திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/மஹமதியர் ஆக்ஷி

விக்கிமூலம் இலிருந்து

11-ம் அதிகாரம்.
மஹமதியர் ஆக்ஷி.

1662-ல் வங்காரு திருமலையினாலும் தஞ்சாவூராசனாலும் தூண்டப்பட்ட மஹாராஷ்ட்ரர்கள் ஸடாராவிலிருந்து ஆர்க்காட்டுக்கு வந்து நவாப்புடன் சண்டை செய்து அவனைக் கொன்றார்கள். நவாப்பின் குமாரன் மேலே சொன்ன ஸப்தார் அலி கான் அவர்களுக்கிணங்கிவர அவனிடம் கப்பம் பெற்றுச் சென்ற மஹாராஷ்ட்ரர் அவனுடைய வேண்டுகோளின் பேரில் திரும்பி வந்து திருச்சினாப்பள்ளியை வளைத்துக்கொண்டனர். சண்டா சாஹிப் தோற்கடிக்கப்பட்டு ஸடாராவிற்குக் கைதியாய்க் கொண்டுபோகப் பட்டான். திருச்சினாப்பள்ளிக்கு முரஹரிராவ், கவர்னராய் நியமிக்கப்பட்டு, வந்தான்.

1665-ல் நிஜாம் தெற்கே வந்து ஸப்தார் அலி கானை நீக்கி 1666-ல் ஆன்வாருட்டீனை நவாபாக நியமித்தான்.

1670-ல் நிஜாமிறந்ததால் அவன் குமாரன் நாஸர் ஜங்ஙும் பேரன் முஸபர் ஜங்ஙும் ஸிம்ஹாஸனத்திற்காக அடித்துக் கொண்டனர். அதே வருஷத்தில் ஸாஹு ஸடாராவில் இறந்ததால் சண்டா சாஹிப் சிறையினின்றுந் தப்பியோடி வந்தான். அவன் முஸபர் ஜங்ஙுடன் சேர்ந்து ஆன்வாருட்டீனை ஆம்பூரில் நடந்த சண்டையில் கொன்று தன்னையே நவாப்பாக்கிக் கொண்டான். ஆன்வாருட்டீன் குமாரன் மஹமடாலி திருச்சினாப்பள்ளிக்கு ஓடி வந்து தன்னையே நவாப்பென்று சொல்லிக்கொண்டான்.

திருச்சினாப்பள்ளியில் மஹமதியர் ஸ்வல்பகாலம் ஆக்ஷி புரிந்ததில் தாங்கள் ஹிந்துக்களுக்கு மதவிரோதியர் என்பதைக் காட்டினர். ஹிந்துக்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தி மானபங்கமும் செய்தார்கள். ஹிந்துக்களின் கோவில்களில் பலவற்றைத் தம் வசமாக்கி அவைகளைப் பள்ளிவாசல்களாக மாற்றினார்கள். ஓர் உதாரணமாய் நத்தர்ஷா பள்ளிவாசலைச் சொல்லலாம். அது பூர்வகாலத்தில் மாத்ருபூதர் கோவில். திரிசிரஸ்ஸினால் மலைமேல் ஆலயம் கட்டப்படுமுன் ஸ்வாமி கீழே இருந்தார். அவருக்கு மலைமேல் அவனால் இரண்டாவது ஆலயம் ஏற்படுத்தப்பட்து. மஹமதியர் அக்கோவிலைப் பள்ளிவாசலாக்கி ஸ்வாமியின் மேல் விளக்கை இப்போதும் ஏற்றி வருகிறார்கள். சிலவருஷங்களுக்குமுன் இடிந்து போன காம்பவுண்ட் சுவற்றைக்கட்ட அஸ்திவாரம் பரித்ததில் மண்வெட்டியினாலடிபட்டுத் தலையுடைந்த நந்தியொன்று அகப்பட்டது. ஒரு தூணில் நண்டு ஒன்று ஸ்வாமிக்குப் பூஜைசெய்யும் ஐதீகம் காணப்படுகிறது. கோவிலின் கோபுரம் ஸஹஸ்ரபணா பணியினால் தாங்கப்படும் போல் கட்டப்பட்டிருக்கிறது.