தாவோ - ஆண் பெண் அன்புறவு/தனிமை - இணைமை

விக்கிமூலம் இலிருந்து


தனிமை - இணைமை
73. தானே உருவானது

ஒன்றே ஒன்று தேவைப்படுமானால், இரண்டுகளே இருந்திருக்கா இருந்தும் நாம் ஒவ்வொருவரும் இருவர் ஒனறாக இணைந்ததால்தான் உருவாகி உள்ளோம்

ஆண், பெண் இருவரிடமும் ஆண், பெண் என்பது தவிர வேறு ஒன்று உள்ளது - தானாகவே உண்டான ஒன்று. ஏதோ ஒன்று தேடி, அதிலிருந்து உண்டானது

பெற முடியாத அளவிற்கு எளிமையானது, காண இயலாதபடி அருகிலேயே உள்ளது

74. தொடக்கம் முடிவு

இருவரை உணடாக்க மற்றவரைத் தேடும் போது, ஒன்றின் இயல்பை நினைவுகொள், நாம் ஒருவராய் பிறந்து, ஒருவராய் மடிகிறோம்

தொடக்கமும, முடிவும் தெளிவாக உள்ள போது மீதியைக் காண் மீதத்திலிருந்து தான் பொறுமையும், ஒத்திசைவும் உண்டாகுகின்றன.

75. எளிய அமைதி

சொற்கள் அமைதியை மறைக்கும் போது, பேசாமையைக் கவனி, சொற்களை அல்ல

எளிய சொற்களே தோழமையின் பேசாமை எளிமையான அமைதியே ஒன்றிணைந்திருப்பதைக் குறிக்கிறது

76. வெறுமையும் முழுமையும்

பிரிவின் தொடக்கம்தான் சந்திப்பு சந்திப்பின் தொடக்கமே பிரிவு புறப்படுவது எப்போது? வந்து சேர்வது எப்போது? முடிவிலிருந்துதான் பிரிவு தொடர்கிறது - ஒன்றிலிருந்து மற்றொன்று

மற்றதிலிருந்து தான் ஒன்று உருவாகுகிறது. ஆக, ஒரே நேரத்தில நினைவு கூர், மற

நடப்பதெல்லாமே எதிர்பாராதவை, வியப்பை ஊட்டுபவை எதிர்பாராதது கண்டு கொள்ளப்பட்டு எதிர் நோக்கப்படுகிறது

தனிமையிலோ, ஒன்றுசேர்ந்தோ, ஏதுமில்லாமலும், முழுமையாகவும், அறிந்தும், அறியாததுமாகத் தொடர்க 77. மறைத்தல்

தன்னை முழுமையாக மற்றொரு முழுமையில் இருந்து மறைப்பது முழு சந்திப்பிற்கு இடையூறாகும்

அம்மணமாக உடல்கள் முழுமையான சந்திப்பது கடினம்தான்.

இரு உடல்கள், உடை உடுத்திப் பாசாங்கு செய்யும் போது, ஒன்றை ஒன்று நெருங்க முடியாது. இவற்றின் சேர்ந்திருப்பதில் பிரிவு உண்டு, ஆனால் பிரிவில் ஒன்றாக இருப்பதில்லை

78. உரிய காலத்தில்

இலையுதிர்கால இலைகள் போலப் பிரிவு என்பது விழுந்துவிடும் இலைகள் பசுமையாய் இருக்கும் போது, மரத்தை உலுககுவதில் பலனில்லை.

உரிய காலத்தில் அமைதியில் கூட கிளைகள் மெதுவாகப் பட்டுப்போய் அம்மணத் தோற்றத்தை அடைகின்றன

79. பிரியாமல் பிரிதல்

பார்ப்பதிலிருந்து காண்பதும், கேட்பதில் இருந்து கவனிப்பதும் தோன்றின என்பதை மறந்து விட்டோம். பிரிவு என்பதும் சேர்ந்திருத்தலில் இருந்துதான் வந்தது.

