தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2
- ↓↓↓ … உங்களுக்குத் தேவையான வடிவத்தினை அழுத்துக, அக்கோப்பு பதிவிறக்கம் ஆகும். … ↓↓↓
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
தமிழ் நாடகத்
தலைமை ஆசிரியர்
(தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
வாழ்க்கை வரலாறு)
எழுதியவர் :
பத்மஸ்ரீ அவ்வை டி.கே. சண்முகம்
பூவழகி பதிப்பகம்
73, சீனிவாச பெருமாள் சந்நிதி முதல் தெரு,
இராயப்பேட்டை, சென்னை - 600 014.
தொலைபேசி : 2835 1189
நூலின் பெயர் | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் |
மொழி | தமிழ் |
நூல் வகை | வரலாறு |
ஆசிரியர் | அவ்வை டி. கே. சண்முகம் |
பதிப்பு ஆண்டு | முதற் பதிப்பு ஏப்ரல் - 2006 |
பக்கங்கள் | 64 |
நூல் அளவு | 18 5×12 5 செ.மீ |
எழுத்து | 11 புள்ளிகள் |
தாள் | 11.2 கி.கி வெள்ளைத்தாள் |
பைண்டிங் | சாதாரண அட்டை |
படிகள் | 1000 |
வெளியீடு | பூவழகி பதிப்பகம் 73,சீனிவாசப் பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600 014 |
ஒளி அச்சு | விக்னேஷ்வர் கிராபிக்ஸ் சென்னை - 600 005 போன் - 94444 83312 |
அச்சிட்டோர் | மூவேந்தர் அச்சகம் 73,சீனிவாசப் பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600 014 போன் 28351189 |
என்னுரை
நாடகத் தமிழைப்பற்றி நாள்தோறும் பேசுகிறோம் அதைப் பேணி வளர்த்த பெரியாரைப்பற்றி நாடு இன்னும் பேசவில்லை.
1922-ஆம் ஆண்டுவரை நம்மிடையே வாழ்ந்து மறைந்த தமிழ் நாடகத் தலைமையாசிரியர் ஒருவருடைய பெயர் தமிழ் மக்கள் மனத்திலே நின்று நிலவும் அளவுக்கு நன்கு விளம்பரப்படுத்தப்படவில்லை
நாடக உலகம் மட்டுமன்று, தமிழ் இலக்கிய உலகமே தன் இதயத்தில் வைத்துப் போற்ற வேண்டிய பெரும் புலவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.
ஆனால், தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கு எங்கள் சுவாமிகளைப்பற்றி எதுவும் தெரியாது பெயரைத் தெரிந்த ஒரு சிலருக்கும் அவருடைய பெருமை தெரியாது இது காலம் செய்த சதி.
சுவாமிகளின் ஆயிரக்கணக்கான மாணாக்கர் கூட்டத்தில் அடியேனும் ஒருவன், அவர் வாழ்ந்த காலத்தில் நான் அறியாச் சிறுவன நனகு அறிமுகப்படுத்தும் அளவுக்கு உறவாடிப் பழகியவனல்லன்
பெரியவர்கள் யாரேனும் இப்பணியைச் செய்திருந்தால் பெருமகிழ்ச்சியடைந்திருப்பேன் என்ன செய்வது? எவரும் முன்வரவில்லை
எனக்குத் தெரிந்த சில குறிப்புகளும் என்னுடன் மறைந்து விடக்கூடாதே என்னும் எண்ணத்தால் எழுதத் துணிந்தேன் பிழையிருப்பின் பொறுத்தருள்க.
இது, எனக்கு நாடகக் கல்வி பயிற்சி நல்வழி காட்டிய குருநாதருக்கு நான் செலுத்தும் நன்றிக் கடன்
இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளையும் எனக்கு அறிவித்த பெரியோர்களுக்குத் தலை வணங்குகிறேன்
சுவாமிகளின் புலமைக்குச் சான்று கூறும் ஒரு பாடல் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அது தமிழ்ப் பேரறிஞர்கள் அவரை நன்கறிந்து கொள்ளத் துணை செய்யுமென்று நம்புகிறேன்.
