திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-நவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை
[தொகு]ஆசிரியர்: தெரியவில்லை
[தொகு]நவ்வருக்கம்-12 பாடல்கள்
[தொகு]பாடல் 52 (நறைதாங்கு)
[தொகு](புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்)
நறைதாங்கு மோதியை நன்னீர்ப் பொருநை நதிபுரட்டி ()
யிறைதாங் கிடாதுகொண் டேகையி லேயெடுத் தானெவனோ ()
பிறைதாங்கும் வண்ண மருப்பார் வராகர் பெருங்கடற்கே ()
துறைதாங்கு பார்மகள் சோராமற் றாங்கிய தோற்றமென்றே. (60)
பாடல் 53 (நாளிக)
[தொகு](விலக்கல்)
நாளிக மொத்த நறுங்குழை யாளை நயந்துகரிக் ()
காளிக மொய்த்த வருவரைச் சார லரையிருள்வாய்க் ()
காளிக மர்த்தனஞ் செய்தார் வராகர் கரந்தைவெற்பில் ()
வாளிகள் மொய்த்தவில் லாயெம்மை வேண்டில் வருவதன்றே. (60)
பாடல் 54 (நில்லென்று)
[தொகு](தாய் அலரொடு புலம்பல்)
நில்லென்று சொல்லி நிறுத்தக்கண் டேனில்லை நேரிழையைச் ()
செல்லென்று வேடுவர் செப்புமப் போதுசெஞ் சேவடியாற் ()
கல்லென்ற பெண்ணை நடவென்ற மாயன் கரந்தைவெற்பிற் ()
புல்லென்ற வாடவ ரேயிது வோவுங்கள் போர்த்திறமே. (60)
பாடல் 55 (நீலமெடுத்)
[தொகு](பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்)
நீல மெடுத்தொரு தோன்றனின் றானிள நெஞ்சியதைச் ()
சேல மெடுத்திரு செங்கையி லேந்தினள் சென்றிறந்த ()
கால மெடுத்த பெருமாள் வராகர் கரந்தைவெற்பி ()
லால மெடுத்த கணாளரும் பாவைக் கணியவென்றே. (60)
பாடல் 56 (நுண்டா)
[தொகு](பாங்கி இறைவிக்கு அவன் குறையுணர்த்தல்)
நுண்டா திறைக்குந் துழாயோன் கரந்தையி ணூலிடையாய் ()
தண்டா ரிவர்தங் கருத்தென்ன வோதனி யேவருவர் ()
வண்டார் தழைகொய்து நல்லதெல் லாந்தரு வாரவரைக் ()
கண்டார் மதனென்பர் கானாட வர்க்குநங் காவகமே. (60)
பாடல் 57 (நூலாய்)
[தொகு](கோழி குரல் காட்டுதல்)
நூலாய் வலரவர் நான்மறை வேள்வியர் நுண்ணுணர்வின்
பாலா ரரசர் பணிசமு கத்தர்வைப் பாய்வணங்கு ()
மாலார் கரந்தையி லாதி வராகர் வரையணங்கே ()
வேலார் கொடிசெங்கை வில்லார் வரவை விலக்குமன்றே. (60)
பாடல் 58 (நெடுமால்)
[தொகு](கையுறை கொடுத்தல்)
நெடுமால் கரந்தையில் ஞானப்பி ரான்வெற்பி னீலவண்டார்த் ()
திடுமாந் தழையுந் தரளமு முல்லையு மேந்துகச்சுத் ()
தொடுமா முலைக்குங் கலைக்குநின் கூந்தற் சொருகினுமாம் ()
வடுமான் வரிவிழி யாய்கடி தேந்து மலர்க்கரத்தே. (60)
பாடல் 59 (நேசந்)
[தொகு](வரையு நாளுணர்த்தல்)
நேசந் தருமங்கை கொங்கைபொன் பூத்தன நீள்வனத்தில் ()
வாசந் தருமலர் வேங்கையும் பூத்தன வைகிடமாந் ()
தேசந் தரவல்ல ஞான வராகர் சிலம்பிலன்பர் ()
பாசந் தரவிண் பரிவேடம் பூத்தன பான்மதியே. (60)
பாடல் 60 (நைக்கும்)
[தொகு](குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறல்)
நைக்கும் பிணியு மிலம்பாடுந் தீர்க்குமெஞ் ஞானப்பிரான் ()
கைக்குன்றம் காத்த நெடுமால் வராகர் கரந்தைவெற்பிற் ()
றைக்குங் கணைவிழி யாய்சிறு வீடு தனையமைத்து ()
வைக்குங் கறிமணற் சோறாக்க மாதவி வாய்ச்செலலே. (60)
பாடல் 61 (நொடிக்கும்)
[தொகு](பாகனோடு சொலல்)
நொடிக்கும் பொழுதொரு நூறுக மாயெண்ணி நொந்துகண்ணீர் ()
வடிக்குங் கிளிக்குமுன் கார்செல்லு மேனச்சு மச்சமும்போற் ()
றுடிக்குங் கிடந்து கரந்தை வராகர் துவரைவெற்பில் ()
நடிக்கும் பரித்தடந் தேர்வல வாவுனை நம்பினனே. (60)
பாடல் 62 (நோமே)
[தொகு](தன்மகள் மென்மைத்தன்மைக்கு இரங்கல்)
நோமே மலரடி நுண்பரற் பாலையி னூடுசென்றாற் ()
பூமேல் மிதித்தும் பொறுத்ததன் றேயுந்தி பூத்தசெங்கண் ()
மாமேக வண்ணத்த ராதி வராகர் வரையிலன்பர் ()
தாமே நிழலன்றி வேறே நிழலில்லை தையலுக்கே. (60)
பாடல் 63 (நௌவிசென்)
[தொகு](பொருள்வயிற் பிரிவு- இளவேனிற் பருவங்கண்டு வருந்திய தலைமகளைத் தோழியாற்றுவித்தல்)
நௌவிசென் றாடு திரைநீர்ப் பொருநை நதிக்கரையார் ()
மைவியன் கார்வண்ண ராதி வராகர் வளம்பதிக்கே ()
யிவ்விளங் காவி லிளம்பேடுஞ் சேவலு மின்புறுஞ் ()
செவ்விகண் டாரிலை யோபொருண் மேலன்று சென்றவரே. (60)
பார்க்க
[தொகு]- திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-உயிர்வருக்கம்
- திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-கவ்வருக்கம்
- திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-ஞவ்வருக்கம்
- திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-தவ்வருக்கம்