருள் சிறந்தவன் 'ஏனாதி' என்ற பட்டத்தைப் பெற்றிருந்தான். அவன் பாண்டியனுக்குப் படைத் தலைவன் ஆதலின் 'பாண்டியன் ஏனாதி' எனப்பட்டான். அவனது இயற்பெயர் நெடுங்கண்ணன் என்பது. அவனும் ஒரு செய்யுள் பாடியுள்ளான்.

நாணயங்களைப் பரிசோதித்த அரசாங்க அலுவலன் வண்ணக்கன் எனப்பட்டான். அவன் வடநாட்டான் அல்லது சுமார்த்தப் பிராமணருள் ஒரு பிரிவினன் ஆதலால் 'வடமன்'எனப்பட்டான் அவனும் இந்நூலில் ஒரு செய்யுளைப் பாடி யுள்ளான்.

தேவகுலம் என்பது கோவிலைக் குறிக்கும். தேவகுலத்தார் என்பது கோவில் அருச்சகரை அல்லது கோவில் அதிகாரியைக் குறிக்கும். அத்தகைய ஒருவரும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். 'முது கண்’ என்பதற்கு 'முக்கிய ஆதாரம்' என்பது பொருள்: முதுகண்ணன் என்பவன் அரசி யலுக்குச் சிறந்த அறிஞனாக இருந்தவன்போலும்! இக்கால அரசாங்க ஆலோசகர் (Advisor) போன்ற ஒரு பதவியாளனே முதுகண்ணன் எனப் பெயர் பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய உயர்ந்த அறிஞர் ஒருவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர்.

ஆசிரியன் பெருங்கண்ணன், மதுரை ஆசிரியர் கோடங் கொற்றேவன். கணக்காயன் தத்தன் என்பவர் ஆசிரியத் தொழில் பூண்ட புலவர் பெருமக்கள். மதுரை எழுத்தாளன் சேந்தன் என்பவர் நூலாசிரியராகவோ, அரசாங்க எழுத்தாளராகவோ இருந்திருத்தல் வேண்டும்.

இசையிலும் கூத்திலும் வல்ல பெருமக்களும் இயற்றமிழ்ப் புலவர்களாய்த் திகழ்ந்தனர் என்பது உறையூர் முதுகூத்தனார், வேம்பற்றுார்க் கண்ணன் கூத்தன், குழல் தித்தன் என்ற பெயர்களைக் கொண்டு அறியப்படும்.

ஊர்தோறும் பண்டப்பொதிகளைக் கொண்டு சென்று பேரிகையடித்து வாணிகம் செய்தவர் பேரிகைச் செட்டிமார் எனப்பட்டனர், அவருள் ஒருவரே பேரி சாத்தனார் என்பவர். மதுரைச் சீத்தலைச் சாத்தனார். மதுரை அறுவை வாணிகள்ன் இளவேட்டனார் ஆகிய மூவரும் வணிகராவர்.

வீடு கட்டும் தொழிலாளர் கொற்றனார் எனப்பட்டனர். உறையூர் முது கொற்றனார், கொற்றனார், செல்லூர்க் கொற்றன், படுமரத்து மோசி கொற்றன், காஞ்சிக் கொற்றன், கூழிக் கொற்றன் ஆகிய அறுவரும் கட்டடத் தொழிலாளர். இவர்கள் பாடிய பாக்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இரும்பு, பொன் தொழிலாளர் கொல்லர் எனப்பட்டனர். அவர்களும் புலவர்களாய்த் திகழ்ந்தனர். கொல்லன் அழிசி, தங்கால் முடக் கொல்லனார். மதுரைக் கொல்லன் புலவன், மதுரைப் பெருங்கொல்லன் என்பவர் பாடிய பாடல்கள் இந் நூலில் உள்ளன.

பெண்பாற் புலவர்கள்

சங்ககாலப் புலவருள் மெல்லியலாரும் இடம் பெற்றிருந்தனர். அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், கச்சிப் பேட்டு நன்னாகையார், கழார்ர்கீரன் எயிற்றி, காக்கை பாடினியார் நச்செள்ளையார், நன்னாகையார், நெடும்பல்லியத்தை,[1] பூங்கண் உத்திரையார், மதுரை நல்வெள்ளியார், வருமுலையாரித்தி, வெண்பூதி, வெண்மணிப்பூதி, வெள்ளிவீதி என்பவர் குறுந்தொகைப் பாடல்களுள் சிலவற்றைப் பாடிய பெண்பாற் புலவராவர். இவருட் சிலர் நெடுநில மன்னராலும், குறுநில மன்னராலும் பெரிதும் மதிக்கப் பெற்றவராவர்; சங்ககாலப் பெண் கல்வி எந்த அளவு உயர்ந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை இப்பெருமாட்டிகளின் பாடல்களைக் கொண்டு இனிதின் அறியலாம்.

