திவான் லொடபட சிங் பகதூர்/பரிசு

விக்கிமூலம் இலிருந்து

புதுவை செந்தமிழ் வாசக சாலையாரால்
கொடுக்கப்பட்ட நற்சாஷிப் பத்திரமும்
தங்கப்பதக்கப் பரிசும்

கனம் வடுவூர்:
கே. துரைசாமி ஐயங்காா் அவர்களுக்கு

அநேக வந்தனம், உபயசேஷமம்

கற்றோர் மணியே!

நீவிர் தற்கால நவீனகமுறையில் ஜனானுகூலத்திற்கு உடந்தையான நீதிகளைப் புகுத்தியுள்ள மேனகா,*திகம்பர சாமியார் என்னும் நாவல்களை வெகு பிரியத்துடன் வாசித்து இன்பெய்தினோம். தங்களால் எழுதப்படும் நாவல்களை யாம் வாசிக்க ஆரம்பித்துவிடின் வேறெவ்விதமான அவசர வேலைகளிருப்பினும் அவைகளையும் மறந்து அந்நாவலிற் செறிந்துள்ள சொற்சுவை பொற்சுவைகளால் வசியமாக்கப்பட்டு அது வாசித்து முடிவெய்திய பின்னரே அவைகளைக் கவனிக்கும்படியாய் விடுகின்றது. இதைநோக்க தாங்கள் நாவல் எழுதும் ஆற்றலில் அதிகத் தேர்ச்சியடைந்திருப்பதன்றி ஜனங்களது கவர்ச்சியை முழுதும் கிரகிக்கத் தகுந்த அரிய விஷயங்களை தாங்கள் திரட்டித் தீட்டிவிடும். நவீனகமான முறையானது என்போன்றாரெல்லோரும் மிகுதியாய் மெச்சத் தகுந்ததாகவொளிர்கின்றது. அதில் ஒவ்வொரு பக்கத்திலுங் காணப்படும் பல நன்னீதிகளை அவசியம் கவனிப்போர்கள் நிச்சயமாக நல்லவர்களாவார்கள் என்பது உறுதி. தங்களது நவீனகமுறையில் சிறந்த பேராற்றலை நோக்கித் தங்கட்குப் பலரும் பல நற்சாஷிப் பத்திரங்களும், தங்க வெள்ளிப் பதக்கப் பரிசுகளும் தந்து தங்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். யாமும் எமது செந்தமிழ் வாசகசாலையாரும் தங்களது ஆற்றலையும் திறமையையும் வியந்து இப் பொற் பதக்கப் பரிசை மனப்பூர்வமான வந்தனத்துடன் அளிக்கின்றோம் இதைக் காணும் பல மேதாவிகளும் இன்னும் இதுபோன்ற பதக்கங்களும் நற்சாகூஷிப் பத்திரங்களும் தந்துதவி தங்கட்கு உற்சாகமுண்டு பண்ணி இன்னும் இதுபோன்ற பல நவீனகத்தை வரையத் தகுந்த பேராற்றலை அதிகப்படுத்துவார்களென்று நம்புகிறோம்; ஆண்டவன் துணை செய்க.

செந்தமிழ் வாசகசாலை,

இங்ஙனம்

நெ. 86, காளத்தீஸ்வரன் கோவில் தெரு,

அ.ந. நரசிங்க முதலி

புதுவை, 30.3.1921

அக்கிராசனன்