திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-சவ்வருக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை[தொகு]

ஆசிரியர்: தெரியவில்லை[தொகு]

சவ்வருக்கம்-11 பாடல்கள் [தொகு]

(பிரிந்து வருகென்றல்)

பாடல் 25 (ங்கந்தரித்த)[தொகு]

ங்கந் தரித்த கரத்தா னிருபெண்க டாள்வருட ()

பொங்குங் கடற்றுயி லாதிவரா கன்பொதி யத்திலியா ()

னெங்குந் திரியினு நின்கொங்கை யீர்பத் திரவுகட்டி ()

யங்கங் குளிருமென் னாருயி ராவந் தணைதருமே. (60)


(இடம் அணித்து என்றல்)

பாடல் 26 (சாதிக்குகந்த)[தொகு]

சாதிக் குகந்த கரந்தை வராகப்பன் சந்நிதியி ()

னாதிக்குஞ் சங்கங் கலியாணப் பந்தர்க்கு நாதமென்றே ()

யோதிக் கடிமணப் பார்கணிப் பார்க்குநும் மூரவர்கள் ()

பேதிக்குந் தூரமுண் டோமயி லேயிரு பேருக்குமே. ()


(பிரிவுழி மகிழ்ச்சி)செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்

பாடல் 27 (சிலையேந்து))[தொகு]

சிலையேந்து பாணந் திசைமறிந் தோடச்செங் காந்தளொன்று ()

கலையேந்த வொன்று கனங்குழ லேந்தக் கவிகையென்ன ()

மலையேந்து செங்கைய ராதி வராகர் மலையமென்ன ()

முலையேந்து மாருயிர் செல்லுநெஞ் சேநெடு மூச்செறிந்தே. ()


(பிரிவுழிக் கலங்கல்-ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோ என்றல்)

பாடல் 28 (சீரோங்கு)[தொகு]

சீரோங்கு செல்வக் கரந்தை வராகர் சிலம்பில்மட ()

வாரோங்கு வெள்ளத்தின் வாரோங்கு கொங்கை மடவனமோ ()

போரோங்கு வேள்பொரும் புண்ணாற்ற வென்றிந்தப் போந்தடத்தே ()

யேரோங்கு நன்மணம் போற்கன வோநமக் கெய்தியதே. ()

(கண்படை பெறாது கங்குல் நோதல்)

பாடல் 29 (சுருள்கொண்ட)[தொகு]

சுருள்கொண் டமாலைத் துழாய்மால் வராகர்தன் சோலைவெற்பிற் ()

பொருள்கொண் டபூண்முலை மேவிய நாளவர் பூங்குழற்கு ()

வெருள்கொண் டகன்றது போய்ப்பிரிந் தாரென்று வெவ்விடம்போ ()

லிருள்கொண் டதோகங்கு லெங்கொளித் தாரென்று மிந்துவுமே. ()

(இடந்தலைப்பாடு- தந்த தெய்வம் தருமெனச் சேறல்)

பாடல் 30 (சூட்டுந்துளவ)[தொகு]

சூட்டுந் துளவத் திருமால் வராகர் சுரும்பிலின்பம் ()

பூட்டுங் களபப் புணர்முலை யாளைப் புதுமலரோன் ()

றீட்டுந் தலையிற் பொறிபோன்முன் னாட்டந்த தெய்வமின்னுங் ()

காட்டுந் தனிநெஞ் சமேயெழு வாய்மலர்க் காவகத்தே. ()


(பாங்கற் கூட்டம்- தலைவன் பாங்கனைச் சார்தல்)

பாடல் 31 (செங்கட்)[தொகு]

செங்கட் கருங்கொண்ட லெங்கோனெங் கோனென்று சிந்தைசெய்வார் ()

தங்கட்கு முன்வந் தருள்மால் வராகர் தடஞ்சிலம்பி ()

லங்கட்கு முச்சுட ராதர வாமது போலநெஞ்சே ()

நங்கட்கு முச்சுடர் நண்பனுண் டேயுள்ள நள்ளிருட்கே. ()


(உற்றது வினாதல்)

பாடல் 32 (சே)[தொகு]

சேர்க்குங் கலைமருங் கேறுமுன் னேகல்விச் செல்வரெண்ணிப் ()

பார்க்குங் கலைகள் படித்தறிந் தாய்முல்லைப் பாடியிற்பால் ()

வார்க்குங் கலசங் கவர்ந்தார் வராகர் வரையிலின்னம் ()

பார்க்குங் கலைகளுண் டோமெலி வேதுசொல் பார்மனனே. ()


(தலைவன் உற்றது உரைத்தல்)

பாடல் 33 (சையோக )[தொகு]

சையோக மோகாதி யையனை யாளொரு தையனல்லா ()

ளையோ கடிமலர்க் காவினின் றாண்மக ராலயம்போல் ()

மெய்யோன் கரந்தையில் ஞானப்பி ரான்வெற்பில் வேற்கடைக்கண் ()

மையோ குருங்குழ லோமையல் பூட்டி வரவிடுமே. ()

(கற்றறி பாங்கன் கழறல்)

பாடல் 34 (சொற்பாவலன்)[தொகு]

சொற்பா வலன்பின் பணிப்பாய் சுருட்டிச் சுமந்துசென்ற ()

கற்பா வலனெங் களாதி வராகர் கரந்தைநகர் ()

வெற்பா வலனென் றுனைத்துதித் தோமொரு மின்னனையாள் ()

பொற்பா வலனென்ப தோவினி மேலென் புரவலனே. ()


(கழற்றெதிர் மறுத்தல்)

பாடல் 35 (சோலைமலைச்)[தொகு]

சோலைமலைச் செம்மல் வேங்கட மாமலைத் தோன்றலிலை ()

மாலை மலையும் வராகப் பிரான்றென் மலையனையார் ()

வேலை மலையும் விழிவலைக் கேபட்டு மீண்டவரா ()

ராலை மலரை யலரையுற் றாரை யறிந்துரையே. ()பாடல் 35 (சா)[தொகு]

()

()

()

()


பார்க்க[தொகு]

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-உயிர்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-கவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-ஞவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-தவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-நவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-பவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-மவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-யவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-வவ்வருக்கம்