தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
வரலாறு
டாக்டர் ரா. சீனிவாசன்
எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்டி
முதற்பதிப்பு : 1978
எட்டாம் பதிப்பு : 1997
வெளியீடு :
அணியகம்
சென்னை - 600 030
விலை ரூ.20-00
பிற நூல்கள் | ||
---|---|---|
1 | கம்ப ராமாயணம் | 30-00' |
2 | மாபாரதம் | 30-00 |
3 | சீவக சிந்தாமணி | 25 |
4 | திருவிளையாடற்புராணம் | 30-00 |
5 | கண்ணனின் திருக்கதை | 15-00 |
6 | நவீன தெனாலிராமன் (சிறுகதைத் தொகுப்பு) | 10-00 |
7 | குப்பை மேடு (சிறுகதைத் தொகுப்பு) | 25-00 |
8 | படித்தவள் (சிறுகதைத் தொகுப்பு) | 25-00 |
9 | பரிசு மழை (சிறுகதைத் தொகுப்பு) | 25-00 |
10 | அணியும் மணியும் | 30-00 |
11 | நாலடியார் செய்திகள் | 20-00 |
12 | திருக்குறள் செய்திகள் | 40-00 |
13 | மொழியியல் | 50-00 |
14 | திருப்பாவை விளக்கவுரை | 20-00 |
15 | திவ்விய பிரபந்த சாரம் | 15-00 |
16 | சொல்லின் செல்வன். (நாடகம்) | 25-00 |
அச்சகம் : ரோஹிணி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை -14
தமிழ் இலக்கியம் காலந்தோறும் பொருளாலும் வடிவாலும் வேறுபடுகிறது. காரணம் புலவர்கள் புதுமையை விரும்புகின்றனர். மக்களும் புதிய கருத்துகளை எதிர்பார்க்கின்றனர்.
சங்க இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கே ஊற்று, மூலதனம் என்றும் கூறலாம். அவர்கள் தொட்ட எல்லையை யாரும் எந்தக் காலத்திலும் தொட முடியாத நிலைக்கு எட்டிவிட்டது. அதனை அடுத்து எழுந்த ஒப்புயர்வற்ற நூல் திருக்குறள். தமிழர்களின் உயர்ந்த சிந்தனைகளைப் பதிவு செய்து அறவொழுக்கத்தையும் வாழ்வியல் நெறிகளையும் கூறுகிறது; "சிந்தனைக் கதிர்" என்று இதனைக் கூறலாம்.
இளங்கோவின் சிலப்பதிகாரமும், கம்பனின் இராம காவியமும் அரியபடைப்புகள்; காலந்தோறும் புதிய இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன. அவை அழியாமல் போற்றப்படுகின்றன. அண்மையில் உரைநடை நூல்கள் அறிவு விளக்க நூல்களாக விளங்குகின்றன; நாளிதழ்கள் தமிழைப் பரப்புகின்றன.
இலக்கியம் அறிவதற்கு ஒரு வரலாறு தேவைப்படுகிறது. பல அறிஞர்கள் இத்துறையில் ஆய்வு செய்து வரலாறு எழுதி உள்ளனர். அவற்றைச் சுருக்கமாகக் கூறும் முயற்சியே இது. அளவில் சிறியது ஆயினும் விளைவில் பெரியதே; அடிப்படைச் செய்திகள் அனைத்தும் கொண்டு விளங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றை அறிவதற்கும், இலக்கிய அறிமுகம் பெறுவதற்கும், மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்படுகிறது.
ரா. சீனிவாசன்
பக்கம்
1. | 7 |
2. | 9 |
3. | 39 |
4. | 55 |
5. | 73 |
6. | 80 |
7. | 92 |
8. | 101 |
1. தமிழ்மொழியின் பழமையும் சிறப்பும்
தமிழ்நாடு - தமிழ் மொழி - சிறப்புக் கூறுகள்.
2. சங்க காலம்
மூன்று சங்கங்கள் - இலக்கியச் சான்றுகள் - கல்வெட்டுச் சான்றுகள் - தொல்காப்பியம், அகம், புறம் முதலியவற்றின் சிறப்பு - சங்க நூல்கள் - எட்டுத் தொகை, பத்துப் பாட்டு - சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்.
3. சங்கம் மருவிய காலம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - திருக்குறள் - நான்மணிக் கடிகை - இனியவை நாற்பது - இன்னா நாற்பது - கார் நாற்பது - களவழி நாற்பது - திணை மொழி ஐம்பது - திணைமாலை நூற்றைம்பது - ஐந்திணை எழுபது - திரிகடுகம் - ஆசாரக் கோவை - பழமொழி - சிறுபஞ்ச மூலம்- முதுமொழிக் காஞ்சி - ஏலாதி - இன்னிலை - கைந்நிலை - சிலப்பதிகாரம் - மணிமேகலை - திருமந்திரம்.
4. பல்லவர் காலம்
சைவ வைணவப் பாடல்கள் - சைவ சமய குரவர் நால்வர்: திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர்; பன்னிரு ஆழ்வார்கள்: பொய்கையாழ்வார். பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், தொட்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார். குலசேகராழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெளத்த, சமண நூல்கள், புறப்பொருள் வெண்பாமாலை, பெருங்கதை, முத்தொள்ளாயிரம், உலா நூல்கள், சமணர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அறநெறிக் கதைகள், நிகண்டுகள், இலக்கண, இலக்கியங்கள்.
5. சோழர் காலம்
ஐம்பெருங் காப்பியங்கள் - ஐஞ்சிறு காப்பியங்கள் - திருமுறைகள் - நம்பியகப் பொருள் - யாப்பருங்கலவிருத்தி - யாப்பருங்கலக்காரிகை - நேமிநாதம் - வச்சணந்தி மாலை - வீர சோழியம் - நன்னூல் முதலிய இலக்கண நூல்கள் - கம்பராமாயணம், கந்த புராணம்
6. நாயக்கர் காலம்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - இலக்கண, இலக்கிய உரையாசிரியர்கள்-இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் - சிறு பிரபந்தங்கள் - சைவ மடங்களின் தமிழ்த் தொண்டு - தாயுமானவர் - முகம்மதியப் புலவர்கள்.
7. ஐரோப்பியர் காலம்
உரைநடை வளர்ச்சி - கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு: வீரமாமுனிவர் - போப், கால்டுவெல் ஐயர் தமிழ்ப்பணி - முக்கூடற் பள்ளு - மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - இராமலிங்க அடிகளின் திருவருட்பா - ஆறுமுக நாவலர், உ.வே.சா. பண்டிதமணி, வையாபுரிப்பிள்ளை, திரு.வி.க., மற்றைய தமிழறிஞர்கள்.
8. இருபதாம் நூற்றாண்டு
கவிதை - பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை. பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், இசைத் தமிழ் - நாடகத் தமிழ் - சிறுகதை வளர்ச்சி, நாவல் வளர்ச்சி, இதழ்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டு வரலாறு, திறனாய்வு நூல்கள்.