மீண்டும் பார்ப்பது என்பதிலிருந்து காண்பதும், மீண்டும் கேட்பதிலிருந்து கவனிப்பதும் ஆயிற்று. காண்பதும், கவனிப்பதும் முழுமையாகவும் எளிதாகவும் ஆகும் வரை பார், கவனி

பிறகு பார்ப்பதைக் காண், கேட்பதைக் கவனி கண், காது இவற்றிலிருந்து எண்ணத்தை வெளியேற்று காணாமல் பார், கேளாது கவனி பின்னர் அங்கே பார்ப்பதும், கவனிப்பதும் உள்ளது

பிரியாமல், பிரிந்து செல், அப்போது அங்கே இணைந்திருக்கலாம்

80. மிக்க நெருக்கம்

நினைத்துக் கொள்ளும் போது போய்விடும், மறக்கும் போது அங்கே இருக்கும் இயற்கை நேர் அறிவை வழி தவறிச் செல்ல வைக்கும்

தாங்கள் ஒன்றாக இருப்பதை உணராத ஆணும் பெண்ணும் பெரும்பாலும் ஒன்று சேர்ந்திருப்பர் எது போல என்றால் - காலில் அணிந்துள்ள செருப்பு செருப்பே இல்லாது போல தோன்றும் போது நடப்பதை எளிதாக்குகிறது. மேல் சட்டை அணிந்திருந்தும், அது இல்லாது போல உணரும் போது குளிரைத் தடுக்கிறது இதுபோல ஆணும் பெண்ணும் தாங்கள் அறியாமலேயே உணராமலேயே ஒன்றாயிருக்கின்றனர்.

81. ஒன்றிலிருந்து மற்றொன்று

ஒன்றிலிருந்து மற்றொன்று வருவதாய் அறிவர்கள் கூறுகின்றனர். பெண் ஆணிலிருந்தும், ஆண் பெண்ணிலிருந்தும் தோன்றுகின்றனர்.

எப்போதும் வெளிப்புறம் உட்புறத்திலிருந்துதான் தொடர்கிறது ஆண் முதலில் தன்னை அறிந்த பின் தான் பெண்ணை அறிகிறான் இது போலத்தான் பெண்ணும் தன்னை உணர்ந்து கொள்கிறாள், பிறகு மற்றவரை அறியலாம்.

பிரிவிலிருந்துதான் சேர்க்கை தோன்றுகிறது சேர்ந்திருப்பதைக் கண்டுகொள்ள பிரிவிலிருந்து தொடங்கு. இம் முறையில் பிரிவும், சேர்க்கையும் இருக்கக் கூடும்.

82. கோணலும் வட்டமும்

இணைந்திருப்பதும், தனித்திருப்பதும் ஒன்றாகத் தான். பிரிவும், சேர்ந்திருப்பதும் பிரிந்து செல்கின்றன இரண்டும் தனியாக இருக்க எவ்வாறு இவை ஒன்றாகும்? இணைந்திருப்பதில் பிரிவும், பிரிவில் இணைந்திருப்பதும் எங்கே?

பிரிந்திருக்கும் போது இணைந்திரு இணைந்திருக்கும்போது பிரிந்து இரு ஒன்றாக இருக்க இரண்டையும், இரண்டாக இருக்கும்போது ஒன்றையும் பயன்படுத்து.

மனத்தின் வினாக்கள் சொற்களுடன் விளையாடுகின்றன நேராக எண்ணுவதில் ஒரே மனத்தில் இருப்பதுதான் குழப்பம். இயற்கையின் நேர்மையில்லாத முறுக்கிய வளைந்த வழிகள் எண்ணத்திற்கு ஒவ்வாது

கேட்க வினாக்கள் இல்லை, ஆகவே வினவாதே. சொல்ல விடைகள் இல்லை, ஆக விடையளிக்காதே. வினாக்கள், விடைகள் இல்லாமல் விளையாடு.

83. நேரிய மனம்

இணைந்திருப்பதன் முழுமையை ஒரே ஒரு மனம் மட்டும் புரிந்து கொள்ளாது. பிரிவின் முழுமையையும் இரு மனங்கள் ஒன்றாக இருந்தும் அறியா.

