உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்3.பிறப்பியல்-இளம்பூரணர் உரை

விக்கிமூலம் இலிருந்து

தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்

[தொகு]

இயல் 2. பிறப்பியல்

[தொகு]

இளம்பூரணர் உரை

[தொகு]

மூன்றாவது "பிறப்பியல்"

[தொகு]

நூற்பா: 83 (உந்திமுதலா)

[தொகு]
உந்தி முதலா முந்துவளி தோன்றித் ()                                     உந்தி முதலா முந்து வளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப் ()                       தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கு ()                                                             பல்லும் இதழும் நாவும் மூக்கும்
மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா ()                     அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
னுறுப்புற் றமைய நெறிப்பட நாடி ()                                           உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் ()                           எல்லா எழுத்தும் சொல்லும் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல ()                                            பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்படத் தெரியுங் காட்சி யான. ()                                           திறப்படத் தெரியும் காட்சி ஆன. (01)

நூற்பா: 84 (அவ்வழிப்)

[தொகு]
அவ்வழிப் ()                                                                         அவ் வழி்ப்
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா ()                            பன் ஈர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். ()                       மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.

நூற்பா: 85 (அவற்றுள்)

[தொகு]
அவற்றுள் ()                                                       அவற்றுள்
அஆ வாயிரண் டங்காந் தியலும். ()         அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.

நூற்பா: 86 (இஈஎஏ)

[தொகு]
இஈ எஏ ஐயென விசைக்கு () இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
மப்பா லைந்து மவற்றோ ரன்ன ()
வவைதா ()
மண்பன் முதனா விளிம்புற லுடைய. (04)

நூற்பா: 87 (உஊஒஓ)

[தொகு]
உஊ ஒஓ ஔவென விசைக்கு () உஊ ஒஓ ஔ என இசைக்கும்
மப்பா லைந்து மிதழ்குவிந் தியலும். (05) அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.

நூற்பா: 88 (தத்தந்)

[தொகு]
தத்தந் திரிபே சிறிய வென்ப. (06) தம்தம் திரிபே சிறிய என்ப.

நூற்பா: 89 (ககார)

[தொகு]
ககார ஙகார முதனா வண்ணம். (07)ககாரம் ஙகாரம் முதல் நா அண்ணம்.

நூற்பா: 90 (சகார)

[தொகு]
சகார ஞகார மிடைநா வண்ணம். (08) சகாரம் ஞகாரம் இடை நா அண்ணம்.

நூற்பா: 91 (டகார)

[தொகு]
டகார ணகார நுனிநா வண்ணம். (09) டகாரம் ணகாரம் நுனி நா அண்ணம்ழ

நூற்பா: 92 (அவ்வாறெ)

[தொகு]
அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின. (10)

நூற்பா: 93 (அண்ண)

[தொகு]
அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின் ()
நாநுனி பரந்து மெய்யுற வொற்றத் ()
தாமினிது பிறக்குந் தகார நகாரம். (11)

நூற்பா: 94 (அணரிநுனி)

[தொகு]
அணரி நுனிநா வண்ணமொற்ற ()
றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும். (12)

நூற்பா: 95 (நுனிநா)

[தொகு]
நுனிநா வணரி யண்ணம் வருட ()
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும். (13)

நூற்பா: 96 (நாவிளிம்பு)

[தொகு]
நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற ()
வாவயி னண்ண மொற்றவும் வருடவும் ()
லகார ளகார மாயிரண்டும் பிறக்கும். (14)

நூற்பா: 97 (இதழியை)

[தொகு]
இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். (15)

நூற்பா: 98 (பல்லிதழி)

[தொகு]
பல்லித ழியைய வகாரம் பிறக்கும். (16)


நூற்பா: 99 (அண்ணஞ்)

[தொகு]
அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை ()
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். (17)

நூற்பா: 100 (மெல்லெழுத்)

[தொகு]
மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் ()
சொல்லிய பள்ளி நிலையின வாயினு ()
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். (18)

நூற்பா: 101 (சார்ந்துவரி)

[தொகு]
சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் ()
தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றுந் ()
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி ()
யொத்த காட்சியிற் றம்மியல் பியலும். (19)

நூற்பா: 102 (எல்லா)

[தொகு]
எல்லா வெழுத்தும் வெளிப்படக்கிளந்து ()
சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் ()
பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் ()
தகத்தெழு வளியிசை யரிறப நாடி ()
யளவிற் கோட லந்தணர் மறைத்தே (20)

நூற்பா: 103 (அஃதிவணு)

[தொகு]
அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கும் ()
மெய்தெரி வளியிசை யளபுநுவன் றிசினே. (21)



பார்க்க:

[தொகு]
தொல்காப்பியம்-இளம்பூரணம்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம் சிறப்புப் பாயிரம்
தொல்காப்பியம்-இளம்பூரணர்உரை-எழுத்ததிகார முன்னுரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்1.நூன்மரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்2.மொழிமரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்4.புணரியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்5.தொகைமரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்6.உருபியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்7.உயிர்மயங்கியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்8.புள்ளிமயங்கியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்9.குற்றியலுகரப்புணரியல்-இளம்பூரணர் உரை