சுவாமிகளின் நாடகங்களையும் நூற்றுக்கணக்கான தனிப் பாடல்களையும் நல்ல முறையிலே மீண்டும் அச்சியற்ற வேண்டும், அவை இலக்கிய உலகிலே இடம் பெற வேண்டும், புதுச்சேரி மண்ணிலே சுவாமிகளின் திருவுருவை மறைத்த இடத்திலே ஒரு மண்டபம் எழுப்ப வேண்டும்.
இவை நான் காணும் கனவுகள் காலம் இவற்றை நனவாக்கட்டும்.
‘அவ்வையகம்’
சென்னை டி. கே. சண்முகம்
மன்மத-ஐப்பசி-22
அவ்வை சண்முகம்
வாழ்க்கைக் குறிப்பு
Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நாடகக் கலைஞர்கள் என்ற புகழுக்கு உரியவர்கள் டி.கே எஸ். சகோதரர்கள் 'நாடக நால்வர்' எனப்படும். இவர்களின் மூன்றாமவர் தி .க .சண்முகம் திரு. தி. க. சங்கரன், திரு. தி க .முத்துசாமி இருவரும் இவருக்கு மூத்தவர்கள். திரு. தி க .பகவதி இளையவர்.
நாஞ்சில் நாடு தந்த நாடக நால்வரின் தந்தையார் டி.எஸ். கண்ணுசாமிப் பிள்ளை; தாயார் சீதையம்மாள்; 'மனோன்மணியம்' ஆசிரியர் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன் முறை. திரு. சண்முகம் 1912 ஏப்ரல் 26ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார் .ஆறாவது வயதிலேயே தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களை ஆசிரியராகக் கொண்ட மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நடிகராகச் சேர்ந்தார். சின்னஞ்சிறு வயதிலேயே நாரதர் - அபிமன்யு - மனோகரன் முதலிய வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
1941-ல் மதுரைத் தமிழ்ச் சங்கம் இவருக்கு முத்தமிழ்க் கலாவித்துவரத்தினம்' என்ற பட்டத்தை வழங்கியது. 1944-ல் டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் இவருக்கு 'அவ்வை' என்ற பட்டம் வழங்கினார்.
'மேனகா' படம் முதல் 'கப்பலோட்டிய தமிழன்’ படம் வரை பற்பல திரைப்படங்களில் திரு சண்முகம் சிறப்பாக நடித்தார். இவர் நடித்த 'மேனகா' என்ற சமுதாயப் படம் 1935-ன் சிறந்த படமாகப் பரிசுப் பெற்றது. 1953-ல் மனிதன்' என்ற படத்தில் இவரது நடிப்பிற்காக தமிழகத்தின் சிறந்த திரைப்பட நடிகர் என்பதற்குரிய பரிசினை இவர் பெற்றார்.
திரு. சண்முகம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கும், டில்லி, பம்பாய், கல்கத்தா, நாகபுரி, பெங்களுர், திருவனந்தபுரம் முதலான பற்பல வெளி மாநில நகரங்களுக்கும் தம் குழுவினருடன் சென்று நாடகம் நடத்திப் புகழ் ஈட்டினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாத வெளியீடான “நடிகன் குரல்” ஏட்டின் பொறுப்பாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், இளங்கோ கலைக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும், சென்னை நாட்டிய சங்கத்தின் துணைத் தலைவராகவும், பாரதியார் சங்கம், தமிழரசுக் கழகம் ஆகியவற்றின் பொதுச் செயலாளராகவும் இவர் விளங்கி வந்தார்.
மகாகவி பாரதியாரின் இலக்கியங்களை நாட்டின் பொது உடைமையாக்கியதில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு.
1960-ல் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் திரு. சண்முகத்திற்குச் 'சிறந்த தமிழ் நாடக நடிகர்' என்ற விருது வழங்கியது.