கபிலர், பரணர் போன்ற புலவர் பெருமக்களே நாட்டில் பலராவர். அவர்கள் போரசரையும் சிற்றரசரையும் வள்ளல்களையும் நாடிச் சென்று அவர்தம் ஆதரவு பெற்று நற்றமிழை நலமுற வளர்த்துவந்தனர்.

அரசர்: குட்டுவன் (34), பெரும்பூண் பொறையன் (89), திண்டேரிப் பொறையன் (128) எள்ற சேரமன்னர் இந்நூற் பாக்களில் குறிக்கப்பட்டுள்ளனர்; ' வளங்கெழு சோழர்' (116) குறிக்கப்பட்டுள்ளனர்; பசும்பூண் பாண்டி யன் (393) ஒருவன் குறிக்கப்பட்டுள்ளான்.

சிற்றரசர்: இன்ன சிற்றரசன் நாட்டைப்போன்ற அல்லது நகரம் போன்ற சிறப்புடையவள் தலைவி என்றும், களவைப் பற்றிய அலர் இன்ன அரசர்கள் போரிட்டு வெற்றி பெற்றபொழுது உண்டான. ஆரவாரத்தினும் மிகுதியாக இருந்தது என்றும் கூறப்பெற்ற சந்தர்ப்பங்களில் சிற்றரசர் பெயர்களும் ஊர்களும் பிறவும் இப் பாடல்களில் குறிக்கப் பெற்றுள்ளன. இங்ஙனம் குறிக்கப்பெற்ற சிற்றரசர் பெயர்களையும் அவர் தம் இயல்புகளையும் கீழே காண்க. கட்டி[2] என்பவனது நாட்டுக்கு அப்பால் வடுகர் வாழ்கின்றனர் (11). எவ்வி (19), நன்னன்-பெண்கொலை புரிந்தவன் (73,291), எழினி (80), ஆய் (84), அஞ்சிதகடூர் அதியமானஞ்சி (91), வல்வில் ஓரி-கொல்லி மலைத் தலைவன் (100), தொன்று முதிர் வேளிர் (164), பாரி (196), மலையன் திருக்கோவலூரையும் முள்ளுரையும் ஆண்டவன் (312), ஓரி (199) , கள்ளி (210),அழிசி (257), தொண்டையர் (260), ஆதி அருமன் (293), அகுதை (298), விச்சிக்கோ (328).

 ஊர்கள் : காஞ்சியூர் (10), மரந்தை (34, 116) , சிறு நல்லூர் (பொதுப் பெயர் 55, 345) , உறந்தை (116), தொண்டி (128, 210, 238), குன்றுர் (164), முள்ளூர் (312) , குறும்பூர் (328) .

ஊரில் தெருக்கள் பல இருந்தன. அந்தணர் தெரு 'ஆசில் தெரு’ எனப்பட்டது (272). ஊரில் பலர் கூடிக் கடவுளை வணங்கவும் ஊர்ச் செய்திளைப் பேசவும் மன்றம் இருந்தது (241) . ஊரார் உண்ணுதற்கும் நீராடுவதற்கும் ஊருக்கு அண்மையில் பொய்கைகள் இருந்தன (113, 370). ஊருக்கு அண்மையில் பொய்கையும் அதற்கு அப்பால் சிறிது -தொலைவில் காட்டாறும் இருந்தன என்று ஒரு செய்யுள் கூறுகின்றது (113). சில ஊர்களில் கேணிகள் இருந்தன (369).

  சிறப்புச் செய்திகள் : குறிஞ்சி நிலத்தில் குறவன் மரங்களை வெட்டி நிலத்தை உழுது தினை விதைப்பான் (214); தினை அறுவடையானதும் மீண்டும் தினை விதைப்பான்; அப்பொழுது அவரையையும் உடன் விதைப்பான் (82). அவன் யானையாலும் எட்டமுடியாதபடி குன்றின்மீது கட்டப்பட்ட பரணிலும் வேங்கை மரத்தின்மீது கட்டப்பட்ட பரணிலும் இருந்து தினைப்புனத்தைக் காப்பான்; யானை முதலிய விலங்குகள் வந்து பயிரை மேயாதபடி இரவில் கொள்ளியைக் காட்டுவான். தீயைக் கண்ட விலங்குகள் விலகி ஓடும். இங்ஙனம் மிகவுயர்ந்த பரணில் இருந்தமையால் அவன் 'சேணோன்’ எனப்பட்டான் (150, 357). 

