உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னெறி நயவுரை/வெளியீட்டாளர் உரை

விக்கிமூலம் இலிருந்து


வெளியீட்டாளர் உரை

எங்கள் தாத்தா மு. சின்னாத்தா முதலியார் அவர்கள் விடுதலை வீரராகவும் வள்ளலாகவும் விளங்கி வாழ்ந்தமை பலரும் அறிந்த செய்தி.

பொதுவாக மக்கள் - சிறப்பாகச் செல்வர்கள் வாழ வேண்டிய முறைக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்கள் இவர்கள்.

மகள்வழிப் பேரப் பிள்ளைகளாகிய எங்களிடம் பேரருள் செலுத்திப் பல்வேறு உதவிகளும் புரிந்து எங்களை ஆளாக்கி விட்டவர்கள் இந்தத் தாத்தா.

இவர்களின் பிரிவால் பெருந்துயர் கொண்டுள்ள நாங்கள் செய்வதறியாமல் திகைக்கின்றோம்.

எங்களின் கண்ணீர்க் காணிக்கையாக 'நன்னெறி நயவுரை” என்னும் இந்த நூலை வெளியிட்டு வழங்குகின்றோம்.

உரையாசிரியர் டாக்டர் சுந்தர சண்முகனார்க்கு எங்கள் நன்றி உரியது.

ச.ப. பாலசுப்பிரமணியன்
ச.ப. சட்டநாதன்
ச.ப. முருகவேள்

74, முத்தைய முதலியார் தெரு,
முத்தியால் பேட்டை, புதுச்சேரி - 3,
சுக்கில - சித்திரை - 1989.