1961-ல் பண்டித மோதிலால் நேரு நூற்றாண்டு விழாவின் சார்பில் புதுடில்லியில் டி. கே .எஸ். சகோதரர்களின் நாடகங்கள் நடைபெற்றபோது, பாரதப் பிரதமர் பண்டித நேரு போன்ற பெரியோர்களால் இவர் பாராட்டப் பெற்றார்.
20. 8. 62-ல் டில்லி மத்திய சங்கீத நாடக அகாடமியின் சார்பில் தமிழ்நாட்டின் சிறந்த நாடக நடிகர் என்ற விருது திரு. சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.
1966-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மாநாட்டில் இவர் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு தமிழ் நாடக வரலாறு பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 1968-ல் திரு. சண்முகம் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
5. 10 .1971ல் பாரதக் குடியரசுத் தலைவர் இவருக்கு 'பத்மஶ்ரீ'என்ற சிறப்புப் பட்டம் வழங்கினார்.
'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்', 'நாடகக் கலை', 'நெஞ்சு மறக்குதில்லையே' ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் நிகழ்த்திய ஆராய்ச்சிச்சொற்பொழிவுத் தொகுப்புநூலாகிய 'நாடகக்கலை’ சென்னைப் பல்கலைக் கழகத்தின் பி. ஏ., பி.எஸ்ஸி. ஆகிய வகுப்புகளுக்கு 1972-ல் துணைப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ள சிறப்பு குறிப்பிட்டத்தக்கது.
திரு. சண்முகம் 26.4. 72-ல் தமது மணிவிழாவின்போது, 'எனது நாடக வாழ்க்கை' என்ற புதிய நூலின் முதல் பாகத்தை அரங்கேற்றினார்.
15. 2 .73 வியாழக்கிழமை காலையில் சென்னையில் மறைவெய்தினார். கலையுலகம் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்தது.
திரு. அவ்வை சண்முகத்தின் நாடக வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு 'பொன் ஏடு' என்று சொன்னால் அது மிகையாகாது.
✽
இராம வீரப்பன்
7. இராமசாமி தெரு,
கோபாலபுரம்,
சென்னை - 600 086.
தொலைப்பேசி: 28/17/66
நாள் : 21.04.06
வாழ்த்துரை
"தமிழ்நாடகத் தலைமை ஆசிரியர்" என்கிற தலைப்பில் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை, சிறிய அளவில் என்னுடைய நாடக ஆசிரியரும், எனக்கு 14 வயது ஆனபோது என்னுடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை வழிகாட்டி அமைத்துத் தந்தவரும் தமிழ் நாடக உலகில் ஒப்புயர்வு இல்லாத தனி இடத்தைப் பெற்றவருமான முத்தமிழ் கலா வித்வரத்தினம் அவ்வை டி. கே. சண்முக அண்ணாச்சி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய அருமைப் புதல்வர் தம்பி டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் இதனை மறுப்பதிப்பாக கொண்டு வருகிறார்கள்.
தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரை கடந்த நூற்றாண்டில் மறைந்த கலைஞர்கள் பலருடைய பெயர் தெரியும், அதைப் போன்றே நாடக ஆசிரியர்கள் சிலருடைய பெயரும் தெரியும் ஆனால், அவர்களைப் பற்றிய வரலாறுகள் தெளிவாக, விரிவாக எழுதப்படவில்லை பொதுவாகவே தமிழகத்தில் கடந்த நூற்றாண்டில் சமுதாய சீர்திருத்த இயக்கம் தோன்றிய ஒரு சூழலில் பழைய கருத்துக்களை, மூடக் கருத்துக்களை எதிர்க்க வேண்டிய அவசியம் நேரிட்டபோது, அந்தக் கருத்துக் களையெல்லாம் அழித்து ஒழிக்கிற முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் விளைவாகப் பழமைக் கருத்துக்கள் அல்லது மூடக் கருத்துகளை எதிர்ப்பது என்ற பெயரில் அந்தக் காலத்தில் தோன்றிய நமக்கு முன்னோடிகளாக வாழ்ந்த, இன்றைய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தந்த பல பெரியவர்களையும் மறந்துவிடுகிற சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிட்டது.