பலாப் பழங்களைக் குரங்குகள் குடைந்து தின்பது வழக்கம். குறவன் அவற்றைப் பிடிக்க மரத்தில் வலை கட்டுவது வழக்கம் (342).

கொல்லி மலையின் ஒரு பகுதியில் செதுக்கப்பட்ட ஒரு பாவை கொல்லிப்பாவை எனப்பட்டது (89, 100). பாறையில் உருவம் செதுக்கும் சிற்பக்கலை அறிவு அக்காலத்தில் இருந்தது என்பது இதனால் தெரிகிறது. மகளிரின் தோள்மீதும் மார்புமீதும் சந்தனக் குழம்பு கொண்டு வரிக்கோலம் எழுதப்பட்டது. இது ஓவியக்கலை அறிவை உணர்த்துகிறது. பறை, பணிலம் (15), பதலை (59), முழவு (71), தட்டைப்பறை (133), குளிர் (197, 291, 360), முரசு (365) முதலிய இசைக் கருவிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. தெய்வ வழிபாட்டில் பலவகை இசைக்கருவிகள் ஒலிக்கப்பட்டன (263), பாணர் பலவகை யாழ்களைக் கொண்டு இசைக்கலையை வளர்த்தனர் (323, 336). நடனம் ஆடுபவள் ஆடுகளமகள் எனப்பட்டாள். ஆண்மகன் ஆடுகளமகன் எனப்பட்டாள். கூத்தர் என்பவர் துணங்கை முதலிய கூத்து வகைகளையும் கதையைத் தழுவிவரும் கூத்துகளையும் ஆடினர். அவர் ‘கோடியர்’ என்றும் பெயர் பெற்றனர் (78).

பெரும் புண்ணியம் செய்தவருக்கே அமுதவுணவு பெறுதற்குரியது. சுவர்க்கம் ‘பெரும் பெயர் உலகம்’ எனப்பட்டது. இவ்விரண்டையும் பெறுக என்று வாழ்த்து வதும் அக்கால மரபு (83, 201), ‘கடவுள்’ என்னும் சொல் ‘முனிவர்’ என்னும் பொருளிலும் வந்துள்ளது (203). மலைப்பக்கத்தில் சூலத்தை ஏந்திய பெண்தெய்வம் ‘சூலி’ என்ற பெயருடன் வணங்கப்பட்டது. அக்கால மக்கள் நல்வினை தீவினைகளில் நம்பிக்கை பெற்றிருந்தனர் (246); நிரையம் (நரகம்) இருந்ததென்று நம்பிளர் (258). உயிர்களை உடலிலிருந்து பிரிப்பவன் கூற்றம் எனப்பட்டான் 267). நோன்பிருந்தவர் நோற்றோர் எனப்பட்டனர் (344) இதனால் நோன்பிருக்கும் வழக்கம் இருந்தது என்பது தெரிகிறது.

அணிகள் : சங்கு வளையல்களும் சங்கு மணிமாலைகளும் இருந்தன (11, 23). மகளிர் பொன்னால் செய்யப்பட்ட தலையணிகளை அணிந்திருந்தனர் (21); உருண்டையான பொற்காசுகள் கோக்கப்பட்ட காசுமாலைகளை அணிந்திருந்தனர் 67), நுண்பூண் (47), பூங்குழை (159), மின்னிழை (246), சேயிழை (281) , மாணிழை (348) என்னும் தொடர்கள் அக்கால அணிகள் பெற்றிருந்த வேலைப் பாட்டினை நன்கு உணர்த்துவனவாகும். பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட மேகலை என்னும் அணியும் இருந்தது (264). செல்வச் சிறுவர் காலணி பொன்னால் இயன்றது; அது மலரும் பருவத்துக் கொன்றை அரும்பினை ஒத்த பொன்மணிகளைக் கொண்டது. பொன்னை உரைத்து அதன் மாற்றை அறிவதற்கு இருந்த கல் கட்டளைக்கல் எனப்பட்டது (192).

