திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/சோழமன்னர் மீட்சி
6-ம் அதிகாரம்.
சோழமன்னர் மீட்சி.
ஸா. 9-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஜயாலயச் சோழன் தன் ஆட்சியைப்பரப்பி சோழருக்குப் போர்ப் பயிற்சி செய்வித்தான்.
ஆதித்யன் I (816-828) :- சேலம் கோயம்புத்தூர் ஜில்லாக்கள் அடங்கிய கொங்கநாட்டை 816-ல் விஜயாலயன் குமாரன் ஆதித்யன் I வென்றான். பழய பல்லவ ராஜ்யமாகிய தொண்டைமண்டல (தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு ஜில்லாக்கள்) க்தையும் தனதாக்ஷிக்குக் கொணர்ந்தான்.
பரந்தகன் I (828-868) :- இவன் பாணர், கங்கையர், பாண்டியர், சிங்களர் முதலியோரைத் தோற்கடித்தான். தான் ஜெயித்த நாடுகளிலிருந்து கொண்டுவந்த ஸ்வர்ணம் பூறாவும் சிதம்பரம் சிவாலயத்துக்குக் கொடுத்தான். ஹேம கர்ப்பம், துலாபாரம் முதலிய பல நற்கருமங்கள் செய்து, அந்தணருக்குப் பூதானம் முதலிய பல கொடைகளும் செய்து, அனேக ஆலயங்களும் கட்டுவித்தான். அவன் ராஜதானி காஞ்சீபுரத்திலும் தஞ்சாவூரிலும் இருந்தன.
ராஜாதித்யன் (869-871) :- இவன் தக்கோலத்தில் 871-ல் ராஷ்ட்ரகூட கிருஷ்ணராஜனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்.அரிஞ்சவன், கண்டாராதித்யன், மதுராந்தகன், பரந்தகன் II, ஆதித்யன் II :— வீரபாண்டியனைத் தோற்கடித்து ராஷ்ட்ரகூடரையும் துறத்தினவன் ஆதித்தியன் II.
ராஜராஜன் I (907-935) :- சோழ மன்னர்களுள் மிகக் கீர்த்திவாய்ந்தவன் ராஜராஜன் I. அவன் காலத்தில் நாட்டுக்கு உண்டான ஸம்பத்து நூறு வருஷங்கள் வரையில் மாறவில்லை. மேற்கே கொல்லம் குடகுவரையிலும் தெற்கே லங்கை கன்னியாகுமாரிவரையிலும் வடக்கே உத்கல நாடுவரையிலும் அவன் ஆட்சி எட்டிற்று. 916-ல் சேர நாட்டிற்கு ஒரு கப்பல்படை யனுப்பி ஒரு துறைமுகத்தைப் பிடித்தழித்தான். சேரபாண்டியர்களை ஒவ்வொரு யுத்தத்திலும் தோற்கடித்தான். 920-ல் கங்கையர், நொலம்பர், பாண்டியர் முதலியோரைத் தோற்கடித்து தடிகைப்பாடி, வெங்கி, குடகு முதலிய ஊர்களைப் பிடித்தான். 924-ல் கொல்லம், கலிங்கம், லங்கை முதலிய இடங்களைக் கைப்பற்றினான். 926-ல் சாலுக்கியர்களைத் தோற்கடித்தான். 933-ல் லக்ஷத் தீவுகளையும் தனது வசமாக்கிக் கொண்டான்.
தஞ்சாவூரில் பிருகதீசுவரஸ்வாமி கோவிலைக் கட்டினான். புறமதஸ்தரை ஹிம்ஸிக்காமல் தனக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசன் ஒருவன் கட்டிய பெளத்தாலயத்தைக் கண்டு ஸந்தோஷித்தான். க்ருஷியை விர்த்திசெய்தான். கிராம பரிபாலனம் வெகு உத்தமமாய் நடத்திவந்தான்.
ராஜேந்திரன் I (936-966) :- இவன் ராஜராஜனுக்குப் பிறகு வந்த அவன் குமாரன். இவன் கங்கைநதி வரையில் வெற்றியுடன் சென்று கங்கைகொண்ட சோழன் எனப் பெயரும் பூண்டான். பர்மாவுக்குக் கப்பல் படையனுப்பி கிக்கோபார் தீவுகளையும் வென்றான். தஞ்சாவூர் கோவிலைப் போலவே ஜெயங்கொண்டசோழபுரத்தில் ஒரு ஆலயத்தையுங் கட்டினான்.
ராஜாதிராஜன் I (967-975):— 940 முதல் யுவராஜாவாயிருந்துவந்த ராஜாதிராஜன் பட்டத்துக்கு வந்த பிறகு சேரபாண்டிய சிங்களர்கள் கலகம் செய்தார்கள். அவர்கள் அடக்கப்பட்ட பிறகு அவன் சாலுக்கியருடன் யுத்தம் செய்து அவர்களை கொல்ஹாபுரம் வரை விரட்டியடித்து அசுவமேதயாகமும் செய்தான். 975-ல் கொப்பத்தில் சாலுக்கியருடன் நடந்த சண்டையிலிறந்தான்.
