உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னாட்டு காந்தி/நேருஜியின் உலகம் சுற்றுகிறது!

விக்கிமூலம் இலிருந்து


◯ கருணை வள்ளலாம் புனிதர்
◯ மகாத்மாவை அரை
◯ நிர்வாணப் பக்கிரியாக
◯ மாற்றிய ஆலவாய்த்
◯ திருநகரிலே அகில
◯ இந்தியக் காங்கிரஸ்
◯ கமிட்டி விழா, விழாக்
◯ கோலம்
◯ பூண்டிருந்தது



நேருஜியின்

உலகம் சுற்றுகிறது
நேருஜியின் உலகம் சுற்றுகிறது!

சோவியத் அரசாங்கம் மத்திய பசிபிக் மகா சமுத்திரத்தில் ஐம்பது மெகாடன் ராட்சஸ அணுகுண்டை வெடித்துச் சோதனைகள் செய்து பார்த்ததாகச் செய்திகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகள் ருஷ்யாவின் இந்த அதிசயத் திருவிளையாடலைக் கண்டு மனம் குழம்பி வருவதை எல்லா நாளிதழ்களும் சொல்லி வருகின்றன, இப்படிப்பட்ட விண்முட்டும் விந்தைச் செயல்களைக் கண்டு நம் பாரதப் பிரதமர் அதிர்ச்சி அடைந்தார். எனவே, “ஐந்து கோடி டன் அணுகுண்டு வெடிப்பது போன்ற காட்சிகளை நடத்துவது பெரிய நாடுகளின் அந்தஸ்துக்குப் பொருத்தமான தல்ல,” என்று எச்சரித்திருக்கின்றார். அணு குண்டுச் சோதனைகளை அடியோடு தடை செய்யக்கூடிய ஏதாவது ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய தன் அவசியத்தையும் வற்புறுத்தியிருக்கிறார். அத்துடன், இந்தியாவாலும் அணுகுண்டு உற்பத்தி செய்ய முடியமென்று சவால் விடவும் நேருஜி தவறவில்லை!

உலகம் போற்றும் உத்தமத் தலைவர் நேருஜியின் உலகம், அன்பு-சமாதானம் ஆகிய காந்தீயக் கொள்கைகளினால் ஊட்டம் பெற்று, வலுவடைந்து, விரிவு பெற்றிருக்கிறது. இதே நேரத்தில், தமிழகத்தைப் பொறுத்தமட்டிலே நேரு பிரானின் பணிகள் எந்த அமைப்பில் நடைபெற்றிருக்கின்றன, அவை பொது மக்கள் மனத்தில் எவ்வகையில் பதிந்து பிரதிபலித்து வருகின்றன, இதன் விளைவாக, வெவ்வேறு கட்சிகள் எப்படி எப்படி இயங்குகின்றன என்பதைப்பற்றியெல்லாம் மக்கள் திட்டவட்டமான ஒரு கருத்தைப் பெற்றிருக்கப் பழகி விட்டார்களென்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தின் தலை நகரில் ‘தேசிய ஒருமைப்பாடு’ மாநாடு நடந்தது, முடிந்தது. பெயரளவில் பெரிதாகத் தோன்றி, ஆனால், கொள்கை அடிப்படையில் குறுகிய உள்நோக்கம் கொண்டு இயங்கி முடித்திருக்கும் மேற்கண்ட மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தேசிய ஐக்கியப் பான்மையை வளர்த்துவரும் அமைப்புக்களுக்குக்கூட கிடைக்கவில்லை. இத்தகையப் பொதுவான குறைபாடுகளை விலக்கிக் காட்டும் வகையில், நேருஜியின் பேச்சு விளங்கியது, “இந்தியாவின் பொதுலிபியாக தேவ நாகரிலியியே என்றாவது ஒரு நாள் வந்தே தீரும்,” என்று பாரதத்தின் முதல்வர் பேசியிருந்ததை நாம் எவ்வாறு மறக்கமுடியும்? தாய்மொழியின் இன்றியமையாத் தன்மையைப்பற்றி அவ்வப்போது பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் மகான் காந்தியடிகள். அப்படியிருந்தும், நேருஜி எவ்வாறு பேசியிருக்கிறாரென்றால், நாம் மனம் வருந்தாமல் இருக்க முடியுமா? தேசிய இனங்களின் ஒற்றுமை, மா நாடு என்ற கூட்டுறவில் அந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தால், அந்தந்த மாநிலத்தின் தாய்மொழிக்குப் பாதுகாப்பும் வாழ்த்தும் அதிகாரபூர்வமாகக் கிடைத்திருக்குமோ அலிகார் வகுப்புப் பூசல் போன்ற சில்லறைச் சிக்கல்கள் நாணயமான முறையில் தவிர்க்கப்பட்டிருக்கவும் கூடுமல்லவா?

மதுரை மாநகரம் - புராணத்தலம் - திருவிளையாடல்களின் நாயகனாக சோமசுந்தரக் கடவுள் இயங்கியது போல, அத்திருவிளையாடல்களுக்கு அடித்தளமாக அமைந்தது ஆலவாய்ப் பெரு நகரான மதுரையேயாகும். இங்கேதான் காந்தி மகாத்மா - அரை நிர்வாணப் பக்கிரியாகவும் மாறினார்.

இத்தகைய பெருமை கொண்ட மதுரைநகர் தேசியப்பான்மையிலும் பெருமை கண்டது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி நடந்து முடிந்தது. தேர்தல் அண்டி வரும் நேரம் இது. இதற்குகந்த வழியில்தான், சடங்குகளும் பேச்சுக்களும் அமைந்திருந்தன. பல பலஹீனங்களும் பல தவறுகளும் இருந்த போதிலும், ஒருநாடு என்ற முறையில், இந்தியா உலகில் உன்னத ஸ்தானம் வகிக்கிறது. பிற நாட்டார் அதைக் கெளரவிக்கிறார்கள். அதற்கு மரியாதை செய்கிறார்கள். அதன் குரலுக்கு உலகில் இன்று செல்வாக்கு இருக்கிறது. இந்யதிாவின் உள்நாட்டு, சர்வதேசக் கொள்கையில் ஒரு நேர்மை இருப்பதே அனைத்திற்கும் காரணம்.” என்று மதுரை வரவேற்பில் நேருஜி குறிப்பிட்டார்.

நாம் பெருமைப்பட வேண்டிய செயல்தான். ஆனால் தமிழ் இனத்தவர் மன அமைதி கொள்ளுவதற்கான வகையில் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க இம்மாநாடு பூரணமாக முயற்சி செய்ததாகச் சொல்லமுடியாது!