உள்ளடக்கத்துக்குச் செல்

திருமுருகாற்றுப்படை - பொழிப்புரை/திருவேரகம்

விக்கிமூலம் இலிருந்து

4. திருவேரகம்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு

ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை

180

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

185

ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து
ஏரகத்து உறைதலும் உரியன், அதாஅன்று.