ஒரு மனம், இரு மனங்கள், பல மனங்கள் தேவையாகின்றன. ஒவ்வொன்றும் புரிந்து கொள்ள நேர்மனம் தேவை

முழுமனமும் மனமின்மையும் எங்கே?

84. ஒவ்வொருவரிலும் இருவர்

ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து தனிமையில்
உள்ள போது, ஒருவருக்கொருவர் சேர்ந்திருப்பதில் தனித் தன்மை உடையவர்கள் ஆனால் மற்றவர்களிடம் ஒரே தன்மைபோல இருப்பதில் பொதுவானவர்கள்

ஒவ்வோர் இருவரிலும், இருவரும் ஒருவராக ஆகின்றனர் இருவரை எது இணைக்கின்றதோ, அதுதான் ஒவ்வோர் இருவரையும் பிணைக்கிறது அதுவே எல்லோரையும் சேர்த்துவைக்கிறது ஒவ்வோர் இருவரிடமும் எல்லாமே புரிந்து கொள்ளச் செய்கிறது

ஒவ்வோர் இருவருக்கும் எல்லாமே கிடைக்கிறது. ஒவ்வோர் இருவர் மூலம் 'இயற்கை நெறி' காணப்படுகிறது ஒருவருக் கொருவர் தழுவிக் கொள்ள எல்லாமே தழுவப்படுகிறது. வேறு எப்படி இயற்கையைத் தழுவ முடியும்?

85. மூன்றாவது மனம்

இரு மனங்களின் பிரிவில் மூன்றாவது மனம் தான் இணைந்திருப்பதை அறிகிறது

மூன்றாவது மனம் என்பதை எந்த ஒரு மனமும் விளக்கம் தர முடியாது. ஆனால் ஒவ்வொரு மனமும் இணைந்திருப்பதைக் கேட்கும் போது மூன்றாவது மனத்தை உணர்கிறது. அது வெளியே உள்ளதை அறிகின்ற உள்புறமாகவும், உள்ளே உள்ளதைப் புரிந்து கொள்கின்ற வெளியே உள்ளதாக இருக்கிறது. இப்படித்தான் வெளியே உள்ளதைச் சந்திக்கின்ற உட்புறம். மற்றவரைக் காண்கின்றது. ஒவ்வொருவரும் இருவராகவும் ஆகின்ற பொருள்தான் அது

மூன்றாவது மனம் பிடிபடாதது, எதிர்த்து நிற்பது. புதையலை இழப்பதின் மூலம் அது தானே காலத்தில் வெளிப்படும்

86. விதையும் விளைநிலமும்

ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரிடமிருந்து வளர்கின்றனர். ஒவ்வொருவரும் மற்றவரின் மண்ணாகவும், விதையாகவும் உள்ளனர்

உந்துதலும், பலமும், மாற்றமும் உள்ளபோது, ஒருவருக்கொருவர் வித்திடுங்கள், திட்டமிட்ட தகப்பனாக இரு. பொறுமை, கவனிப்பு அமைதி உள்ள போது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்க. வளர்க்கும் தாயாக இரு

விதை, மண் இவற்றிலிருந்து வாக்குறுதி உருவாகிறது.

87. கண்டறிதல்

தனிமையிலும், தனித்தும் இருப்பவருக்கு இன்னொருவரும், சேர்ந்திருப்பதும் தேவைப்பட்டால் தேவை உள்ளவரைத் தேடுவதில் தேவைப்பட்டவருக்கு என்ன இடர்ப்பாடு?

பலரில் சிலரையா அல்லது சிலரில் ஒருவரையா நாம் யாரைத் தேர்ந்தெடுப்பது? வெளியே நம்மையே காணும் நாம் தான் இதுவா? நாம் யாரைத் தேடுகிறோம்? வினாக்களை விரட்டும் வினாக்கள். தேடுவதைக் குழப்புகின்றன எண்ணங்கள்.

தேடுவது கடினம் என்று தோன்றுகிறது, கண்டுபிடிப்பது எளிது

காண்பதைத் தடுக்கும் பார்ப்பதை உருவாக்கும் தேடுதல் போலக், கண்டுபிடிப்பதைத் தடுக்கும் காண்பதை உருவாக்குவதும் தேவை என்பது.