ராஜேந்திரன் II (976-986) :—
வீரராஜேந்திரன் (987-990) :— இவன் சேரபாண்டியருடன் யுத்தம் செய்து வெற்றியடைந்தபின் வெங்கியை மீட்டான். சாலுக்கியருடன் நடந்த ஐந்து போர்களிலும் சோழமன்னனே ஜெயம் பெற்றான். துங்கைபத்ரை நதிகள் கூடும் குடலியில் கடைசியாய் அவர்களைத் தோற்கடித்த போதிலும் அவர்களுள் முதன்மையான விக்ரமாதித்யனுக்குத் தன் குமாரியைக் கல்யாணம் செய்வித்து சாலுக்கிய ராஜ்யத்தையும் அவனிடம் ஒப்பித்தான்.[1]
ஆதிராஜேந்திரன் (991-992) — வீரராஜேந்திரன் இறந்தபிறகு பட்டத்துக்கு வந்த ஆதிராஜேந்திரன், ராஜ்யத்தில் நடந்த ஓர் கலகத்தில் கொல்லப்பட்டான். பட்டத்துக்குரியவன் குலோத்துங்கச் சோழன் I ஆதலால் அவன்தான் சோழ மன்னனைக் கொன்றிருக்கவேண்டுமென்று நினைத்து அவன் மைத்துனன் விக்ரமாதித்ய மேல சாலுக்கியன் யுத்தத்துக்கு வந்தான். 4 வருஷம் கடும் போர் நடந்தது. குலோத்துங்கன் I வெற்றிபெற்று ராஜ்பமடைந்தான்.
குலோத்துங்கன் I (993-1040) :— பால்யத்திலேயே தன் பாட்டனாருடைய பிரியத்துக்குப் பாத்திரமாகி அவனால் ஸ்வீகாரமெடுத்துக்கொள்ளப்பட்ட குலோத்துங்கன் சாலுக்கிய நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் மன்னனானான். தான் சோழ நாட்டிலிருந்து கொண்டு தன் ஜனக சிறிய தகப்பன் விஜயாதித்யனையே ராஜப்பிரதிநிதியாய் வெங்கியில் ஸ்தாபித்தான். இவன் காலத்தில்தான் சோழநாட்டிலிருந்து லங்கை பிரிந்தது. இவன் சேரபாண்டியர்களின் கலகங்களை அடக்கி திருவாங்கூர் எல்லைக்குச் சமீபமாயுள்ள கோட்டாற்றில் ஒரு ஸேனையை பாதுகாப்புக்காக வைத்தான். கலிங்கர், கங்கையர், இவர்கள் நாடுகளை மீளவும் சோழ நாட்டுடன் சேர்த்தான்.
உள்நாட்டுச் சுங்கவரிகளை தள்ளுபடி செய்து நிலங்களை ரீ-ஸர்வேயிற்கு கொணர்ந்தான்.
ஜயங்கொண்டசோழபுரத்தில் தன் ராஜதானியை ஏற்படுத்தியிருந்தான். சமயங்களில் காஞ்சீபுரத்தில் வஸிப்பதும் உண்டு.விக்ரமன் (1041-1057):— இவன் சாஸனங்களுள் ஒன்று தஞ்சாவூருக்கருகிலுள்ள திருவையாற்றில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
குலோத்துங்கன் II (1058-1068) :—
ராஜராஜன் II (1069-1093) :— பிறகு ஆண்ட சோழ மன்னர்களைப்பற்றி அதிகமாய் ஒன்றும் தெரியவில்லை. பாண்டியர் மீளவும் தம் ஸ்வாதந்திரியத்தை அடைந்திருக்க வேண்டும்.
ராஜாதிராஜன் II (1094-1100) :— பாண்டியநாட்டு ஆதிபத்யச் சணடையில் இவன் தலையிட்டுக் கொண்டான். லங்கையரசன் சோழர் விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு மதுரையில் வெற்றிபெற்றதும் தவிர, வடக்கேவந்து சோழ நாட்டில் பட்டுக்கோட்டை தாலூக்காவில் சில கிராமங்களைக் கொளுத்திவிட்டான். வரும்வழியில் ராமேசுவாத்தில் புகுந்து கோவில்கதவைப் பேர்த்து சிவனடியாருக்கிடைஞ்சல் செய்து கோவில் ஆபரணங்களையும் இதா ஸொத்துக்களையும் கொண்டுபோய்விட்டான். ஆனால் சோழர் அவற்றை சீக்கிரம் மீட்டனர்.
குலோத்துங்கன் III (1101-1137) :— குலோத்துங்கச்சோழன் III சிங்களரைத் தோற்கடித்து மதுரையை மீட்டு தனக்குக் கீழ்ப்பட்ட ஒருவனை பாண்டிய நாட்டினதிபதியாய் நியமித்தான்.