மேலும், பழைய தமிழ் நாடக முறைகள் புதிதாக உருவெடுத்தபோது, புதிய நாடகங்கள் வருவதற்கு அடிப் படையாக அமைந்தவர்களை நாம் மறந்துவிட்டோம் மாற்றங்கள் என்ற பெயரால் - புதிய சிந்தனைகள் என்கிற பெயரால் அவர்களையெல்லாம் மறந்தது மட்டுமல்ல, நினைக்கத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணம்கூடப் பலருக்கு ஏற்பட்டுவிட்டது
ஆனால் அவர்களைப் போன்றவர்கள் இல்லையானால் நாம் இல்லை நம்முடைய திறமைகளும் இல்லை அதன் காரணமாக ஏற்பட்டிருக்கிற வளர்ச்சியும் முன்னேற்றமும் இல்லை என்கிற உண்மை புதைந்து போய்விட்டது அந்தச் சூழ்நிலையில் தன்னுடைய நாடக ஆசிரியராக விளங்கிய - எல்லா ஆற்றலையும் பெற்றிருந்த தமிழை இலக்கண இலக் கியங்களோடு கற்றுத் தமிழின் ஆழத்தையும் அகலத்தையும் கண்டறிந்து சிறந்த கவிஞராக, எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, நடிகராக விளங்கிய தமிழ்நாடகத்திற்கே தலைமை ஆசிரியராகப் பாராட்டப் பெற்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களைப் பற்றி 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலை, 50 ஆண்டுகள் கழித்து அவருடைய திருப்புதல்வன் புதிய பதிப்பாக வெளியிடுவது தமிழர்கள் சரியான நேரத்தில் விழித்துக் கொள்வார்கள், தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது
சிறிய நூல் என்றாலும் மிகச் சிறந்த நூல் எல்லோரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய நூல் இது ஒரு வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய நூல் மட்டுமல்ல; தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம் அதை அழியாத கருவூலமாக வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கிறது தமிழ் உணர்வுள்ளவர்களுக்கு இருக்கிறது. தமிழ்ச் சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கிறது அதற்கு வழிவகுத்த தம்பி டி கே எஸ் கலைவாணன் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து, இந்த நூலை உருவாக்கித் தந்த என்னுடைய ஆசிரியர் , எனது வாழ்க்கையின் வழிகாட்டி அமரர் அவ்வை டி கே சண்முகம் அண்ணாச்சி அவர்களுக்கும், இதனை அழகிய முறையில் மறுபதிப்புச் செய்து, தெளிவான முறையில் அச்சிட்டு வெளியிடும் இலக்கியச்சுடர் மூவேந்தர்முத்து அவர்களின் பூவழகி பதிப்பகத்திற்கும், என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னுரை
கலைமாமணி டி. கே. எஸ். கலைவாணன்
“நாடகம் கலைக்கரசு,நாட்டின் நாகரிகக் கண்ணாடி,பாமரர்களின் பல்கலைக்கழகம்,உணர்ச்சியைத் தூண்டிவிட்டு,உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பயன்படுத்தும் மகத்தான சக்தி"
ஆம்! நாடகக் கலைக்காகவே வாழ்ந்து, தம் வாழ்நாளெல்லாம் நாடகக்கலைக்கே அர்ப்பணித்த என் அன்புத்தந்தையார் தமிழ் நாடகமேதை பத்மஸ்ரீ அவ்வை சண்முகம் அவர்களின் பொன்மொழிகள்தான்இவை நாடகம்தான் அவர் உயிர்மூச்சு தம் ஆறாவது வயதிலேயே தமக்கு நாடகக் கலையினைப் பயிற்றுவித்த - தம் குருநாதராக விளங்கிய ‘தமிழ் நாடகத் தந்தை’யெனப் போற்றப்பெறும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் மாறாத பாசமும் பக்தியும் கொண்டிருந்தார் என் தந்தையார் சுவாமிகளின் பிறந்த நாளான செப்டம்பா 7-ஆம் நாளில் ஆண்டுதோறும், அவருக்கு விழா எடுத்தவர் அது மட்டுமல்லாமல், சுவாமிகளின் புகழ்பெற்ற நாடகங்களான சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசுந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதிஅனுசூயா மற்றும் கோவலன் ஆகியவற்றைச் சொந்தமாகப் பதிப்பித்து நூல் வடிவில் கொண்டு வந்தார்.
