உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-தவ்வருக்கம்

விக்கிமூலம் இலிருந்து

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை

[தொகு]

ஆசிரியர்: தெரியவில்லை

[தொகு]

தவ்வருக்கம்-12 பாடல்கள்

[தொகு]

பாடல் 40 (தடந்தாமரை)

[தொகு]

(சுனைவியந்துரைத்தல்)


டந்தா மரைபல காரொன்று பூத்துச் சமுத்திரத்தே ()

கிடந்தா லனையவ ராதி வராகர் கிரியுவந்த ()

மடந்தாய் பயோதரங் கண்வாய் குழைதிரு வாணிநிற ()

நடந்தா டினார்க்குத் தருமோதெய் வீக நறுஞ்சுனையே. (01)

பாடல் 41 (தாருங்)

[தொகு]

(நாண நாட்டம்)

தாருங் குழலுஞ் சரிமே கலையுமுத் தாவலியும் ()

வாருந் தனமுந் திலகமுஞ் சாந்தமு மாயனெங்கோன் ()

சேருங் கரந்தையன் னீர்நனை யாமற் றிரும்பிவந்தீ ()

ராரும் பெறலரி தாஞ்சுனை யாட லதிசயமே. (60)

()

பாடல் 42 (திருவாளன்)

[தொகு]

(யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்)

திருவாளன் செல்வக் கரந்தை வராகன் சிலம்பனையீர் ()

வருவா ரொருவர் வழிகேட்பர் மீள்வர் வயக்களிறு ()

பொருவாளி கொண்டிங்கு வந்ததுண் டோகலை போனதுண்டோ ()

வொருவார்த்தை சொல்லுமென் பாரென்கொ லோவிவ ருட்கருத்தே. (60) ()

பாடல் 43 (தீட்டும்)

[தொகு]

(வறுங்கள நாடி மறுகல்)

தீட்டும் பகழிச் சிலைவேடர் தங்க டினைப்புனத்தில் ()

நாட்டும் பரணிலெந் நாள்வரு மோவென்று நன்னெறியே ()

காட்டுங் கருணைப் பெருமாள் வராகர் கரந்தைவெற்பிற் ()

கோட்டுஞ் சிறையளி காள்குன்ற வாணர் குலமணியே. (60)

()

பாடல் 44 (துன்னார்)

[தொகு]

(தலைவியை உயர்த்தல்)

துன்னார் குறும்பு துளைத்தான் வராகன் றுவரையிடை ()

மின்னாரை மேவின னன்றியும் மீசன் வியன்கடல்வா ()

யன்னாட் பரத்தியைக் கொண்டா னதன்றி யவன்மகனு ()

முன்னாட் குறத்தியை வேட்டா னமக்கென்ன மோசமின்றே (60)


பாடல் 45 (தூயோர்)

[தொகு]

(குலமுறை கிளத்தல்)

தூயோர் குலத்துக் கிசையுங்கொல் லோபொன்னற் றுன்றுகுன்றிக் ()

காயோ பதிப்பது காவல னேதென் கரந்தைநகர் ()

மாயோன் வரையின் மடமங்கை யோவரை வாணர்மங்கை ()

நீயோ நரபதி நானோ வுனக்கு நிகழ்த்துவதே. (60)


பாடல் 46 (தெருவூடு)

[தொகு]

(காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தல்)

தெ ருவூடு சேய்விளை யாடச்சென் றான்வந்து சேர்த்தெடுத்துன் ()

னுருவூ டறிந்தன்னை யானுமென் றாள்விண்டு ராதனைமுன் ()

கருவூடு காத்த திருமால் வராகர் கரந்தைவெற்பில் ()

மருவூடு தாரண்ண லேயெங்கை யோவந்த மங்கையுமே. (60)


பாடல் 47 (தேர்கொண்ட)

[தொகு]

(பாங்கி யறியாள் போன்று வினாதல்)

தேர்கொண்ட வீதிய ராதி வராகர்தெண் ணீர்ப்பொருநை ()

நீர்கொண்ட கால்குடை வார்கழங கம்மனை நித்திலப்பந் ()

தேர்கொண்ட காவி லெறிவா ரிவரி லெவருரையாய் ()

தார்கொண்ட தோளண்ண லேயமையாமய றந்தவரே. (60)


பாடல் 48 (தைக்குங்)

[தொகு]

(இறைவியின் தன்மை இயம்பல்)


தைக்குங் கணைவிழி சாபம் புரூரஞ் சசிவதன ()

நெய்க்குங் குழல்மழை நித்தில மூர னிசாசரரைக் ()

கைக்குந் திகிரிய ராதி வராகர் கரந்தைவெற்பி ()

லெய்க்குங் கொடியிடை யேந்திள நீர்தன மென்னுயிர்க்கே. (60)


பாடல் 49 (தொடிவைத்த)

[தொகு]

(வரைந்துகொள்ளென்றல்)

தொடிவைத்த தோளண்ண லேயோமத் தீவலஞ் சூழ்ந்தமிமே ()

லடிவைத்து மாலை யணிந்தல்ல வோவமு தாசனரைக் ()

குடிவைத்த வேதிய ராதி வராகர் குருங்கைவெற்பிற் ()

பொடிவைத்த செப்பென்ன பூண்முலை யாரைப் புணர்வதுவே. (60)


பாடல் 50 (தோடுண்ட)

[தொகு]

(தலைவி கையுறை யேற்றமை பாங்கி தலைவற்குரைத்தல்)


தோடுண்ட மாலைச் சொருக்கூ டிருக்குஞ் சுகந்தமெல்லாங் ()

கோடுண்டு நாணிக் குலைந்தன போலுஞ்செங் கோகனகக் ()

காடுண்ட கார்க்குன் றனையார் வராகர் கரந்தைநின்கை ()

யேடுண்ட பூந்தழை யேந்திழை பாற்பெற்ற வீறுகண்டே. (60)


பாடல் 51 (தௌவைக்)

[தொகு]

(தலைவன் இயைதல்)

தௌவைக் கிராவணன் சீர்காட்டித் தாமரைத் தையலுடன் ()

கௌவைப் படாதுல கங்காத்த கண்ணன் கரந்தைவெற்பில் ()

மைவைத் தனைய மலர்க்குழ லாயுன் மணிமுலைமேற் ()

கைவைத் ததுமதன் கண்ணேறு பட்டது காப்பதற்கே. (60)



பார்க்க

[தொகு]
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-உயிர்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-கவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-சவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-ஞவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-நவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-பவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-மவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-யவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-வவ்வருக்கம்