கண்டு பிடிப்பதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட திறப்பாகும்.

88. கமுக்கம் தெளிவானது

வழக்கத்திற்கு மாறானதுதான் வழக்கமானது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தேடித் தங்களை
முதல் வாழ்க்கைத் துணையாகக் கொள்வது எவ்வளவு வழக்கமானது! மற்றவரை அறிந்து கொள்வதற்கு வழி தன்னைத் தானே கண்டு கொள்வது எவ்வளவு எளிது. வியப்பு நெருங்கிய பழக்கத்துடன் வளர்கிறது, அறிந்து கொள்வதுடன் கமுக்கம் வெளிப்படுகிறது, இழப்புடன் அதிகமாகிறது வரவு. இவை எல்லாம் எவ்வளவு வழக்கமானது! ஆணும் பெண்ணும் அவர்களது சேர்க்கையால் உறுதி செய்யப்பட்டும் உறுதி செய்யப்படாமலும், அழிக்கப்பட்டும், திரும்ப உருவாக்கப்பட்டும், இழக்கப்பட்டும், புதிதாகக் கண்டு பிடிக்கப்படுவது எவ்வளவு எளிமை

வழக்கமானதைக் கண்டு கொள்ள எண்ணமிடுவது பயனேதுமில்லை தெரிந்தெடுத்தல், தெரிந்தெடுக்காதது, செய்வதும், செய்யாததும், ஏன், ஏன் கூடாது என்பவை குழப்புகிற தேக்க நிலைக்கான போராட்டம்

தெளிவாயுள்ளதுதான் கமுக்கம். வழக்கமானதில் மறைந்துள்ள வழக்கமின்மைதான் வழக்கம். வழக்க மற்ற இயற்கை தான் வழக்கமான 'இயற்கை நெறி'

89. சரிசமமற்ற மனம்

பிரிவும், இணைந்திருப்பதும் ஏன் மூச்சு விடுகின்றன? ஆணும் பெண்ணும் தங்களை விட உயர்ந்த ஏதோ ஒன்றிற்காக ஏன் ஆடுகின்றனர்?

மனம் தேடுகிறது. ஆனால் அடிப்படையான ஏதோ ஒன்றுதான் மூச்சு விடாத மனத்தைத் தவிர்க்கிறது. - சரிசமமற்ற மனம்.

90. கமுக்கச் சந்திப்பு

உடலின் சில அங்கங்கள் வெளிப்படையாகப் பெருமிதமாகத் தெரிகின்றன சில ஒழுக்கத்தின் காரணமாக ஆடை அணிவிக்கப்பட்டுள்ளன. மற்றும் சில, ஆண், பெண் இருவரின் சந்திப்பின் வரை மறைந்துள்ளன இரு உடல்களும் தொட்டுப், பங்கிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முழுமையாக உணரும் நோக்கில் திறந்து கொள்கின்றன.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டபோது, அடக்கம், மரியாதை இவற்றால் கட்டுப்படாதபோது, திறக்க வேண்டியதெல்லாம் திறந்தபின், மூடி மறைக்க வேண்டியதென இல்லாத போது, ஏதோ ஒன்று மறைந்தும் கமுக்கமாயும் உள்ளது

தொட்டு உணர்வதற்கு அப்பால் உள்ளது என்ன. தொடவும் அறியவும் ஈர்க்கப்படுவதும், உடலின் எண்ணங்களையும், மனத்தின் பாகங்களையும் வாழ வைத்து, ஆண் பெண் இருவரின் கமுக்கச் சந்திப்பைப் கமுக்கமாக வைப்பதும் எது?