தம் குருநாதர் சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு நினைவு மன்றத்தினை ‘சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம்’ என்னும் பெயரில் தொடங்கி, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் சுவாமிகளின் பிறந்தநாள் விழாவினைச் சிறப்பாக நடத்தி வந்தார் 1967-ஆம் ஆண்டில், தமிழகத் தலைநகராம் சென்னையிலும், 1968-ஆம் ஆண்டில் மதுரை மாநகரிலும், சுவாமிகள் நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியதுடன், நாடகக் கலைக் கருத்தரங்கினையும் நடத்தி, பல்கலைக்கழக அளவிலே இக் கலைக்கு ஒரு முக்கியத்துவத்தைத் தந்தையார் ஏற்படுத்தினார்
சென்னையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவினை, அன்று தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா தலைமை தாங்கிச்சிறப்பித்தார் மதுரையில், தமுக்கம் திடலுக்கு முன்பாக, நிறுவப்பெற்ற சுவாமிகளின் திருவுருவச் சிலை யினையும், பேரறிஞர் அண்ணா திறந்து வைத்தார் மேலும், சென்னையில் நடைபெற்ற விழாக்களில் பாரத முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன், மத்திய அமைச்சர் சி சுப்ரமணியம், தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனஜி, முதலமைச்சர்கள் பக்தவத்சலம், டாக்டர் கலைஞர் கருணாநிதி, டாக்டர் எம் ஜி. ஆர் மற்றும் செட்டி நாட்டு அரசர் இராஜா சர் முத்தையா செட்டியார், தொழிலதிபர் அருட்செல்வர் நா மகாலிங்கம், தெ பொ மீனாட்சிசுந்தரனார், சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ சி , தமிழவேள், பி டி இராசன் போன்ற முக்கிய சான்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்
எனவே, இப்புகழ்வாய்ந்த சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்து ஒரு சிறிய நூலாகச் சொந்தமாகப் பதிப்பித்து வெளியிட்டார் தந்தையார் அந்நூல்தான் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ முதல் பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு 1957. அப்போது நூலின் விலை எட்டணாதான் அதன் படிகள் ஒன்றுகூட இல்லாத காரணத்தினால், அதனை மறுபதிப்பாக வெளியிட எண்ணி, நம் பூவழகி பதிப்பகத்தின் உரிமையாளர் இலக்கியச்சுடர் அண்ணன் மூவேந்தர் முத்து அவர்களை அணுகினேன் அவரும் பரிபூர்ண சம்மதத்தோடு இந்நூலை மறுபதிப்புச் செய்திருக்கிறார் அவருக்கு என் இதயபூர்வமான நன்றியினை என் சார்பினும், சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன் இதனை அழகுற அச்சிட்டுக் கொடுத்த மூவேந்தர் அச்சகத்தார்க்கும் என் நன்றி.
மேலும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி, வாழ்த்திய தமிழக முன்னாள் அமைச்சர் - அருளாளர் - அண்ணன் இராம வீரப்பன் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இன்று சுவாமிகளின் நினைவாக சென்னையில் எங்கள் மன்றமும், மதுரையில் சுவாமிகளின் திருவுருவச் சிலையும், புதுவையில் அவருடைய சமாதியும், நினைவு மண்டபமும் இருக்கின்றன மேலும், சுவாமிகளின் பெயரால் மாணவர்களுக்குப் பயன்பெறும் வகையில் நினைவுச் சொற்பொழிவுகள் நிகழ்த்த, தமிழகத்தின் சில பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவப்பெற்றிருக்கின்றன இனி மத்திய அரசின் சார்பில் சுவாமிகளின் உருவம் கொண்ட ஒர் அஞ்சல்தலை வெளிவர வேண்டும் விரைவில் வரும் என்று நம்புகிறோம்
தமிழ் மொழியும், தமிழ் நாடகக் கலையும், தமிழ்க் கலைஞர்களும் இருக்கும்வரை சுவாமிகளின் புகழ் என்றும் மறையாமல் நின்று நிலவும் - ஒளிவீசும் என்பதில் ஐயமில்லை
வாழ்க சங்கரதாசரின் புகழ்!