ஆரியக்கூத்தர் மூங்கிலில் கட்டிய கயிற்றின்மேல் நின்று ஆடினர். அப்போது பறை கொட்டப்பட்டது (7). கண்ணாடியுள் தோன்றும் பாவை (நமது உருவம்) ஆடிப் பாவை எனப்பட்டது (8). ஆலமரத்தடியில் ஊரவை கூடுதல் மரபு (15); சொல்வன்மை புலப்படப் பேசிய பாணன் 'இளமாணாக்கன்' எனப்பட்டான் (33) விழா நிகழ்ந்த ஊர் 'சாறு கொள் ஊர்' எனப்பட்டது (41) .

புத்தர் காலத்தில் சிறப்புற்ற பாடலிபுரம் பல நூற்றாண்டுகள் மகத நாட்டின் தலைநகராய்ப் பொலிவுற்றிருந்தது. அது சோணையென்னும் துணையாறு கங்கையைக் கூடும் இடத்தில் அமைந்திருந்தது. அத் தலைநகரத்து யானைகள் சோணையாற்றில் நீராட்டப்பட்டன என்றும், பாடலி செல்வச் சிறப்புடையது என்றும் படுமரத்து மோசி கீரனார் என்ற புலவர் பாடியுள்ளார் (75). வடநாட்டுச் செய்திகள் எந்த அளவு தமிழகத்தில் பரவியிருந்தன என்ப தற்கு இஃது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இஃது உள்\நாட்டு வாணிகத்தால் அறியப்பட்ட செய்தியாகும்.

பெண்கள் கூந்தலுக்கு எரு மண்ணையிட்டுப் பிலசவர் (113), மகளிர் கூந்தல் குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்று அதன் பகுப்பைக் கொண்டு ஐவகைப் பட்டது (269). ஆண்களின் தலைமயிர் ‘ஓரி’ எனப் பெயர் பெற்றது (229).

நாழிகைக் கணக்கர் இரவில் உறங்காது காலக்கணக்கை ஆராய்ந்து அறிவித்து வந்தனர் (261). தலைவன் செல்வத்தை ஈட்டுவதையே முதற் கடமையாகக் கொண்டான் (331). பரம்பரையாக வந்த பெரிய செல்வர் ‘பெருமுது செல்வர்’ எனப்பட்டனர் (337).

பண்பாடு: அகப்பொருள் பற்றிய இந்நூற் பாடல்களில் பழந்தமிழர் பண்பாட்டை அறிவிக்கும் செய்திகள் பல கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்:

வினையே ஆடவர்க்கு உயிர்; மகளிர்க்கு ஆடவர் உயிர் (135). தன்பொருள் பலருக்கும் பயன்பட வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவன் ‘கடப்பாட்டாளன்’ எனப்பட்டான் (143). தாம் கண்டறிந்ததொன்றை மறைத்துப் பொய்க்கரி கூறும் இயல்பு அறிவால் அமைந்த பெரியோருக்கு இல்லை (184). திறமையுள்ளோர் செய்யும் செயல் அறத்தொடு பொருந்தியதாகும் (247). அறிவால் அமைந்த பெரியோர் தம்மைப் பிறர் புகழ்வதற்கு நாணுவர். அத்தகையோர் தம்மீது பிறர் கூறும் பழிச் சொல்லைப் பொறார் (252). நடுவு நிலைமையுடைய சான்றோரைக் காணும் மக்கள் அவர்களை எதிர்கொள்ளுதல் முதலிய கடமைகளைத் தவறாது செய்வர் (265). தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப்பெற்ற செல்வத்தைச் செலவழிப் போர் செல்வர் என்று சொல்லப்படார். தாமாக ஈட்டிய பொருள் இல்லாதவர் முன்னோர் பொருளின் பயனைத்துய்த்து வாழ்தல் இரத்தலைக் காட்டிலும் இழிவுடையது (283).

பெரியோர் தம் நெஞ்சத்தில் நினைந்த ஒன்றனை நடத்தியே தீருவர் (341). சான்றோர் பிறர் உற்ற வறுமைத் துன்பத்திற்கு அஞ்சி அவர்கள் இரந்தவற்றைக் கொடுப்பர்; பிறகு தாம் கொடுத்த அவற்றைத் ‘தருக’ என்று சொல்லு தலைக் காட்டினும் தம்முயிரை மகிழ்ச்சியோடு இழப்பர் (349). செல்வம் நிலையில்லாத பொருள் (350).

மேலே கூறப்பெற்ற உயர்ந்த சுருத்துகள் பழந்தமிழர் பண்பாட்டினை நன்கு விளக்கும் சான்றுகள் அல்லவா?

