திருவருட்பயன்/குறள்:41-60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவருட்பயன்- குறள்வெண்பா: 41 முதல் 60 முடிய[தொகு]

ஆசிரியர்: உமாபதி சிவாச்சாரியார் [தொகு]

5. அருளுருநிலை[தொகு]

குறள்வெண்பா 41 (அறியாமை )[தொகு]

அறியாமை யுள்நின் றளித்ததே காணுங் () அறியாமை உள் நின்று அளித்ததே காணும்

குறியாக நீங்காத கோ. (08) குறியாக நீங்காத கோ.


குறள்வெண்பா 42 (அகத்துறு )[தொகு]

அகத்துறுநோயக் குள்ளின ரன்றி யதனைச் () அகத்து உறு நோய்க்கு உள்ளினர் அன்றி அதனைச்

சகத்தவருங் காண்பரோ தான். (09) சகத்தவரும் காண்பரோ தான்.


குறள்வெண்பா 43 (அருளாவகை )[தொகு]

அருளா வகையா லருள்புரிய வந்த () அருளா வகையால் அருள் புரிய வந்த

பொருளா ரறிவார் புவி. (10) பொருள் ஆர் அறிவார் புவி.


குறள்வெண்பா 44 (பொய்யிருண்ட )[தொகு]

பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம் () பொய் இருண்ட சிந்தைப் பொறி இலார் போதம் ஆம்

மெய்யிரண்டுங் காணார் மிக. (4) மெய் இரண்டும் காணார் மிக.

குறள்வெண்பா 45 (பார்வையென )[தொகு]

பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம் () பார்வை என மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம்

போர்வையெனக் காணார் புவி. (5) போர்வை எனக் காணார் புவி.


குறள்வெண்பா 46 (எமக்கென் )[தொகு]

எமக்கென் னெவனுக் கெவைதெரியு மவ்வத் () எமக்கு என் எவனுக்கு எவை தெரியும் அவ் அவ்

தமக்கவனை வேண்டத் தவிர். (6) தமக்கு அவனை வேண்டத் தவிர்.


குறள்வெண்பா 47 (விடநகிலம் )[தொகு]

விடநகிலம் மேவினுமெய்ப் பாவகனின் மீளுங் () விடம் நகிலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளும்

கடனிலிருள் போவதிவன் கண். (10) கடனில் இருள் போவது இவன்கண்.

குறள்வெண்பா 48 ( அகலத்)[தொகு]

அகலத் தருமருளை யாக்கும் வினைநீக்குஞ் () அகலத் தரும் அருளை ஆக்கும் வினை நீக்கும்

சகலர்க்கு வந்தருளுங் காண். (8) சகலர்க்கு வந்து அருளும் காண்.


குறள்வெண்பா 49 (ஆரறிவார் )[தொகு]

ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும் () ஆர் அறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும்

பேரறிவான் வாராத பின். (9) பேர் அறிவான் வாராத பின்.


குறள்வெண்பா 50 (ஞானமிவன் )[தொகு]

ஞான மிவனொழிய நண்ணியிடும் நற்கல்லனற் () ஞானம் இவன் ஒழிய நண்ணி இடும் நல் கல் அனல்

பானு வொழியப் படின். (10) பானு ஒழியப் படின்.


அருளுருநிலை முற்றும்


6. அறியும் நெறி[தொகு]

குறள்வெண்பா 51 (நீடுமிரு )[தொகு]

நீடு மிருவினைகள் நேராக நேராதல் () நீடும் இரு வினைகள் நேர் ஆக நேர் ஆதல்

கூடுமிறை சத்தி கொளல். (1) கூடும் இறை சத்தி கொளல்.


குறள்வெண்பா 52 ( ஏகனநேகன்)[தொகு]

ஏக னநேக னிருள்கரும மாயையிரண் () ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு

டாகவிவை யாறாதி யில். (2) ஆக இவை ஆறு ஆதியில்.


குறள்வெண்பா 53 (செய்வானும் )[தொகு]

செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு () செய்வானும் செய் வினையும் சேர் பயனும் சேர்ப்பவனும்

முய்வானு முளனென் றுணர். (03) உய்வானும் உளன் என்று உணர்.


குறள்வெண்பா 54 (ஊனுயிரால் )[தொகு]

ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர் () ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர்

தானுணர்வோ டொன்றாந் தரம். (04) தான் உணர்வோடு ஒன்றாம் தரம்.


குறள்வெண்பா 55 (தன்னிறமும் )[தொகு]

தன்னிறமும் பன்னிறமுந் தானாங்கற் றன்மைதரும் () தன் நிறமும் பல் நிறமும் தானாம் கல் தன்மை தரும்

பொன்னிறம்போல் மன்னிறமிப் பூ. (05) பொன் நிறம் போல் மன் நிறம் இப்பூ


குறள்வெண்பா 56 (கண்டொல்லை )[தொகு]

கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பண்ணிலை () கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை

யுண்டில்லை யல்ல தொளி. (06) உண்டு இல்லை அல்லது ஒளி.


குறள்வெண்பா 57 ( புன்செயலி)[தொகு]

புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை () புன் செயலினோடு புலன் செயல் போல் நின் செயலை

மன்செயல தாக மதி. (07) மன் செயலதாக மதி.


குறள்வெண்பா 58 (ஓராதே )[தொகு]

ஓராதே வொன்றையுமுற் றுன்னாதே நீமுந்திப் () ஓராதே ஒன்றையும் உற்று உன்னாதே நீ முந்திப்

பாராதே பார்த்ததனைப் பார். (08) பாராதே பார்த்ததனைப் பார்.


குறள்வெண்பா 59 (களியே )[தொகு]

களியே மிகுபுல மாய்க்கருதி ஞான () களியே மிகு புலமாய்க் கருதி ஞான

வொளியே வொளியா வொளி. (09) ஒளியே ஒளியாய் ஒளி.

குறள்வெண்பா 60 (கண்டபடி )[தொகு]

கண்டபடி யேகண்டு காணாமை காணாமற் () கண்டபடியே கண்டு காணாமை காணாமல்

கொண்டபடி யேகொண் டிரு. (10) கொண்டபடியே கொண்டு இரு.

பார்க்க:[தொகு]

திருவருட்பயன்-குறள்:1-20
திருவருட்பயன்-குறள்:21-40
திருவருட்பயன்-குறள்:61-80
திருவருட்பயன்-குறள்:81-100