வளர்க தமிழ்நாடகக் கலை!
நாடகக் கலைஞர்
ஒளவை டி.கே. சண்முகம்
இலக்கியச்சுடர் மூவேந்தர்முத்து
நாடகக் கலைஞர் கலைமாமணி ஔவை டி கே சண்முகம் அவர்களின் 95-வது பிறந்த நாள் விழா 26 4 2006 அன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். நாடக உலகில் தனிப்பெரும் முத்திரை பதித்தவர் சிறந்த எழுத்தாளர் அவரைப்பற்றிய நினைவலைகளை எல்லோரும் அறிந்து கொள்வது மிகவும் நல்லது
எளிமையானவர் பல நடிகர்களை உருவாக்கியவர் அவரைப்பற்றிய வரலாற்றை நாம் பார்ப்போம்
புராண நாடகங்கள், தேசபக்தி நாடகங்கள், அறநெறி மற்றும் சீர்திருத்தக் கருத்துகள் கொண்ட நாடகங்கள் எனப் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மிகவும் பிரபலமாக விளங்கியது டி கே எஸ் சகோதரர்களின் நாடக சபா அந்தச் சகேதரர்கள் நால்வரில் ஒருவர்தான் தி க சண்முகம் அவர்கள் “நாடகத் துறையில் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றியவர்களில் தலையாய இடத்தைப் பெற்றவர் என்றும், நாடகத் துறையின் தொல்காப்பியர்” என்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1912, ஏப்ரல் 6ஆம் தேதி பிறந்த தி க சண்முகம் அவர்கள் தமது ஆறாவது வயதிலேயே நாடகத் தந்தை என்று போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை தத்துவ மீனலோசினி வித்துவபால சபையில் நடிகராகச் சேர்ந்தார். 74 நாடகங்களில் பல்வேறு குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து, நடிப்பால் மக்கள் மனத்தை ஈர்த்தார். அவற்றுள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறநெறி பாடல்களைப் பாடிய பழந்தமிழ்ப் பெண்பாற்புலவரான ஔவை என்பவரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி வயது முதிர்ந்த ஒளவைப்பாட்டி வேடத்தை இவர் தாங்கிச் சிறப்பாக நடித்து, தமிழறிஞர் பெருமக்களின் பாராட்டைப் பெற்றார் அதன் பின்னர் இவர் ‘ஔவை சண்முகம்’ என்று அந்தப் பாத்திரப் பெயர் அடை மொழியுடன் அழைக்கப்பட்டார்
1922-இல் அன்னியப் பொருட்களை எதிர்த்து நாடெங்கும் தேசப் பிதா காந்திஜி கதர் இயக்கம் என்ற ஒரு தனி இயக்கத்தை ஆரம்பித்த நேரத்தில் “கதரின் வெற்றி” என்றொரு நாடகத்தைத் தயாரித்தார்.
