திருவெழுகூற்றிருக்கை
Appearance
திருஞானசம்பந்தர்
[தொகு]முதற்றிருமுறை-சிவனுருவம்
[தொகு]- ஓருரு வாயினை மானாங் காரத்
- தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
- ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
- படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
- இருவரோ டொருவ னாகி நின்றனை // 05 //
- ஓரா னீழ லொண்கழ லிரண்டும்
- முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
- காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை
- இருநதி யரவமோ டொருமதி சூடினை
- ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் // 10 //
- நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்
- ஏந்தினை காய்ந்த நால்வாய மும்மதத்
- திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
- ஒருதனு விருகால் வளைய வாங்கி
- முப்புரத் தோடு நானில மஞ்சக் // 15 //
- கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை
- ஐம்புல னாலா மந்தக் கரணம்
- முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
- ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
- டிருபிறப் போர்நதுமுப் பொழுது குறைமுடித்து // 20 //
- நான்மறை யோதி யைவகை வேள்வி
- அமைத்தா றங்க முதலெழுத் தோதி
- வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
- பிரமபுரம் பேணினை
- அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை
- இகலி யமைந்துணர் புகலி யமர்ந்தனை
- பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
- பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
- தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி
- வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை // 30 //
- வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை
- ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்
- விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
- முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்
- பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை // 35 //
- ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்
- ஊழியு முணராக் காழி யமர்ந்தனை
- எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
- ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
- மறைமுத னான்கும் // 40 //
- முன்று காலமுந் தோன்ற நின்றனை
- இருமையி னொருமையு மொருமையின் பெருமையும்
- மறுவிலா மறையோர்
- கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
- கழுமல முதுபதிக் கவுணிய னறியும் // 45 //
- அனைய தன்மையை யாதலி னின்னை
- நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.
- திருச்சிற்றம்பலம்