ராஜராஜன் III (1138-1166) :— பாண்டியர்கள் மறுபடியும் கலகம் செய்து தங்கள் மன்னன் மகாவர்ம சுந்தர பாண்டியனுடன் வந்து தஞ்சாவூர், உறையூர் முதலிய நகரங்களை அழித்தனர். ஆனால் ராஜ்யம் திரும்பவும் சோழ மன்னனிடமே கொடுக்கப்பட்டது. அவன் சாஸனங்கள் திருக்காட்டுப்பள்ளியிலும் ஸ்ரீரங்கத்திலும் அகப்பட்டிருக்கின்றன.இந்த ராஜராஜன் III 1152-ல் பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்டு கைதியானான். ஆனால் மேல சாலுக்கியர் ஸ்தானத்தில் இக்காலம் தோன்றிய ஹாய்ஸாலர் அவனை விடுவித்தனர். பாண்டியரிடமிருந்து சோழர் துன்புறாமல் அவரைக் காப்பாற்றிய வீரஸோமேசுவர ஹாய்ஸாலன் ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் ஒரு பட்டணம் நிர்மாணம் செய்து (வீரேசுவரம் - வீரசோமேசுவரபுரத்தின் நாளடைவு மாறுபாடு) அங்கே தன் ராஜதானியை ஸ்தாபித்தான்.[2]
ராஜேந்திரன் III (1167-1189) :— இவன் ஹாய்ஸாலர்களுடன் யுத்தம் செய்து வீரசோமேசுவானை 1174-ல் தோற்கடித்தான். பாண்டியரும் ஹாய்ஸாலருடன் போர் புரிந்து 1176-ல் அவர் கோமானைக் கொன்றனர். ஆனால் ஹாய்ஸாலர் பலம் மட்டும் குன்றவில்லை.
சோழமன்னவரின் வம்சாவளி
கரிகாலன் (ஸா. 17- வரை) ︱ நலன்கிள்ளி (18-27) │ ┌───────────────┴────────────┐ │ │ கிள்ளிவல்லன் பெருநார்க்கிள்ளி (72 வரை) (28 முதல்) │ கொச்சென்னி கண்ணன் (73 முதல்) │ கொக்கிள்ளி │ விஜயாலயன் │ ஆதித்யன் I (816-828) │ பரந்தகன் I (828-868) ┌────────────────────────────┴───┐ ராஜாதித்யன் (869-871) (872 முதல்) அரிஞ்சவன் │ கண்டாராதித்யன் │ மதுராந்தகன் │ பரந்தகன் II ┌────────────────────────────┴───┐ ஆதித்யன் II ராஜராஜன் I (907-935) │
குறிப்பு
[தொகு]- ↑ ராஜராஜசோழன் I வெங்கியிலாண்ட விமலாதித்ய சாலுக்கியனுக்குத் தன் குமாரியைக் கொடுத்தான். இவ்விம்லாதித்யன் 945-ல் இறந்தான். அவன் குமாரன் ராஜராஜ சாலுக்கியன் தன் மாமன் ராஜேந்திரச் சோழனின் குமாரியை மணம்புரிந்து கொண்டு 985 வரையிலாண்டான். அவன் குமாரன் குலோத்துங்கனை ராஜேந்திரச்சோழன் I ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டதால் அவன் ஸகோதரன் விஜயாதித்யனுக்கு பட்டம் கிடைத்தது. வீரராஜேந்திரச்சோழன் மேலே சொல்லியபடி வெங்கியைப் பிடித்தபோது தஞ்சையிலாண்ட குலோத்துங்கச் சோழன் 1-ஆல் (ராஜேந்திரச் சோழன் I-இன் ஸ்வீகார புத்திரன்) ஹிம்ஸிக்கப்பட்ட விஜயாதித்ய சாலுக்கியனுக்கு உதவிபுரிந்தான் போலும். அல்லது 986-ல் வெங்கியின் மேல் படையெடுத்த விக்ரமாதித்ய மேலசாலுக்கியன் விஜயாதித்யனை ஹிம்ஸித்திருக்கக்கூடும். எப்படியிருந்தாலும் விக்ரமாதித்ய மேல சாலுக்கியனுக்குத்தான் வீரராஜேந்திரச் சோழன் தன் மகளைக் கொடுத்தது. சாக்கியர்களுள் ஏற்பட்டிருந்த குடும்ப வியவஹாரங்களைச் சோழ மன்னன் தீர்த்துவைத்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.
- ↑ சமீபகாலத்தில் பெங்களூரில் கிடைத்த செப்பு சாஸனத்திலிருந்து வீரஸோமேசுவரன் சமயபுரத்தைக் (விக்ரமபுரி) கட்டினதாகவும் அதற்கு வடக்கே பட்டணம் ரஸ்தாவுக்குக் கீழ்புறம் போஜலீசுவரர் ஆலயத்தையும் நிர்மாணம் செய்ததாகவும் தெரிகிறது. இவன் சாஸனங்கள் திருவானைக்காவல் கோவில் மதில்களிலும் ரத்தினகிரீசுவர மலையிலும் காணப்பட்டிருக்கின