கதரின் பெருமைபற்றி விளக்கிய அந்த நாடகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பெற்ற தேசியச் சமூக நாடகமாகும் அந்த நாடகத்தின் பாத்திரங்களை யாவரும் கதர் உடுத்தி நடித்தார்கள். பின்னர் 1931இல் வங்கம் தந்த சிங்கம் சுதந்திரப்போர் வீரர் பகத் சிங்கை வைத்துத் தேசபக்தி என்னும் நாடகத்தை மேடையில் இயற்றினார்
இந்நாடகத்தில் பாடப்பட்ட பாடல்கள் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டிவிட்டன. இந்த இரு நாடகங்களும் ஆங்கில அரசால் பின்பு தடை செய்யப்பட்டன. பெரியவர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கான ‘அப்பாவின் ஆசை’ என்ற நாடகத்தையும் அரங்கேறச் செய்து வெற்றி கண்டார்
1941இல் மதுரைத் தமிழ்ச் சங்கம், இவருக்கு ‘முத்தமிழ் கலா வித்துவரத்தினம்’ என்னும் பட்டத்தைச் சூட்டியது 1950இல் இவருடைய முயற்சியால் தொடங்கப்பெற்ற நாடகக் கழகத்தின் முதல் தலைவராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கும் டில்லி, பம்பாய், கல்கத்தா, நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் முதலிய வெளி மாநிலங்களுக்கும் தம் குழுவினருடன் சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார்.
1960இல் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் ஔவை சண்முகம் அவர்களுக்குச் சிறந்த தமிழ் நாடக நடிகர் என்ற விருது வழங்கியது. 1961இல் பண்டித மோதிலால் நேரு நூற்றாண்டு விழா சார்பில் புது டில்லியில் இவரது நாடகங்கள் நடைபெற்றபோது பண்டித நேரு அவற்றைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்
1963 புதுடில்லி சங்கீத நாடக அகாடமி சண்முகம் அவர்களுக்கு இந்தியாவின் சிறந்த நாடக நடிகருக்கான விருது வழங்கிக் கெளரவித்தது
1968இல் சென்னை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1971இல் இந்தியக் குடியரசுத் தலைவரால் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார் ‘நாடகக் கலை’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி ஏ , பி எஸ் சி , ஆகிய வகுப்புகளுக்குத் துணைப் பாடநூலாக வைக்கப்படும் சிறப்புப் பெற்றது. இவரது நாடகக் குழுவில் பணியாற்றிய அத்தனைப் பேர்களுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், சரித்திரம் போன்ற பாடங்களுக்கு வகுப்புகள் எடுக்கச் செய்து, நாடகக் கலைஞர்களைப் படித்தவர்களாக மேம்படுத்தினார் இவரது நாடக வாழ்க்கை தமிழ் நாடக வரலாற்றில் ஒரு பொன் ஏடு என்று சொன்னால் மிகையாகாது.
தம் 50 ஆண்டு கால நாடக வாழ்க்கையை இவர், ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் தலைப்பில் நாடக வரலாற்று நூலாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். தம் நாடக வாழ்க்கையை முதன்முதலாக நூலாக, வெளியிட்ட முதல் நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுப் பெருமை சேர்த்தது ‘எனது நாடக வாழ்க்கை’ நூல் மூவேந்தர் அச்சகத்தில் அச்சிடப் பெற்றதும் ஒரு பெருமைதானே!
நூல் அச்சாகும்போது மூவேந்தர் அச்சகத்துக்கு அண்ணன் தே ப பெருமாள் அவர்களோடு அடிக்கடி வருவார். காலையில் சண்முகம் அண்ணாச்சி தம்பி தி க பகவதி அவர்களோடு நடந்து வரும்போது, எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துப் பேசிவிட்டுத்தான் இருவரும் செல்வர் அவ்வளவு பண்பானவர்
மேலும், தம் நாடக மேடை அனுபவங்கள் சிலவற்றைத் தொகுத்து ‘நெஞ்சு மறப்பதில்லையே’ என்ற நூலாக வெளியிட்டு உள்ளார். அவருடைய நாடக சம்பந்தமான சிறந்த கட்டுரைகளும் வானொலியில் இவர் இயற்றிய உரைகளையும் தொகுத்து ‘நாடகச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பிலும் ஒரு நூல் வெளிவந்தது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சார்பில் இவரது ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் நூல், 1974ஆம் ஆண்டில் நம் நாட்டின் சிறந்த சுயசரிதை நூலுக்கான முதல் பரிசும் ரொக்கமும் பெற்றுள்ளது
அண்ணாச்சி ஔவை டி கே சண்முகம் மணிவிழா ஏ வி எம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நாங்கள் குடும்பத்தோடு சென்று வாழ்த்துப் பெற்றோம். அப்போது நடிகை எம் எஸ் திரௌபதியும வந்திருந்தார்.