மேற்கோள்: இந்நூல் சொற்களும் தொடர்களும் பிற சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே காலத்தால் பிற்பட்ட நூல்களுக்கும் இவை எங்ஙனம் துணை செய்தன என்பதை இங்குக் காணலாம்:


1. “நீர்வார் கண்னை நீயிவன் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரல்” 22

“நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய் என”

-சிலம்பு, காதை 20, வரி


2. “கடும்புனல் தொடுத்த நடுங்கஞர் அள்ளல்” 103
“ஆரஞர் உற்ற வீரபத் தினிமூன்”

-சிலம்பு, காதை 22 வரி 155


3. “வென்றி நெடுவேள் என்னும் அன்ளையும்” 111
“நெடுவேள் குன்றம் அடிவைத் தேறி”

-சிலம்பு, காதை 23, வரி 190


4. “பழுமரம் படரும் பையுள் மாலை” (172)


“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்”

-குறள் 215.


5. “மறந்தோர் மன்ற மறவாம் நாமே” (200)
“நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்”

-சிலம்பு, காதை 7, செ, 32.


6. “பகேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை” 215
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு”

-குறள் 400


7. “புடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே” (216)
“பாடமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி”

-சிலம்பு, காதை 9, வரி 67


8. “பேதை மையாற் பெருந்தகை கெழுமி”
“நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ” 230

“பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க கட்டார் செயின்”

-குறள், 805.


9. “வாலெயி(று) ஊறிய வசையில் தீநீர்” 267
“பாலொடு தேன்கலக் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்”

-குறள், 1121


10. “ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும்” 267
“ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்”

-குறள், 1022

வட சொற்கள்

தொல்காப்பியர்க்கு முன்னரே தமிழகத்தில் வடமொழி யாளர் இடம் பெற்றுவிட்டனர் என்பதும், அவர்தம் சமயக் கருத்துகளும் சொற்களும் தமிழ் மொழியில் இடம் பெற்று விட்டன என்பதும் முன்பே பல முறை கூறப்பட்டன அல்லவா? எனவே, இந்நூற்பாக்களிலும் சில வட்சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் அவுணர் (1) , யாமம் (5), சகடம் (165), நேமி (189), ஆத்திரை (யாத்திரை-293), ஆதி (293). ஆரம் (மாலை-821) என்பன குறிக்கத் தக்கவை. முருகன் அவுணரைக் கொன்றமை (1) கூறப் பட்டுள்ளது. அமிழ்தம் கூறப்பட்டுள்ளது (83, 201). அந்தணர்க்கு நீரோடு சொரிதல் வழக்கிற்கு வந்துவிட்டது (288). பார்ப்பனப் பாங்கன் களவு மணத்தில் இடம் பெற்று விட்டான் (156).

இந்நூற்பாக்களைப் பாடிய புலவருள் ஏறத்தாழ முப் பதின்மர் பெயர்களில் வடசொற்கள் காணப்படுகின்றன. ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன், உருத்திரன், உருத்திரன் கண்ணன். உரோடகத்துக்காரன், உலோச்சன், ஓதஞானி, (கருவூர்) ஓதஞானி, சாண்டிலியன், கரவீரன், தத்தன், கபிலர், பவுத்திரன், ஆத்திரையன், கந்தரத்தன், குலபதி, சத்தி நாதன், தாமோதரன், வடமன் தாமோதரன், தேவ குலத்தார். தேரதரன், பதுமனார், பரணர், பாரகாபரன், பூதத் தேவன், பூதம் புல்லன். கண்டரத்தன், மாதிரத்தன், மோதாசன், பிரமந்தன் என்னும் பெயர்களைத் தமிழ்ப் புலவர்கள் பெற்றிருந்தனர் என்பது கவனித்தற்குரியது. இவற்றை நோக்க, வடமொழியாளர் செல்வாக்குத் தமிழகத் தில் படிப்படியாக உயர்ந்து வந்ததை அறியலாம்.


  1. இயம்-வாத்தியம்; நெடும்பல்லியம்-நீண்ட பல வாத்தியங்கள். இவற்றை வாசித்தவன் ‘நெடும்பல்லியத்தன்’ எனப்பட்டான். இவற்றை வாசித்தவள் ‘நெடும்பல்லியத்தி’ எனப்பட்டாள்.
  2. இம்மரபினர் கட்டிதேவன், கட்டியதேவன் எனப்பிற் காலச் சோழர் ஆட்சியில் சிற்றரசராய் இருந்த தெலுங்கராவர்.