உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-கவ்வருக்கம்

விக்கிமூலம் இலிருந்து

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை

[தொகு]

ஆசிரியர்: தெரியவில்லை

[தொகு]

கவ்வருக்கம்-12 பாடல்கள்

[தொகு]

(வழிபாடு மறுத்தல்)

பாடல் 13 (கணங்கொண்ட)

[தொகு]

ணங்கொண்ட கார்வண்ண ராதி வராகர் கரந்தைவெற்பில் ()

வனங்கொண்ட சோக மடைந்துநிற் பீரும்மை வந்தடைந்தே ()

னினங்கொண்ட சோக மெளியேனெய் தாம லிடந்தருவீர் ()

முனங்கொண்ட மாதவி காளளி கூரு முகமலர்ந்தே. (60)


(மறுத்தெதிர் கோடல்)

பாடல் 14 (காமக்கனலிற்)

[தொகு]

காமக் கனலிற் பெருவாரிக் கோடங் கருமெழுகால் ()

வாமத்தமைத்துக் கடப்பதொப் பாமுந்தி வந்தகஞ்சப் ()

பூமற் கருளுங் கரந்தை வராகர் பொதியமன்ன ()

தாமத் தடம்புயத் தார்தமை நாணிற் றகைவதுவே. (60)


(இடையூறு கிளத்தல்)

பாடல் 15 (கிரிசனுந்)

[தொகு]

கிரிசனுந் தானு மிரண்டாயொன் றாய்நின்ற கேண்மைவிடாப் ()

பரிசனஞ் சூழுங் கரந்தைப் பிரான்பன்ன காசனம்போற் ()

றெரிசனந் தந்து கடலடைத் தீர்வெற்புஞ் சேர்த்தணைத்தாய் ()

வருசன னத்திலி ராமனென் றேசொல்ல லாமும்மையே. (60)

()

(நீடு நினைந்து இரங்கல்)

பாடல் 16 (கீதம்பயிலும் )

[தொகு]

கீதம் பயிலுங் கிளையார் வராகர் கிரியினின்றே ()

னேதம் பயில வெழில்சிறந் தீர்நிலை யேதிளமை ()

வேதம் பயில்தமிழ் நாலடி யாருள் விதித்தன்றோஃ ()

காதம் பயில்விழி யீரென்று கூடிக் களிப்பதுவே. (60)


( )முயங்குதலுறுத்தல்

பாடல் 17 (குருந்திடை)

[தொகு]

குருந்திடைக் கோவியர் கூறைகொண் டேறிய கோவியர்த ()

மருந்தவந் தேற விருந்தார் கரந்தையி லன்னமன்னார் ()

பொருந்திய நன்னய மென்னோய் தணியென்று போனவற்கு ()

மருந்தெனப் பண்டிதன் பாலைமுன் னேவைத்த வாறொக்குமே. (60)

(புணர்ச்சியின் மகிழ்தல் )

பாடல் 18 (கூர்தாங்கு)

[தொகு]

கூர்தாங்கு முட்பொதி கட்பல வீன்ற குடக்கனியுஞ் ()

சீர்தாங்கு வாழையும் தேமாங் கனியுஞ் சிறிதினிக்கும் ()

பார்தாங்கு செச்சைய னாதி வராகர்பைங் காவினிற்கு ()

மேர்தாங்கு கொம்பியர் செவ்வாய் நறுங்கனிக் கீடலவே. (60)


(புகழ்தல் )

பாடல் 19 (கெண்டையங்)

[தொகு]

கெண்டையங் கண்மயி லேமதிக் கீற்றுங் கிரணமுத்துந் ()

தொண்டையஞ் செண்பக முங்கரு நீலமுந் தோற்றிலவாற் ()

கண்டையங் கட்செவிப் பாயார் வராகர் கரந்தைவெற்பி ()

லுண்டையந் தாமரை நின்வாண் முகத்தினுக் கொப்பெனவே. (60)


( வன்புறை)

அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல்

பாடல் 20 (கேதந்தொடுக்க)

[தொகு]

கேதந் தொடுக்கத் தகாதினி நீரென் கிளிமொழியே ()

நாதந் தொடுத்த மணிப்பூணுஞ் சூட்டு நவமணிமேற் ()

காதந் தொடுக்குந் துளவார் வராகர் கரந்தையிலுன் ()

பாதந் தொடுத்தணிந் தேன்பண்டு போலவைம் பான்வரையே. (60)


(பெருநயப்புரைத்தல்)

பாடல் 21 (கைத்தலஞ்)

[தொகு]

கைத்தலஞ் சேர்சக்க ரத்தார் வராகர் கரந்தைவெற்பிற் ()

கொத்தலர் தேடித் திரிவண்டு காள்கொழுந் தேறலன்றி ()

முத்தலங் கார முகிண்முலை யாள்முகத் தாமரைபோற் ()

புத்தமு தூற்றுங் கமலமுண்டோ வுங்கள் பூந்தடத்தே. (60)


(தெய்வத்திறம் பேசல்)

பாடல் 22 (கொற்றஞ் )

[தொகு]

கொற்றஞ் செலுத்திய செங்கோ னளனுங் குனிபுருவ ()

விற்றங் கியதம யந்தியும் போல்வெள்ளி வெற்பிலெழு ()

பெற்றந் தழுவும் பெருமாள் கரந்தைப் பிரானருளே ()

யிற்றங்கு நம்மை யிசைத்தாற் பிரிப்ப தெவர்சொலுமே. (60)

(பயந்தோர்ப்பழிச்சல் )

பாடல் 23 (கோடாதநீதி)

[தொகு]

கோடாத நீதி யளகா புரியிற் குபேரனைப்போற் ()

பீடார் தனமும் பெருங்கிளைக் கூட்டமும் பெற்றுமுத்தி ()

நாடாளும் செல்வக் கரந்தை வராகர் நறுங்கிரிமேல் ()

வாடா மலர்க்கொம்பைத் தந்தா ரிருவரும் வாழியவே. (60)


(பிரியேனென்றல் )

பாடல் 24 (கௌவும்புலி)

[தொகு]

கௌவும் புலிநிகர் கூற்று மிராக்கதக் கள்வரெனுந் ()

தெவ்வும் பதறு திகிரி வராகர்செந் தேன்கிரிவாய் ()

வௌவும் புயலென யான்பிரி யேனும்மை வாரிதியு ()

குவ்வும் பிரியினுந் தான்குன்ற வாணர் குலமயிலே. (60)

பாடல் 13 ()

[தொகு]

()

()

()

(60)

( )

பாடல் 13 ()

[தொகு]

()

()

()

(60)

( )

பாடல் 13 ()

[தொகு]

()

()

()

(60)

நூல்

[தொகு]

பார்க்க

[தொகு]
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-உயிர்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-சவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-ஞவ்வருக்கம்