91. முயற்சியின்மையை நம்பு

ஒருவருக்கொருவராய் இருங்கள் ஆனால் தனது என உரிமை கொண்டாட வேண்டா பற்றிக் கொள்வது இழப்பாகும் சேர்ந்திருப்பது தானே வரவேண்டும் நாளும் வாழ்க்கையில், சின்னச் சின்னச் செய்திகளில் விழிப்பாயிரு. பெரிய சிக்கல்களை வெற்றி கொள்ளலாம். துன்பத்தை, அது வரும் முன் எதிர்கொள். மானதை வழக்கமில்லதை எளிதாகும். எளிமையை நம்பு, அதை சிக்கலானவற்றிலும் காணலாம். இடர்பாடானவற்றை எதிர்பார். எல்லாமே எளிதாகும். கவனமாயிரு. ஆனால் முயற்சி இல்லாதவற்றை நம்பு.

92. இரண்டிலும் இரு

சேர்ந்திருப்பதில் இருந்து சேர்ந்திருப்பதைக் குலைக்கும் பிரிவின் நினைவு உண்டாகிறது பிரிவிலிருந்து பிரிவைக் குலைக்கும் சேர்ந்திருப்பதன் நினைவு ஏற்படுகிறது

சேர்ந்திருப்பது பிரிவையும் உள்ளடக்கியது பிரிவு சேர்ந்திருப்பதையும் கொண்டது ஒவ்வொன்றிலும் மற்றது உள்ளது.

இரண்டினுள்ளும் இருப்பதற்கு முதலில் ஒன்றாலும்,
பின்னர் மற்றதாலும் எடுக்கப்படும். பின் இரண்டிற்கும் உட்படு

ஏதேனும் ஒன்றிலிருந்து தப்ப இரண்டும் இருப்பது போல, இரண்டிலிருந்தும் தப்ப ஏதுமில்லை.

93. இழத்தலும் கண்டறிதலும்

சேர்ந்திருக்கும் போது பிரிவை நினைவு கூற, சேர்ந்திருத்தல் இழக்கப்படுகிறது பிரிந்திருக்கும் போது இணைந்திருப்பதை நினைவு கொள்ள பிரிவு அழிகிறது. இவ்வாறு நினைவு கூர்வதால் பிரிவில்லையேல் இணைந்திருப்பதும், இணைந்திருப்பதில்லையேல் பிரிவும் ஏற்படுகிறது?

இரண்டையும் கைக்கொள். அப்போது இரண்டையும் விட்டுவிட்டுக் கண்டுகொள். எல்லாவற்றையும் கைவிட எல்லாவற்றையும் கைக் கொள் உடனே... இவை அவ்வளவு எளியவை.

94. தன் வழிமையத் தானே கண்டறிதல்

மழைத்துளி கல்லையே பிளக்கிறது முகில் மலையை வேறுபடுத்துகிறது.

பள்ளாத்திக்கின் எல்லைகளுக்குட்பட்ட நீரோடை தன் வழியே தன் இச்சையாய்ப் பாய்கிறது.

95. காண்பது போல மிக எளிது

ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கவும், இணங்கி சமநிலையில் இருக்கவும் முயன்றால், சேர்ந்திருப்பது அவ்வளவு கடினம். இணங்கி இருப்பதால் அவர்கள் காணப்பட்டால், அவர்கள் எங்கும் செல்கிறார்கள். எல்லாமே தாமே நடப்பது போலத் தோன்றும், இணங்கி இருப்பதும் மிகவும் அவ்வளவு எளிது

நாம் "தான்” என்றிருப்பதால், நாம் சேர்ந்திருக்க முயலுகின்றோம் அப்படி இல்லையேல், இணங்கி இருப்பது நம்மைப் பற்றிக் கொள்கிறது

ஆகவே, நம்பு, துணிந்து செயல்படு வெளியே வா கட்டமை, பிறகு பிரிவு, இணக்கம் இரண்டிலும் முழுமையாக நுழை.

முயற்சி செய், ஆனால் விட்டுக் கொடு வெறுமை யாக்கி, இணைந்திருப்பது என்ற முடியாமையை நிரப்பு கடினம்தான், ஆனால் காண்பது போல மிக எளிது

98. ஆழ்ந்த சந்திப்பு

ஒருவரின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மற்றவர் தொடுவதே ஒருவர் மற்றவரைத் தொடுவதாகும்

உட்புறத்தை உட்புறமும், வெளிப்புறத்தையும் காண்பதே வெளியே இருப்பதை வெளியே உள்ளது உள்ளே எடுத்துச் செல்ல, உள்ளே இருக்கும் இரண்டும் சந்திக்கின்றன.