இப்புகழ் வாய்ந்த நாடகக் கலைஞர் தம் 61வது வயதில் 15 2 1973 அனறு இருதய நோயால் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அரசியல் தலைவர்களும், திரைப்பட நடிகர்களும் ஏராளமாக வந்து அஞ்சலி செலுத்தினர். அவர் புகழ் பாடாத நெஞ்சங்கள இல்லை. இடுகாட்டில் ம பொ சி தலைமையில் இரங்கற்கூட்டம நடைபெற்றது. தி க பகவதி, டி என் சிவதாணு இருவரும் முன்னின்று நடத்தினர். நடிகர் சிவகுமாரும், நானும் அருகருகே அமர்நது அஞ்சலி செலுத்தினோம்.
இந்தியாவில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் நாடகக் கலையும் நடிப்பும் உள்ளவரை, இவர் புகழ் என்றும் மங்காது நின்று ஒளிவீசும் என்பது திண்ணம். அவருடைய குருவான சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய வாழ்க்கை வரலாற்றைப் பலருக்கும் பயன்படும்படி எழுதியுள்ளார். நாடக உலகில் வரலாற்றை உருவாக்கிய இந்த நூலை எங்கள் பதிப்பகத்தில் வெளியிடுவதில பெருமை கொள்கிறோம். தமிழ் மக்கள் இந்த நூலை விரும்பி வரவேற்பார்கள் வாழ்த்துரை வழங்கிப் பெருமைப்படுத்திய அண்ணன் - அருளாளா ஆர் எம் வீ அவர்களுக்கு எங்கள் பதிப்பகத்தின் சார்பில் நன்றியினைத தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
மூவேந்தர்முத்து
தமிழே சிறந்தது
(சங்கரதாஸ் சுவாமிகள்)
பல்லவி
தமிழே சிறந்ததென உனது நாமம் விளங்க
சாற்றும் அந்தப் பொருளை யாரறிவார்-அம்மா
(தமி)
கண்ணிகள்
அமிழ்தினிற் சிறந்தது ஆரியத் துயர்ந்தது
அகத்திய னார்சிவ னிடத்திலுணர்ந்தது
அடிசீர் மோனை எதுகை தொடைசேர் தளையின்வகை
யாகும் பாவினஞ் சந்தமா விரிந்தது வண்ணத்
(தமி)
திணைபால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப்பகுதி
சேர்ந்தவிதங்களெல்லாம் தென்மொழிக்கே தகுதி
இணையெனும் வடமொழி இருமொழியின் பேர்வழி
இசைக்கும் எழுதுவ தெல்லாம் வலஞ்சுழி அதால்
(தமி)
அகரத்தோடகரஞ்சேர் வடமொழி தீர்க்கசந்தி
ஆகுமென் றுரைப்பார்கள் அறியார்கள் புத்தி நந்தி
மகரவொற் றிழிவிதி மார்க்கமென் பதைப் புந்தி
வைத்தவர் மருவென்றாரே முந்தி அதால்
(தமி)
கயற்கண்ணி மொழிபெயர்ப்பதற்கென வுரைசெய்வார்
கந்தபுராணமதின் காப்புச் செய்யுளறியார்
இயற்படப் புணரியல் என்னுடன் வாதாடுவார்
இசை மராடி என்பதற்கென் புக்ல்வார் அதால்
(தமி)
வடமொழி வழக்கில்லை வழங்குவர் தமிழ்ச்சொல்லை
மலைவேங் கடங்குமரி மற்றிரு கடல் எல்லை
இடமாக வகுத்தவர் இன்றுளார்களு மில்லை
இயம்பும் மீனாட்சி என்ற பெயர் வல்லை அதால்
(தமி)
தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள்
பிறப்பு: 1867மறைவு: 1922