உட்புறம் உட்புறத்தைச் சந்திக்க, அதை வெளிப்புறத்திலிருந்து பிரிப்பது அவ்வளவு கடினம்

உட்புறம், வெளிப்புறம் என்பது உண்மையிலேயே உள்ளதா? ஆழ்ந்த சந்திப்பின் எளிமையைச் சொற்கள் தான் சிக்கலாக்குகின்றன.

97. போதுமானது

எல்லா இடங்களிலும் தேடுவதற்கு மாறாக உள்ளேயே ஆழ்ந்து தேடு, இணக்கத்திலேயே தேடு.

தொடக்கம் கண்டு பிடிக்கப்படின், ஒவ்வோர் ஆண், பெண் இவர்களிடம் உள்ள மறைபுதிர் போதுமானதே

98. முயற்சியின்மை

தொடக்கத்திற்கு முன்பே இணைந்திருப்பது வந்தது. உட்புறத்தினை விட ஆழத்திலிருந்து வந்தது. அது உட்புறம், வெளிப்புறம் இரண்டையும் பொருந்துவதாகச் செய்கிறது. அது ஆண்,பெண் இருவரிடமும் உள்ள வேறுபாட்டைத் தீர்த்து வைக்கிறது.
இணைந்திருத்தல் என்ற இயற்கையை நம்பு வழககமானது, வழக்கமில்லாதது இவற்றிற்கிடையே, ஒவ்வொரு நாளும இன்னும சில பிரிகின்றன இது, எவ்வித முயற்சியும் இலலாமல், ஒவ்வொன்றும் அதன் முறையான வழியில் செல்லும் வரை நடக்கிறது

99. திறந்த மனத்துடன்

தனித்திருததல, ஒருங்கிணைதல் இரண்டு நிலைகளிலும வெற்றி காண மனத்தை இரு கூறாக ஆக்கிக் கொள எண்ணங்கள் அதனதன் இடத்திலிருந்து நழுவி விழுந்து இங்கு அங்கு என்றில்லாமல் எங்கோ மறைந்திடட்டும்

தசைகளை தளர்த்திடு இறுக்கமாய் இருந்துபார் ஏதோவொன்று கை நழுவிப் போய்விட்டது என்பதை உணர்

மனம் திறந்த நிலையிலும், எண்ணங்கள் வெறுமையில் சிதறி விழும் போதும், இயற்கையைத் தன் வழியில் செல்லவிடு. இருப்பது அலலது இல்லாதது இவற்றையும் அதனதன் போக்கில் செல்லவிடு

100. எண்ணங்களிடையே

தனித்திருத்தல், நாம் ஒருங்கிணைதல் என்று பேசுகிறோம் ஆனால் எந்தச் சொற்களைப் பயன்படுத்தினால் எந்த எண்ணங்களை வெளிப்படுத்த முடியும என்று தீர்மானிப்பதிலேயே சிக்கல் இருககும பொழுது எண்ணத்தை வெளிப்படுத்தும் சிந்தனையை எவவாறு புறக்கணிக்க முடியும்? சொற்களின் அமைப்பு எண்ணங்களின் உருவத்தைத் தீர்மானிக்கும் நிலையை எந்த எண்ணத்தை உருவாக்கும் சிந்தனையைத தான் நம்ப முடியும்?

சொற்களுக்கு மேல் சொல் சிந்தனை இல்லாமல் தொடரும்போது, சொற்களின் சேர்க்கையை ஒட்டி எண்ணங்களுக்கு மேல் எண்ணங்கள் தொடருகின்றன

சொற்களினால் கட்டுப்படுத்த முடியாத எண்ணங்களைக் கண்டு பிடி

தனித்திருத்தல், ஒருங்கிணைதல் என்றெல்லாம் எதுவும் கிடையாது சொற்களை மீறிய நிலை இது